(Reading time: 8 - 16 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

அழுதையாக்கும். எங்கிங்டே மறைக்கிறே...அவன் ஒரு ரசனை கெட்ட ஜன்மம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?"

  

அவள் கீழேகிடந்த குச்சியால் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

  

"அதானே கோபம்?"

  

"ஊஹும்...

  

"பின்னே”

  

'அவர் எங்க இருந்தா என்ன?""

  

சாயிராமுக்கு சுவாரஸ்யம் தட்டியது.

  

"என்ன அப்படிச்சொல்றே. பணக்காரன். கனகாபிஷேகம் பண்ணியிருக்கான். கழுத்திலே, கையிலே, காதுலே பள பளன்னு போட்டுண்டு சாஷாத் அந்த அம்பாளாட்டமா ஜொலிக்கிறே..."

  

'ஐயோ! என்னைப்போய் அவளோட ஒப்பிடாதீங்கோ... நான் பாவம் பண்ணிய மனுஷ ஜன்மம். வெளியிலே பவித்ரமா இருக்கிறாப் போல இருந்துண்டு மனசால கெட்டுண்டு இருக்கேன்”

  

"அப்போ அவனைப் புடிக்கிலையா உனக்கு. ஏத்தவன் இல்லைதான். உனக்குப் புடிச்சவனா என்னை மாதிரி இருந்தா இப்படி தங்கமா இழைச்சுக்க முடியுமா? நல்ல புடவையா வேணா வாங்கித்தருவேன். நகை நட்டு, ஏ அப்பா! இந்த விலையிலே என்னாலே வாங்கிப்போட முடியுமா?"

  

நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தது.

  

"நகையும் நட்டும்" என்று முணு முணுத்தாள். அதற்கு மேல் குருக்கள் வரும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.