(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - கானல் நீராய் ஒரு காதல் - காயத்ரி

Love

ணமேடையில் இருந்தவளின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தன.... இதோ இன்னும் சில நாட்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்...... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது…..இந்த நிச்சயதார்த்தம் நடக்க கூடாது என்று நொடி பொழுதும் எண்ணி கொண்டிருந்தவள் கண்ணில் கண்ணீர் துளிகள் சிதறின.

படபடக்கும் நிமிடங்கள்

ஏன் இந்த நிலைமை சில வருடங்கள் முன்னால் சென்று பார்ப்போம்   

ரண்டு வருடம் ஒரு சாதாரண நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தாள். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. அன்று முதல் நாள். அலுவலகம். அவளோ மாநிறம் மஞ்சள் நிற உடை அதற்கு ஏற்ற ஒப்பனை கடவுள் முன் பக்தி உடன் வேண்டி கொண்டு இருந்தாள். இந்த நிறுவனம் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று.

முதல் நாள் வேலை மிக எளிதாக இருந்தது ஆறு மாதங்கள் சென்றன.

 கண்டதும் காதல் என்பது என்ன என்று புரிந்து கொண்டாள். உடன் பணிபுரிந்த சாப்ட்வேர் புரோகிராமர். தென் மாவட்டத்தை சேர்ந்தவர். பார்த்ததும் பிடித்து விட்ட முகம். நிறத்திற்கு ஏற்ற பெயர். காதல் வந்தவுடன் அவளே சென்று சொன்னாள். அவனும் அவளுடைய காதலை ஏற்று கொண்டான் உயிருக்கும் மேலாக நேசித்தாள் எந்த ஒரு நிலையிலும் அவனை இழக்க கூடாது என்ற எண்ணத்துடன். அவனுக்கு ஏற்ற காதலியாகவும் அவளுக்கு ஏற்ற காதலனாகவும் இருந்தனர். இருவரும் கனவு உலகத்த்தில் பயணம் செய்தனர். சக பணியாளர்களிடம் இருந்து எவ்வளவோ தடைகள் வந்தன. இருவரின் நெருக்கத்தையும் பார்த்தவர்கள் அவளை மட்டும் குறை கூறினார்கள் அவள் மிகவும் துணிச்சலானவள். இருவரின் காதலையும் சக பணியாளர்களிடம் கூற வேண்டும் என்று வற்புறுத்தினாள். ஆனால் அவன் நேரம் வரும் போது சொல்லலாம் என்று தடுத்து விட்டான். நாட்கள் சென்றன. காதல் மட்டும் குறையவில்லை. மற்றவர்களின் பேச்சும் குறையவில்லை       காதலுனுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டாள். தன் பெற்றோர் மீது கொண்ட பாசத்தை அவனிடமும் காட்டினாள். காதலுக்கு வசதி பணம் ஏதும் தேவை இல்லை என்று அவன் மேல் மிகுந்த அன்பு கொண்டாள். தான் கனவில் கண்ட ஒருவனை சந்தித்தாக நினைத்தாள். தன் குடும்பத்தாரிடம் நண்பன் என்று அறிமுக படுத்தினாள். அவர்களின் நட்பை பாராட்டினார். அவனும் அவள் குடும்பத்தினரிடம் நெருக்கமாக பழகினான்

மூன்று வருடங்கள் சென்றன

அவளுக்கு திருமணம் செய்து வைக்க பார்த்து கொண்டிருந்த சமயம். அவனிடம் சென்று அவன் குடும்பத்தில் பேச சொல்லி அனுப்பி வைத்தாள். நேரடியாக சொல்ல தயங்கியவன் அவளுடைய ஜாதகத்தை வீட்டில் கொடுத்து பார்க்க சொன்னான். அவர்களும் பார்த்தார்கள் பொருத்தம் இல்லை என்று நிராகரித்தார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு செய்தி வந்தது. அவனுக்கு வேறு பெண் உடன் நிச்சயம் செய்ய பேசிவிட்டார்கள் என்று. இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த வாரம் ஊருக்கு சென்றான். வீட்டில் ஒரு பெரிய சண்டையை நிகழ்த்திவிட்டு வந்தான். அவள் வேண்டும் என்று அல்ல. அவர்கள் பார்த்த பெண் பிடிக்கவில்லை என்று. மீண்டும் அலுவலகத்தில் சந்தித்தனர். எவ்வளவு கூறியும் கேட்டகவில்லை. அதனால் திருமணத்திற்கு சம்மதித்தேன் என்று சொன்னான்.

தன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தாள். தன் உயிரினும் மேலான தன் காதலன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையா என அதிர்ந்தாள்.

தன் காதலின் ஆழத்தை உணர்த்த முயன்றாள் ஆனால் அவனோ அவளை பற்றி துளி கூட நினைக்கவில்லை. அவனுடைய எண்ணம் எல்லாம் அவனுக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என்பது மட்டுமே. ஆனால் அவள் விடவில்லை. தன் காதலின் வலிமையை உணர்த்தினாள். இனி ஒன்றும் செய்ய முடியாது நல்ல நண்பர்களாக இருப்போம் என்றான். அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. தன் கையை பிடித்து வழித்துணையாக வருவான் என நினைத்தவன் கைகுலுக்கி விட்டு சென்று விட்டான். அவன் திருமணத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வேண்டுகோள். அவனை நண்பனாக ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாத மனசு. அவன் திருமணத்தை பார்ப்பதை விட உயிரை விடுவதே மேல் என்று நினைத்தாள். ஒரு கணம் தன் பெற்றோரை நினைத்தாள் கண்ணீர் பொங்கி வழிந்தது. தனக்கு தெரிந்த ஜோதிடரிடம் இருவரின் ஜாதகத்தை பார்த்தாள் பொருத்தம் இருந்தது. அப்படியானால் காரணம் என்ன - ஜாதி மற்றும் பணம்.

இருவரும் வெவ்வேறு ஜாதி. அவனுக்கு பார்த்த பெண் வீட்டில் பண வசதி. அவர்களை பிரிக்க வேறு காரணம் தேவையில்லை

அவன் திருமணத்தில் மணப்பெண் தோழியாக அருகில் இருந்தவளின் கதை தான் இது

இன்று தனிமையில் அவள்

மணமேடையில் அவன்

யாரிடமும் சொல்லாத அவள் காதல் அவள் மனதுக்குள் புதைந்து விட்டது.

அவள் தலையணை ஈரம் சொல்லும் அவள் காதல் எவ்வளவு உண்மை என்று

என்றும் அவன் நினைவுடன் அவள் காதல் பயணம் செய்யும் தனிமையில்.    

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.