(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

புத்தகத்தைக் கிழித்துப் போட்டிருக்கிறான். அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வந்து கேட்டால் நீ என்ன பதில் சொல்லு வாயோ எனக்குத் தெரியாது அம்மா' என்று கூறியவாறு அந்த நோட்டுப் புத்தகத்தை வீசிக் கூடத்தில் எறிந்து விட்டுப் போனாள்.

  

கீழே கிடந்த நோட்டுப் புத்தகத்தையும், பாலுவையும் மாறி மாறிப் பார்த்தாள் பவானி. அவனுடன் அவளுக்குப் பேசவே பிடிக்கவில்லை. கண்ணியமும் கௌரவமும் வாய்ந்த டாக்டர் வீட்டாருடன் இவனால் விரோதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினாள்.

  

நெஞ்சிலே நிறைந்திருந்த கவலையும் பயமும் அவளுக்கு ஒரு வித அசட்டுத் தைரியத்தை அளித்தன. கிழிந்த அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு டாக்டர்

  

ஸ்ரீதரன் வீட்டை நோக்கி நடந்தாள்.

  

அன்று அதிகாலையிலேயே ஸ்ரீதரன் வெளியே போய் விட்டார். ராதாவும் அன்று மாலை நடக்கவிருந்த டிராமாவுக்கா ஏற்பாடுகள் செய்வதற்காக வெளியே சென்றிருந்தாள்,

  

வீட்டுக் கூடத்தில் சுவாமிநாதன் மட்டும் உட்கார்ந்திருந்தார். ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போவதற்காகக் கிளம்பி வந்தவள், பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். பிறகு, "வீட்டிலே யாருமே இல்லையே, அத்தை ராதா கூட வெளியே போயிருக்கிறாளே" என்று தெரிவித்தான்.

  

பவானி ஆசையுடன் அந்தக் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டாள். வருத்தம் நிறைந்த குரலில் ”ஜெயஸ்ரீ! பாலு ஒரு தவறு செய்து விட்டான். சுமதியோடு சண்டை பிடித்துக் கொண்டு உன் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து வட்ட்டானம்மா...." என்றாள்.

  

ஜெயஸ்ரீக்கு வருத்தமாகத்தான் இருந்தது . இருந்தாலும் அந்தப் பெண் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ”பரவாயில்லை. அதனால் என்ன? வேறு யாரிடமாவது வாங்கி எழுதிக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவசரமாகப் போய்விட்டாள்.

  

அப்போது சுவாமிநாதன் வெளியே வந்தார். யாரை பார்க்க வேண்டும்? டாக்டர் வெளியே போயிருக்கிறார். ராதாவும் வீட்டில் இல்லை" என்று கூறியபடி பவானியைக் கவனித்தார் அவர்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.