(Reading time: 12 - 24 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 17 - சு. சமுத்திரம்

ரு வாரம், சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது.

எதிரிகள் ஒட்டு மொத்தமாகச் சேரும்போது, அவர்களில் மிகவும் ஏலாத ஏழை மீது தான், அதிகமாகக் கோபம் வரும் என்பார்கள். இதுபோல், வீட்டுக்காரிக்கும், ஊசிப்போன இட்லிபோல் தோன்றும், ‘இட்லி ஆயா’, தங்கம்மா மீதுதான் அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது. சமயத்தை எதிர்பார்த்திருந்தாள்.

அந்த வீட்டின் வெளித் திண்ணையில், ஆயா கடை போட்டிருந்தாள். கரிப்புகையாலேயே கறுத்துப் போன ஒரு ஸ்டவ் அடுப்பில் நெருப்பு மூட்டி, வாணலியில் உளுத்தம் பருப்பு மாவை, பிடித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவை, ‘கடுக்கண்கள்’ கழட்டப்பட்ட காதுகள் மாதிரி, ‘மெது’ வடைகளாக மலர்ந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே சுடப்பட்ட இட்லிகள், ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் வளைவில் கட்டப்பட்டிருந்த கோணி, பாதி தூரம் தொங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து கண்ணாடிப் பாத்திரங்களில் பல்பம், நிலக்கடலை மிட்டாய் போன்ற வகையறாக்கள் நிரம்பி இருந்தன. சில பெண்கள் இட்லிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருசில சிறுவர்கள், வேர்க்கடலை மிட்டாய்களையும், கையில் இருந்த காசுகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் எட்டு மணிக்கு எழும் வீட்டுக்காரி, அன்று சீக்கிரமாக துயில் கலைந்திருக்க வேண்டும். திண்ணைக்கு அருகே வந்து, அதனுடன் ஒட்டிப் போட்டிருந்த கம்புத் தூணைப் பிடித்துக் கொண்டே, முதலில் செருமினாள். ஆயா, திரும்பிப் பார்த்ததும் கர்ஜித்தாள்.

ஆயா... ஒன்கிட்ட எத்தன தடவ சொல்றது... போன வாரமே... இனுமேல் திண்ணையில்... கடை போடப்படாதுன்னு சொன்னோமுல்ல? ஒன் செவிட்டுக் காதுல விழலியா... நான் சொல்லியும்... திண்ணையை பிடிச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தமின்னேன்... ஒன்னால திண்ணையக் காலி பண்ண முடியுமா... முடியாதா? எனக்கு இப்போவே தெரியணும்...”

ஆயா, அவளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். மலர்ந்த வடைகள் வாணலியில், கருகிக் கொண்டிருந்தன.

ஒன்னத்தான்... சொல்றது காதுல விழல? ஒனக்குல்லாம் சொல்றதோட நிறுத்திக்கிறது தப்பு...”

ஆயா மன்றாடினாள்.

குயந்தே... நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே போட்ட கடை குயந்தே... ஒனக்குக் கூட அப்போ ஓசில வடை தந்திருக்கேன் குயந்தே... ஒன் நயினா... இந்த வீட்டை வாங்குமுன்னால... இருந்த புண்ணியவான் தான்... நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு, ‘தங்கம்... பேசாம திண்ணையிலேயே... இட்லி வடை போடு... நீ போட்டால்... திண்ணையிலே வழக்கமா உட்காருற ரௌடிப் பசங்களையும் பகைக்காமலே விரட்டிப்பிடலா’முன்னு சொல்லி

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.