(Reading time: 9 - 18 minutes)
Muthu Sippi
Muthu Sippi

போய் விட்டாள். அவள் பாலகிருஷ்ணனாக டிராமாவில் நடிக்க வேண்டும்.

  

ஒரு டிக்கெட் வீணாகப் போகிறதே. பவானி நீ வருகிறாயா அம்மா!" என்று கேட்டான் நாகராஜன்.

  

நாடகத்துக்கா? வேண்டாம் அண்ணா நீயும் மன்னி யும்போய் வாருங்கள். கோபாலன் எனக்குத் துணை இருப்பதாகச் சொல்லுகிறான். அவன் மனைவியும் இங்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்" என்றாள்.

  

உம்...சரி...பாலு எங்கே? அவனாவது வரட்டும்!" என்றான் நாகராஜன்.

  

பாலுவா?" என்றாள் கோமதி கோபத்துடன். அவள் முகம் கோபத்தால் சிவந்தது.

  

"அவன் ஒருத்தர் எதிரிலும் வரமாட்டான். அவள் காலையில் பண்ணின விஷமத்துக்கு டிராமா ஒன்றுதான் அவனுக்குக் குறைச்சலாக இருக்கிறது!"

  

நாகராஜன் லினன் ஸ்லாக் ஷர்ட்டை உதறிப் போட்டுக் கொண்டு . ’ சரி நீயாவது சீக்கிரம் கிளம்பு' என்றான் அலுப்புடன். இருவரும் காரில் ஏறிக் கொண்டு நாடகம் பார்க்கப் புறப்பட்டார்கள்.

  

மாடி வராந்தாவில் நின்று தன்னை நாடகத்துக்கு அழைத்துப் போகாமல் வெளியே செல்லும் தன் மாமா மாமியைக் கவனித்தான் பாலு அந்தப் பிஞ்சு மனத்திலே ஏமாற்றம், ஏக்கம், துக்கம் முதலியவை நிறைந்திருந்தன. கண்களிலிருந்து வழியும் கண்ணீருடன் தொலைவில் செல்லும் காரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பாலு. நோட்டுப் புத்தகத்தைக் கிழித்ததை ஜெயஸ்ரீ பொருட் படுத்தவில்லை. 'பாலு! நீ டிராமாவுக்கு வருவாயில்லையா?' என்று அவனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்லும் பொழுது கேட்டாள். ஆனால் பெரியவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள். ஒரு குழந்தை செய்த அற்பத் தவறை மகத்தானதாக நினைத்துப் பெரிதாக்க அதற்கு தண்டனையும் அளித்து விட்டார்கள்.

  

பவானியின் மனமும் வருந்தியது. 'தனக்கெதற்கு நாடகமும் இன்னொன்றும்? வாழ்க்கையிலே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.