(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - என்னை அறிந்தேன் - ஷாலினி

hearts

ஜானு எனக்கு ரெம்ப பதட்டமா இருக்கு. நீயும் என்கூட வா.

நானா நான் எப்படி ராஜ்? நீ தைரியமா போ குட் லக். வாய் சொல்லி விட்டது மனமோ ஊமையாய் கண்ணீர் விட்டது. ராஜ் நீ என்னோடவன் என்கிட்டவே இன்னொரு பொண்ண பிரபோஸ் பண்ணப் போறேண்ணு சொல்றியே. அப்படினா நான் உன்னோட தோழி மட்டும் தானா.

ஏன் ராஜ் இவ்வளவு நாள் கிட்ட இருந்தும் என் மனது புரியலையா? ஆனால் உன்னையும் நீ புரிஞ்சுக்கலை ராஜ். எனக்கு நீ வேணும் ராஜ் நண்பனா மட்டும் இல்ல வாழ்க்கை முழுதும் என் கை பிடிக்கும் கணவனாய். என் மனசை உனக்கு புரிய வைக்கும் முன்பே இது நடந்து விட்டதே ராஜ். உன்னோட எல்லா முயற்சியிலும் நான் துணையா இருந்திருக்கேன் ஆனால் இப்போ எனக்கு முடியல ராஜ்.

ஆனால் நீ தோற்பதையும் என்னால் தாங்க முடியாது. என்னோட ராஜ் எப்பவும் எல்லாத்திலேயும் வெற்றி பெறணும். ஆல் த பெஸ்ட் ராஜ்.

ராஜ்  ம் ஜானகி ம் கடந்த ஆறு வருடங்களாக நண்பர்கள் கல்லூரி முதல் வருடத்தில் ஆரம்பித்தது. ராஜ் எங்க என்றால் ஜானகி இருக்கும் இடத்தில் பார் என்னும் அளவிற்கு நண்பர்கள்.  ஜானகிக்கு வேலை பார்ப்பதில் ஆர்வம் இருக்க வில்லை. அவனால் தான் அவனுடைய அலுவலகத்திலேயே அவன் டீமிலேயே சேர்ந்தாள். இரண்டு வருடங்களாக அவர்களின் நட்பு அலுவலகத்திலும் பிரபலம். ஜானகியிடம் யாரும்  ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசிவிட முடியாது ராஜ் ஆஜராகி விடுவான்.  ராஜின் இந்த பொசசிவ்நஸ் தான் ஜானகியை அவன்பால் ஈர்த்தது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பிஸ் கேண்டின்

பிரியா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும். ஓரு காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?

ராஜ் வாட் எ சர்ப்ரைஸ். ஸ்யுயர். பட் ஜானகி எங்க?

ஜானு கேபின்ல வெயிட் பண்ணிட்டு இருக்கா.

சொல்லுங்க ராஜ் என்ன விசயம்?

பிரியா ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ.

ராஜ் ஐ கான்ட் பிலீவ் திஸ் ஆர் யூ ஜோக்கிங்.?

நோ பிரியா ஐ ஆம் சீரியஸ்.

எனக்கு சில கேள்விக்கு பதில் சொல்லுங்க ராஜ்.

கேளுங்க பிரியா.

உங்களுக்கு ரெம்ப பிடிச்ச இடம் எது?

காலேஜ்ல எங்க டிப்பார்ட்மென்ட் வாசல்ல இருக்கிர ஸ்டோன் பெஞ்ச். நானும் ஜானுவும் அங்க தான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவோம்.

உங்களோட ஷர்ட் எல்லாமே நல்லா இருக்கும் எங்க வாங்குவீங்க?

ஹாஹா… என்னோட டிரஸ் எல்லாமே ஜானு தான் செலக்ட் பண்ணுவா. யூ நோ அவளுக்கு பத்து நிமிஷம் போதும் எனக்கு செலக்ட் பண்ண ஆனா பெஸ்ட்டா இருக்கும். அம்மா இதை அடிக்கடி சொல்வாங்க அவளால மட்டும் தான் உன்னை சமாளிக்க முடியும்ன்னு.

ராஜ் சமோசா சாப்பிடலாமா?

சாரி.. எனக்கு சமோசா பிடிக்காது ஜானுக்கும் தான் வீ ஹேவ் சேம் டேஸ்ட்.

உங்களுக்கு ஃபாரின் போற ஆப்ஷன் வந்ததே ஏன் போல?

எனக்கு இஷ்டம் இல்ல.

ஏன்?

எப்படி பிரியா ஒரு வருஷம்… ஜானு இல்லாம?

அப்போ லைப் லாங்கா என் கூட எப்படி ராஜ் இருப்பீங்க?

பிரியா?

ராஜ் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கு புரியலையா? யூ போத் ஆர் மேட் பார் ஈச் அதர். நான் பல நாள் உங்க ரெண்டு பேரையும் பார்த்து ஆச்சரியப்பட்டுருக்கேன் ராஜ். நீங்க ரெண்டு பேரும் பேசிக்காமலேயே கூட அண்டர்ஸ்டாண் பண்ணிக்கிரீங்க. ஜானகி கண்ணுல நான் காதலப்பார்த்திருக்கேன். உங்க அம்மா சரியா சொல்லி இருக்காங்க ராஜ் ஜானகியை விட நல்ல துணை உங்களுக்கு கிடைக்க மாட்டாங்க இன்க்ளூடிங் மீ.

எனக்கும் உங்கள பிடிக்கும் ராஜ் “ஜானகியோட ராஜ் ஆ”.

பிரியா எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல.

ஓ கே நெக்ஸ்ட் வீக் கிர்ஸ்மஸ் ஹாலிடேஸ்கு நான் பெங்களூரு போறேன் வீட்டுக்கு நீங்களும் என் கூட வர்ரீங்களா?

என்ன ரெம்ப யோசிக்கறீங்க?

ம்… கண்டிப்பா பட் என்னோட ஜானு கூட ஹா… ஹ…

தட்ஸ் குட்.

பட் பிரியா இதை ஜானு கிட்ட எப்படி சொல்ல?

ஹா...ஹ.... வெட்கப் படாம கால்ல விழுந்திடுங்க ராஜ் ஐ திங்க் வேற வழி இல்ல..

தேங்க்யூ பிரியா யூ ஆர் கிரேட்.

உண்மையான அன்பு எப்பவும் ஜெயிக்கும் ராஜ் ஆல் த பெஸ்ட்.

ஜானு…

ராஜ் சக்சஸ் ஆ.

ஜானுவின் கண்களில் வலி கலந்த அக்கறையைக்  கண்டான் ராஜ்.

ஐ ஆம் சாரி ஜானு. இந்த நிமிஷம் உன்னை மட்டும் இல்ல என்னையும் உணர்ந்தேன் ஐ லவ் யூ ஜானு ஐ காண்ட் லிவ் வித்தவுட் யூ.

ப்ளீஸ் ஜானு.

ஆச்சர்யத்தை மற்றும் மகிழ்ச்சியாயின ஜானுவின் கண்கள்.

பொய் கோபத்துடன் போடா என்று அவனின் மார்பில் புதைந்தாள்.

நீ இல்லாமல் எங்க என்று அணைத்துக்கொண்டான் அவளை.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.