(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

கொண்டிருப்பானாம். 'வந்து விட்டீர்களா? எங்கே என் மேல் கோபித்துக் கொண்டு , வராமல் இருந்து விடுவீர்களோ என்று பயந்தேன்! ' என்று கேட்டுக் கொண்டே எழுவாளாம் ராதா. அப்புறம் அவனுடன் இல்லறம் நடத்துவது. அதன் பிறகு இடுப் பிலே ஒரு தங்கக் குழந்தை !

  

ராதா புன் முறுவல் பூத்துக்கொண்டே கண் விழித்தாள். நினைக்கும் போது இனிக்கும் நினைவுகள் நடக்காமற் போனால் கசக்கத் தானே செய்யும்?

  

அவள் எதிரில் வெற்று நாற்காலி கிடந்தது. பல இரவுகள். அநேக நாட்கள் அந்த நாற்காலிக்கு வேலையே இல்லை. மூர்த்தி அதில் தான் உட்காருவான். அவன் வெளியூர் போன பிறகு அதில் யாருமே உட்காரு வதில்லை. கணவன் திரும்பவும் அதில் வந்து உட்கார வேண்டும் என்று அந்தப் பேதைக்கு ஆசை.

  

கீழே இறங்கி வந்து தன் அலுவல்களை முடித்துக் கொண்ட ராதா. சுவாமி நாதனின் இருப்பிடத்துக்கு வந்தாள். அந்தக் கிழவர் அன்று என்றுமில்லாத உற்சாகத்துடன் காலையி லேயே குளித்து விட்டு, திருநீறு அணிந்து உட்கார்ந்திருந்தார்.

  

என்ன இதற்குள்ளாகவே குளித்து விட்டீர்களா?'” என்று விசாரித்தவாறு ராதா அவர் அருகில் சென்று அடர்ந்தாள்.

  

குளித்து விட்டேன் அம்மா. நேற்றிலிருந்து எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது..."

  

அப்படியா? என்ன அது?"

  

இந்த உடம்பை இத்தனை காலம் காப்பாற்றியாகி விட்டது. ஜலதோஷம் பிடித்தாலும் ஆயிரம் மாத்திரைகளை விழுங்கி உயிரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தாயிற்று. அதைப் பற்றிக் கவனிக்கவே உன் அண்ணன் இருக்கிறார். உள்ளத்துக்கு ஒரு வைத்தியனைத் தேட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அவனை இனிமேல் நினைத்து அதற்கு வேண்டியதைச் செய்து கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடுவதைக் கூட நேற்றிலிருந்து நிறுத்தி விட்டேன் அம்மா..." என்றார் அவர்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.