(Reading time: 9 - 18 minutes)
Muthu Sippi
Muthu Sippi

கோமதிக்கு ஆத்திரம் வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், "டிராமாவுக்குப் போகலாமா என்றேன்?" என்றாள்.

  

"ஓ! பேஷாய்ப் போயேன். நான் வெளியே போக ’டாக்ஸி' வைத்துக் கொள்கிறேன்."

  

இல்லை ........ நீங்களும் வாருங்களேன் என்னோடு!" என்றாள் கோமதி முகத்தில் வெட்கம் படர.

  

பார்த்தாயா? என்னைப் போய்க் கூப்பிடுகிறாயே எனக்கு ’பிஸினஸ்' விஷயமாய் ஒருத்தரை ஹோட்டல் ’பிரகாஷில்' இன்று இரவு எட்டு மணிக்குச் சந்தித்தாக வேண்டும், முன்னாடியே போய்ப் பார்த்தாலும் தேவலை."

  

கோமதிக்கு முன்பு அடங்கிப் போன ஆத்திரம் மீண்டும் கிளம்பியது .

  

உங்களுக்கு என்றைக்கும் தான் 'பிஸினஸ்" இருக்கிறது! அப்படி என்ன முழுகிப் போகிறதோ தெரியவில்லை. சம்பாதித்த மட்டும் போதுமே" என்று கூறி விட்டு அருகில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

  

"நோ, நோ, கோமதி! உனக்கு வியாபார விஷயம் எல்லாம் தெரியாது, ஒரு நிமிஷம் அருந்திருந்தாலும் போச்சு!"

  

போகட்டும் போங்கள்! நான் இந்தத் தடவை சாகப் பிழைக்க ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பிழைத்து வீட்டுக்கு வந்த நா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்கு. உடம்பு தேறட்டும் என்று இருக்கிறேன். நீங்கள் வந்து தான் ஆக வேண்டும்......"

  

என்னதான் பணத்துக்கு அடிமையாக இருந் தாலும் அவனால் மனைவியின் இந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.

  

அரை மனத்துடன் நாடகத்துக்கப் புறப்பட்டான் நாகராஜன். சுமதி முன்னதாகவே ஜெயஸ்ரீயுடன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.