(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

விஷயங்களைப் பேசித் தீர்த்துவிடுவீர்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அந்தச் செய்தியைத் தாயினிடம் தெரிவிப்பதற்காக ஊஞ்சலில் படுத்திருக்கும் அம்மாவைத் தேடிக்கொண்டு போனார் அவர்.

நாத்தனார் வரப்போகிறாள் என்பது தெரிந்தவுடன் மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பாலம் எங்கே வர முடியாதென்று எழுதி விடுகிறாளோ என்று மங்களம் - கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். "கல்யாணத்தில் சம்பந்திகளைக் கவனிப்பது போல் தன்னையும் கவனிக்கவில்லை என்று பாட்டியிட மிருந்து புகார்கள் கிளம்பும். பாலம் வந்து விட்டாளானால், 'உன் அம்மாவின் வேலைகளை நீ கவனித்துக் கொள்' என்று அவளிடம் ஒப்படைத்துவிடுவேன். மாப்பிள்ளைக்கு ’அவளை முன்னாடி அனுப்பச் சொல்லிக் கடிதம் போட்டுவிடுங்கள்" என்று ராஜமையரைத் தினம் தொந்தரவு செய்துவந்தாள் மங்களம்.

பாலத்தின் கணவர் ஒரு வியாதிக்கார மனுஷர். நல்ல கல்வி ஞானமும், சம்பாதிக்கும் திறமையும் அவருக்கு . இருந்த போதிலும் ஆரோக்ய பாக்கியத்தை இழந்து சதா மருந்து சாப்பிட்டுக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே கடந்த ஏழு வருஷங்களாக அன்பைச் சொரிந்த தமையனையும், ஆசையுடன் பராமரித்த மதனியையும், தாயையும் மறந்து கணவனுடனேயே பிறந்தகம் வராமல் தங்கிவிட்டாள் பாலம், எட்டு மாதக் குழந்தையாக டில்லிக்குப் போன பத்மா இப்பொழுது எட்டு வயதுக் குழந்தையாக மாறி இருந்தாள்.

ஊரிலிருந்து அடுத்த நாள் காலையில் ராமசேஷவும், பாலமும், பத்மாவும் வண்டியிலிருந்து இறங்கிய போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்கள்.

"வாடி அம்மா பாலம்! வா அப்பா ராமு" என்று ராஜமையர் தங்கையையும் அவள் புருஷனையும் வரவேற்றார்.

பழக்கம் இல்லாத புது மனிதர்களைப் பார்த்து பத்மா, தாயின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். "பத்மாதானே இது? வாடி என் கண்ணே " என்று பாட்டி ஆசையுடன் பேத்தியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை வருடினாள்.

"மன்னி! நீதான் என்ன இவ்வளவு கிழவியாகிவிட்டாயே? மாப்பிள்ளை வருவதற்கு முன்னாடியே கிழமாகப் போய் விட்டாயே மன்னி!" என்று பாலம் சந்தோஷத்தில் சொன்ன வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.

இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷ மிகுதியில் நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டே பேசினர். நாத்தனாருடன் எவ்வளவோ பேசவேண்டுமென்று நினைத்திருந்த மங்களம் பிரமித்துப்போய் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்,

"என்ன அம்மா, அத்தையை விழுங்கிவிடுவதுபோல் பார்க்கிறாயே! அத்தை எந்தக் கடையில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.