(Reading time: 8 - 16 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

விளக்குக்கு எண்ணெய் விட்டாள். திரியைத் தூண்டி விட்டாள்.

  

இரண்டு மூன்று சின்னப்பையன்கள் பிள்ளையார் சன்னதியில் யாரோ உடைக்கிற சிதர்க்காயைப் பொறுக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். குருக்கள் தூணில் சாய்ந்தபடி யாரோடோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

  

பெரிய மனுஷாளாத்துப் பையன் ஒருத்தன் வேறு ஜாதிப் பெண்ணோட சிநேகமாக இருக்கிற சமாச்சாரமாக இருக்கவே, குருக்கள் உம் போட்டு அக்கறையாகக் கேட்டுக் கொண்டி ருந்தார். நடு நடுவில் "நமக்கேன்யா வம்புன்னு வேறே பேசிக்கொண்டிருந்தார்.

  

நர்மதா விளக்குச் சுடரில் அம்பாளைத் தீர்கமாகப் பார்த்தாள்.

  

"அடியே அம்மா! உன்னை எத்தனை தரம் சுத்திச் சுத்தி வந்திருக்கேன். எத்தனை பூ வாங்கிப் போட்டிருக்கேன். நல்ல ஆம்படையானா வருவான்னு இதோ உனக்குப் பூஜை பண்றாரே இந்த குருக்கள் மாமா எத்தனை தரம் சொல்லி யிருக்கா? இவர் சொன்னதும் பொய், நீயும் பொய்*

  

யாரோ ஒரு பக்தர் பாடிக்கொண்டே வந்தார்.

  

வந்தெனது முன் நின்று-மந்தாரமுமாக
வல்வினையை மாற்றுவாயே...
ஆரமணி வாளினுறை தாரைகள் போல நிறை
ஆதி கடவூரின் வாழ்வே...
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாணி அபிராமியே..

  

பூர்வ கல்யாணி குழைந்து குழைந்து தென்றலாக வீசியது. அம்பிகை மந்தகாச முகத்துடன் பக்தரைப் பார்த்தாள். நர்மதாவுக்கும் அவளுடைய சிரிப்பு புரிந்தது.

  

அவர் நகர்ந்தவுடன் மறுபடியும் இவள், "சிரிக்காதே! எதுக்கும் சிரிப்புதான். துன்பம், இன்பம், வாழ்வு, தாழ்வு எதுக்கும் சிரிப்பு தான். இப்ப உன்னால நான் பாவம் பண்ணிடுவேனோன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.