(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அன்று தான் ராதாவுக்குக் குடும்பம் என்றால் என்ன என்பது புரிந்தது. அடுப்பங்கரையில் பாதிச்சமையல் அப்படியே கிடந்தது. உள்ளே சென்ற ராதா பிரமித்து நின்றாள். ஒருவழியாகச் சமையலை முடித்துப் பாலைக் காய்ச்சி வைப்பதற்குள் அவளுக்குத் திணறி விட்டது.

  

சூடான பாலை டம்ளரில் எடுத்து வந்து சுவாமிநாதன் அருகில் வந்தாள். அவர் அப்போது தான் கண் விழித்திருந்தார். அருகில் வந்து நிற்கும் ராதாவைப் பார்த்தார் அவர்.

  

"என்னம்மா இது?" என்று கேட்டுக் கொண்டே மெள்ள எழுந்தார். ராதா அவர் அருகில் உட்கார்ந்தாள்.

  

"ஒன்றுமில்லை. இந்தப் பாலைச் சாப்பிடுங்கள். நீங்கள் எழுந்திருந்து ஒன்றும் செய்ய வேண்டாம்.”

  

நீயாகவே எல்லா வேலைகளையும் செய்தாயா? உனக்கு வழக்கமில்லையே அம்மா..."

  

வழக்கப்படுத்திக் கொண்டால் வருகிறது ...."

  

'ராதாவா இப்படிப் பேசுகிறாள்!' என்று வியந்தார் அவர்.

  

இதற்குள் டாக்டர் ஸ்ரீதரன் அங்கு வந்தார். அடுத்த நாளிலிருந்து வேறு ஒருவர் வீட்டுக்கு வருவதாகவும், எல்லா வேலைகளையும் அவரே செய்து விடுவார் என்றும், சுவாமிநாதன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.

  

சுவாமிநாதன் அந்தக் குடும்பத்தினரின் அன்பைக் கண்டு வியந்தார். தம்மிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பின் ஆழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே மெய்ம்மறந்திருந்தார் அவர்.

  

அன்றிரவு எட்டு மணிக்கு மூர்த்தி காரியாலயத்திலிருந்து வீடு திரும்பினான், மாடிக்குச் சென்று அவசரமாகத் தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டான். முகம் கழுவி, தலையை வாரி. மறுபடியும் உடுத்திக் கொண்டிருக்கும் போது ராதா மாடிக்கு வந்தாள். கணவன் எங்கோ போபதற்குத் தயார் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ”எங்கே புறப்படு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.