(Reading time: 10 - 20 minutes)
Vata malli
Vata malli

கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பொறுப்பு. யாரையும் உள்ள விடக் கூடாது. டேவிட் வந்தாலும்கூட. டேவிட் நீங்க வருவீங்களா... அக்காகிட்ட ஓடிப்போய் டேவிட் லெட்டர் போட்டாரான்னு கேட்கலாமா... வேண்டாம், அக்கா தப்பா நினைப்பாள். சந்தேகப் படுவாள்...

  

சுயம்புவிற்கு டேவிட்டை நினைக்க நினைக்க பாலை வனம், பசுஞ்சோலையானது. கண்கள் தானாய்க் குளிர்ந்தன. பற்கள் உதடுகளைத் தேனாய்க் கவ்வின. அந்த அறையை அவன் உற்றுப் பார்த்தான். அதோ அக்காவின் நிச்சயதாம்பூலப் புடவை. டேவிட்டுக்குப் பிடித்த வெளிர் மஞ்சள் கலர்.

  

சுயம்பு சிறிது யோசித்தான். ஆனாலும் டேவிட்டை நினைக்க நினைக்க அவன் உடம்பை அடக்கிய ஒன்றை, அடக்கப்பட்ட ஒன்று அடித்துப் போட்டு விட்டது மாதிரி தோன்றியது. அடக்கப்பட்ட மண்ணின் மைந்தர்கள், பீறிட்டு எழுந்தால் எப்படியோ அப்படி, சிவனே என்று உள்ளே கிடக்கும் தீக்குச்சி உரசப்பட்டால் எப்படி ‘சக்தி’ வெளிப்படுமோ... அப்படி... கதவைச் சாத்திக் கொண்டான். தாளிட்டால் தப்பாய் நினைப்பார்கள். கொஞ்சநேரம் வரைதான். அக்காவும் அவள் பட்டாளமும் உதிரமாடன் கோயிலுக்குப் போய்விட்டு வீடு திரும்ப அரைமணி நேரம் ஆகும். இது பத்து நிமிட வேடம்.

  

சுயம்பு புடவையை மட்டும்தான் கட்ட நினைத்தான். ஆனாலும், அந்தப் பாவாடை, அது உடம்பில் பட்டாலே ஒரு சுகம். பாண்டுக்கு மேலே கட்டிக்கொண்டான். ஜாக்கெட் இல்லாத ஒரு பாவாடையா... பிரா இல்லாத ஒரு ஜாக்கெட்டா. சுயம்பு பெண்ணாகி விட்டான். பீரோ கண்ணாடியைப் பார்த்து குங்குமமிட்டுக் கொண்டான். அப்படிக் குங்குமம் இட்ட தன் சொந்தக் கையையே டேவிட்டின் கையாகப் பாவித்துக் கொண்டான். வளையல் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் நோட்டமிட்டான். அதற்குள்...

  

அந்த அறையின் கதவு ஒரேயடியாய் திறக்கப்பட்டது. ஒரே பெண் பட்டாளம். வெளியூர் வாடை ஆனந்தக் கூத்தாய்ப் பேசினார்கள். ‘பொண்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கே, அண்ணன் கொடுத்து வச்சவரு. ஆனால் தலை ஏன் இப்படி மொட்டையாய். முடி ஏன் அப்படி?’ ஒருத்தி கேட்டாள். “மயினி கொஞ்சம் பின்னால திரும்புங்க!”

  

சுயம்பு அப்படியே திகைத்து நின்றான். மலைப் பாம்பின் கொலைகாரக் கண்ணுக்குக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.