வாடிக்கை..."
"பின் அங்கேயே போய் 'ஆர்டர்' கொடுக்கலாமாடி?"
கொண்டையை அவிழ்த்து, பின்னலைப் போட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முக ஒப்பனை - திருத்தம் முடித்து அவள் கிளம்ப மேலும் அரை மணியாகிறது.
"இவதான் யமுனா; எம்.ஏ. பாலிடிக்ஸ் - காந்தி நூற்றாண்டுக்காக இங்கெல்லாம் பேச வந்திருக்கா. என் 'கஸின்' - இவ ரேகா, இவ சுமி, இவ மிருணா..." என்று யமுனாவையும் தோழிகளையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறாள் நீரு.
ரேகா யமுனாவிடம் "நீங்க வேலையாயிருக்கிறீர்களா?" என்று கேட்கிறாள்.
"அதான் சொன்னேனேடி காந்தி ஆசிரமம். இப்பக் கூட்டங்களில் பேசுவது முழு வேலை. இமாசலம் போக வேண்டிய சாது போலக் கதர் தவிர உடுத்த மாட்டாள். ரிக்ஷா ஏற மாட்டாள். நகை... மூச்சு விடக்கூடாது; இவளுக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்கடி?"
"ஒரு முப்பது இருக்கும்னு நினைச்சேன்..."
"இல்லே, இருபத்தஞ்சு..."
"சுத்த மண்டுகள்டீ! இவ நாலட்ஜ் நாப்பது ஐம்பதுன்னு கூடச் சொல்லும். ஆனா என்னைவிட ரெண்டு மாசம் சின்னவ..."
"ஆ..." என்று எல்லாரும் வாயைப் பிளந்து கொண்டு அவளைப் பார்க்கின்றனர்.
"உங்க 'கிளப்'பில் வந்து ஒரு நாள் நான் பெண்களுக்கு காந்தி சொன்னதைப் பற்றிப் பேசட்டுமா நீரு?"
"ஏய், ஐடியா! நாமும் நூற்றாண்டு கொண்டாடலாம்! ரேகாவின் தங்கை டான்ஸ் ஆடத் துடியாய்த் துடிக்கிறாள். ஊர் முழுதும் கூட்டி அமர்க்களம் பண்ணி விடலாம். அவளும்