(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - என் தேவதை - அஸ்ரிதா ஸ்ரீ

angel

ம்மா ஆஆ முடியலை.

வலி தாங்க மு முடில.

ஒன்னும் இல்லை மா ஒன்னும் இல்லை. இதோ கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்றவாறு காரின் வேகத்தை கூட்டினான் கர்ணன்.

கூடியது காரின் வேகம் மட்டுமல்ல அவனின் இதயத்தின் வேகமும் தான். திறந்த கதவின் வழியே தலையை வெளியே நீட்டி நீட்டி கூட்ட நெரிசலில் லாவகமாக அவனது கை காரை ஒட்டி சென்றது மருத்துவமனை நோக்கி.அவனின் காதுகளுக்கு அவள் துடிக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இதுவரை லட்சம் வேண்டுதலாவது வைத்திருப்பான் அவனின் தேவதைக்காக.

ஆம் துடிப்பது அவள் மட்டும் அல்ல அவனின் உயிரும் சேர்ந்து தான் அந்த வலியை வேதனையை உள் வாங்கி கொண்டிருக்கிறது.

கர்ணா ஆஆ பயமா இருக்கு. பாப்பா நல்ல படியா வந்துருவா தான. கண்டிப்பா மித்ரா.

இதோ மருத்துவ மனை வந்தாகி விட்டது. பூ போல் ஏந்திய வாறு உள்ளே ஓடுகிறான்.மித்ராவை பிரசவ அறைக்குள் அழைத்து சென்று சிகிச்சை ஆரம்பித்தனர். மனம் படபடக்க கர்ணன் வெளியே அமர்ந்தான். நினைவுகள் பின்னோக்கி சென்றது அவர்கள் சந்தித்த முதல் நாள் நோக்கி.

அடர்த்தியான கூந்தல் தீட்சண்யமான விழிகள் எப்போதும் தவழும் புன்னகை கண்டிப்பில் ஒரு கனிவு கர்ணனுக்காக இருந்த ஒரே உறவு கர்ணனின் தாய் யசோதா. அவனின் 7 வயதில் விபத்தில் இறந்து போனார். யாருமில்லா பிள்ளையாய் ஆசிரமத்தில் விட பட்டான். தாய் ஊட்ட உண்டு பழகியவனுக்கு தானே உண்ண கூட சரியாக வரவில்லை. போதும் என்று எழ போகையில் இன்னொரு கரம் உணவு ஊட்ட ஆரம்பித்தது. ஆம் சம வயதுடைய மித்ரா அந்த பிஞ்சு வயதில் அவனின் தாயாக மாறினாள்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நினைவுகளை உலுக்குகிறது மழலையின் அழுகுரல். தன்னையும் மீறி அழுகை சிரிப்பு இரண்டுமே வருகிறது.

சிரித்தவாறே வெளியே வந்த மருத்துவர் கீதா என்ன கர்ணன் சார் குட்டி தேவதையை பார்க்கணுமா இல்ல பெரிய தேவதையை பார்க்கணுமா என்றாள். கண்டிப்பா எங்க அம்மா மித்ரா வ தான் பாக்கணும். அப்போ குட்டி மித்ராவை யார்ட்ட குடுக்க என்று தலை சரித்து தன் கணவனும் இதய அறுவை சிகிச்சை நிபுணனும் ஆகிய கர்ணனிடம் கேட்டாள் கீதா.

அந்த தடியன் ஆதி எங்க போய் தொலைஞ்சான்.

வந்துட்டேன் வந்துட்டேன் கர்ணா ஒரு முக்கியமான சிகிச்சை டா அதான் கிளம்பி வர வேண்டியதா போச்சு. ஒரே அரை அறைந்தான் கர்ணன். என்கிட்டயாவது சொல்லிருக்கணும்ல நிறை மாசமா மித்ராவை விட்டுட்டு வரும் போது யோசிக்க மாட்டியா இடியட். அவ கால் பண்ணி வலின்னு அழுததும் அப்படியே ஆடீருச்சு டா. உங்க சண்டையை பிறகு போடுங்க. ஆதி நீ உன் பொண்ணை வாங்கு என்று குட்டி ரோஜா மொட்டு போல் இருந்தவளை ஆதியின் கையில் திணித்தாள் கீதா.

கர்ணன் மித்ராவிடம் ஓடினான். மித்து என்று மிருதுவாய் அழைக்க இப்போது அறைவது மித்ராவின் முறையானது. எனக்கு தெரியும் இவ்ளோ நேரத்துக்கு ஆதியை வெளுத்து வாங்கிருப்பன்னு. என் ஆதியை திட்டுனா சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோ என்று கல கலவென மித்ரா சிரிக்க ஆதியும் சிரித்தவாறு மனைவியை பிள்ளையுடன் நெருங்கினான்.

கன்னம் தடவிய வாறே தனதறைக்கு வந்தவனை வரவேற்றது மித்ராவின் ஆளுயர புகைப்படம். அருகில் பள்ளி பருவத்தில் அவளே எழுதிய வாசகம்.

மணமுடிக்க வில்லை

கருத்தரிக்க வில்லை

பிரசவ வலி கூட இல்லை

இருந்தும் அன்னையானேன்

என் கர்ணனுக்கு

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.