(Reading time: 17 - 33 minutes)
Vata malli
Vata malli

கொண்டிருக்கிறாள். முதல் செய்தி பிள்ளையார் வீட்டுக்குத்தான்...

  

மரகதம் துணுக்குற்று நின்ற சந்திராவை முடியைப் பிடித்துக் கீழே தள்ளினாள். அந்த முடியின் பிடியை விடாமலே, அவளை அங்குமிங்குமாய் இழுத்தாள். அப்படியும் ஆவேசம் தணியாத காளியாய், அவளைத் தூக்கி நிறுத்தி, முகத்தில் காறிக் காறித்துப்பினாள். அவளை மல்லாக்கத் தள்ளிவிட்டு, மறுபடியும் முடியைப் பிடித்து, இழுத்து, புடவை கட்டிய தம்பியின் பக்கம் தள்ளிவிட்டு, ஆவேசம் குறையாமல் ஆணையிட்டாள்.

  

என்னடி, நெனச்சுக்கிட்டே... ஒருத்தன் லேசா கெட்டுப் போயிட்டால், அவன ஒரேயடியாக் கெடுத்துட ணுமா. இப்ப அவன் காலத் தொட்டுக் கும்பிட்டு அவன் கட்டியிருக்கிற புடவைய உரிந்து... நல்லா மடிச்சுத் தரணும். இல்லாட்டால் நீ இந்த இடத்துல இருந்து, ஒரு அடி நகர முடியாது...”

  

நீங்க மட்டும் எங்க அண்ணிய கேவலமாக்கலாமா. அவங்க இவன பேயாய் பிடிச்சிருக்கறதாயும், ஒங்ககிட்ட புடவை யாசகம் கேட்டதாயும் எப்படி கேவலப் படுத்தலாம்? இவன்கிட்ட துணிகளைக் கொடுத்து, எப்படி அனுப்பலாம். ஒருத்தி செத்த பிறகும், அவளை பழைய படியும் சாகடிக்கணுமா...”

  

மரகதத்திற்கு, மனம் கேட்கவில்லை. அவள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் உள்ளது. சுயம்புவுக்கு ஒரு நீதி, சீதாலட்சுமிக்கு இன்னொரு நீதி என்று இருக்க முடியாது. கைகளைப் பிசைந்தாள். அப்போது, தாய்க்காரி வெள்ளையம்மா ஒரு உண்மையைக் கண்டுபிடித்தது போல் கீழே குனிந்தாள். குனிந்தபடியே ஒன்றுவிட்ட நாத்தினார் பூவம்மாமீது மண்ணை வாரி வாரி வீசினாள். இப்போது அவள் உடம்பே மண் நிறமானது. வெள்ளையம்மாவின் கை இப்படி இயங்கிக் கொண்டிருக்கும்போதே, வாயும் இயங்கியது.

  

அடுத்துக் கெடுத்தவளே! குடியக் கெடுத்தவளே! ஒம்புத்தியக் காட்டிட்டியேடி! இந்தப் பாவி மனுஷன் கிட்ட இருந்த பகைக்கு, பழி வாங்கிட்டியேடி சண்டாளி! இங்கயும் சொல்லிக் கொடுத்து, அங்கயும் சொல்லிக் கொடுத்து, எங்கள கேவலப்படுத்திட்டியேடி! நீ உருப்படுவியாடி! ஒன் வீட்டிலயும் இப்படி ஒண்னு முடியாதா...? கைகேயி கூனி! நீலி!”

  

பூவம்மா, வெள்ளையம்மா போட்ட மண் துகள்களை மாரியாத்தா போட்ட அம்மைபோல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.