(Reading time: 14 - 27 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

"இல்லை அம்மா!'' கொஞ்ச நாட்களாகத்தான்.... இப்படி...?”

யாராவது டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்வது தானே? ஆமாம்... உன்னுடைய அப்பாகூட ஊரில் இல்லை போலிருக்கிறதே எப்போது வருகிறார்?... நான் வேண்டுமானால் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகட்டுமா? என்று பேச்சுக்கிடையில் தான் கேட்கவேண்டிய கேள்வியை வெகு சாமர்த்தியமாகத் திணித்துவிட்டாள் பார்வதி.

"ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். இப்போது எனக்கு முன்னளவு தலைவலி இல்லை. வீட்டுக்குப் போய்ச் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்” என்றாள் பாரதி.

"ராஜா வரட்டும்; உன்னைக் காரில் கொண்டு விடச் சொல்லுகிறேன்" என்று பார்வதி சொல்லி வாய் மூடவில்லை.

வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. அதை அடுத்து ஒரு சீட்டிக் குரல், தொடர்ந்து வருவது ராஜாதான் என்பதை அறிந்து கொண்ட பாரதியின் உள்ளத்தில் குதூகலம் பொங் கியது.

"ராஜா! உனக்கு ஆயுசு நூறுடா” என்றாள் பார்வதி.

''என்ன அத்தை ! நான் வாலிபனாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா? என்னை குடு குடு கிழவனாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறதா?”

பார்வதி சிரித்துக் கொண்டே “ஆமாம்; நீ கிழவனாக ஆனால் வேடிக்கையாகத்தான் இருக்கும். சரி; பாரதிக்குத் தலை வலிக்கிறதாம். அவளைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வா... ”

'சரி, அத்தை!'' என்று சந்தோஷமாகத்தான் பதில் கூற வாயெடுத்தான் ராஜா. ஆனால் தனக்கு அந்த வேலையைச் செய்வதில் இஷ்டமில்லாதது போல் அத்தையிடம் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ”இதுவே எனக்குப் பெரிய வேலையாகப் போய்விட்டது. பாரதி வீட்டு டிரைவராகவே ஆகிவிட்டேன்” என்று முணுமுணுத்த படியே பாரதியைக் கடைக் கண்ணால் கவனித்தான்.

வானத்தில் வீட்டுக் கூரைக்கு மேலே அப்போதுதான் ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சத்தத்தில் ராஜா கூறிய வார்த்தைகள் பார்வதியின் காதில் விழவில்லை.

என்னடா சொல்கிறாய்?'' என்று கேட்டாள் அத்தை.

ரேடியோவில் இன்று எனக்குக் குவிஸ் புரோகிராம்' இருக்கிறது அத்தை! ஆகையால் நான் திரும்புவதற்கு லேட்டாகும்'' என்றான் ராஜா.

''சரி சரி, சீக்கிரம் வந்துவிடும்” என்று சொல்லி அனுப்பினாள் பார்வதி.

பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அமைதியின்றித் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். சேதுபதியின் நினைவு முகத்தை அவளால் மறக்க முடியவில்லை.

குருவி ஒன்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. தன் கூட்டுக்குள் போய்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.