Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - செந்தாமரை முகம் - ரவை - 5.0 out of 5 based on 1 vote

சிறுகதை - செந்தாமரை முகம் - ரவை

threeHands

த்தாம் வகுப்பு, தமிழாசிரியை தேம்பாவணி கவிதைச் சிறப்பைப் பற்றி கூறும்போது, புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதை ஒன்றை பாடி விளக்கமளித்தார்.

"ஒப்புரைக்கமுடியாத அன்னையென்னை

ஒருக்கணித்துமார்பணைத்துமேனியெலாம்,

கைப்புறத்தில்ஆம்படிக்குள்தழுவியெந்தன்

கண்மறைக்கும்சுருள்குழலைமேலொதுக்கி,

மைப்புருவ விழிமீது விழியமைத்து

மலர்வாயால்குளிர்தமிழால்கண்ணேயென்று

செப்பிமுத்தமிட்டாளேஅன்புள்ளாரின்

செந்தாமரைமுகத்தைமறப்பேனோநான்!"

அதற்கு விளக்கமும் அளித்துக்கொண்டிருந்தார்.

"கவிஞர் தனது கவிதையிலே, ஒரு சித்திரத்தையே வரைந்திருக்கிறார். குழந்தை ஒன்று, தன்னை தன் தாய் எப்படியெல்லாம் தான் சிசுவாயிருக்கும்போது தன்னை கொஞ்சி மகிழ்ந்தாள் என்பதை சொல்கிறதாம்.... ஈடு இணையேயில்லாத தாய், ஒருக்கணித்து படுத்து, மார்போடு சிசுவையணைத்து, சின்னஞ்சிறு உடலை முழுவதும் கைப்புறத்து ஆம்படிக்குள் தழுவிக்கொண்டு, சிசுவின் முகத்தை மறைக்கிற சுருண்ட முடியை மேலொதுக்கி மைப்புருவ விழிமீது தன் விழிகளை செலுத்தி மலர்வாயால் குளிர்ந்த தமிழில் 'கண்ணே' என்று சொல்லி முத்தமிடுகிறாளாம்!....."

நிசப்தமாயிருந்த வகுப்பறையில், விசும்பலைத் தொடர்ந்து, விம்மியழும் ஓசையும் கேட்கவே, ஆசிரியையும் மாணவிகளும் ஓசை வந்த திசையில் நோக்கினர்.

ஒரு மாணவி, காதம்பரி, தலையை குனிந்துகொண்டு, அழுதுகொண்டிருந்தாள்.

அவள் அருகில் அமர்ந்திருந்த மாணவிகள், அவளை தடுக்க எழுந்தபோது, ஆசிரியை சைகையால் அவர்களை தடுத்தி நிறுத்திவிட்டு, விளக்கத்தை தொடர்ந்தார்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த தாயன்பு கிடைத்திருக்கும். அப்படி கிடைக்காத, பேறுபெறாத சிலரும் இருக்கிறோம். ஆம், ஒன்று, அழுகிறாளே அந்தப்பெண், மற்றொன்று........" 

ஆசிரியையின் கன்னங்களில் நீர் வழிந்தோடியது!

வகுப்பிலிருந்த அனைவரின் கண்களும் குளமாகின!

மாணவிகள் பதறிப்போய், ஆசிரியைக்கு ஆறுதல் கூறி, அவரை நாற்காலியில் அமரவைத்துவிட்டு, தங்கள் இருக்கையில் அமர்ந்தனர், ஒரு மாணவியைத் தவிர! தாமரை!

"ஆசிரியையின் அனுமதியுடன் வகுப்பை நான் தொடர்ந்து நடத்துகிறேன்......"

தலைநிமிர்ந்து பார்த்த ஆசிரியை கைகளை ஆட்டி, அனுமதியளித்தார்!

"உறவுகளில் தாயுறவு, தனித்வமானது, புனிதமானதும்கூட! இந்த பேறு பெறாதவர்கள், காலமெலாம், இதயமே வெடித்துவிடுமளவுக்கு, அழுதாலும், புரண்டாலும், பயனில்லை! ஆகவே, மனதை மாற்றிக்கொள்ள முயல்வதே, அறிவுடைமை!........"

ஆசிரியையும் அழுதுகொண்டிருந்த காதம்பரியும் தலைநிமிர்ந்து, கண்களை துடைத்துக்கொண்டு, செயற்கையாக சிரித்தனர்.

"இல்லாத ஒன்றை எண்ணி ஏங்குகிற நேரத்தை, இருக்கிற செல்வத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவோமே!....."

"ஏ!" என வகுப்பே எதிரொலித்தது!

"படைப்பிலேயே, நம் அனைவருக்கும் கிடைத்திருக்கிற செல்வங்கள் ஏராளம். கண்களால் பார்த்து மகிழ்கிறோம், செவிகளால்கேட்டு மகிழ்கிறோம், நாக்கினால் சுவைத்து மகிழ்கிறோம், கைகளால் கொடுத்து, படைத்து மகிழ்கிறோம், மனதால் சிந்தித்து மகிழ்கிறோம், அறிவால் பகுத்தறிகிறோம், இருதயத்தால் உயிர் வாழ்கிறோம், இப்படி நிறைய! அனைத்திலும் முக்கியமானது,........?"

"கண்கள்"

"மனம்"

"அறிவு"

குரல்கள் ஒரே நேரத்தில் குவிந்தன!

"மன்னிக்கவும், நான் உங்கள் அனைவரிடமிருந்தும் மாறுபடுகிறேன், என் கருத்தில், முக்கியமானது, இதயம்!"

ஆசிரியை உட்பட அனைவரும் கைதட்டி ஆமோதித்தனர்.

மணி அடித்தது. அன்றைய அனைத்து வகுப்புகளும் முடிந்துவிட்டதால், 

மாணவிகள் வீட்டுக்கு கிளம்பினர்.

காதம்பரியுடன் தாமரை இணைந்துகொண்டாள். அவர்கள் பின்னாலே தொடர்ந்துவந்த ஆசிரியை

தேம்பாவணி, அன்போடு தாமரையின் தோளைத் தொட்டு அணைத்துக்கொண்டு, கூடவே நடந்தாள்.

"ரொம்ப நன்றி, தாமரை! நீ அப்படி தடுப்பணை போட்டிருக்காவிட்டால், நானும் காதம்பரியும் உடைந்தே போயிருப்போம்........."

"ஆமாம், நிச்சயமா!" காதம்பரி பலமாக ஆதரித்தாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# Penniyaminfanto 2018-11-26 09:39
Dear mam,
nizzz story, really superb.. neenga Eluthura ela kathailaum, PengalukuMukiyathuvam Kudukurathu super...
Reply | Reply with quote | Quote
# RE: PenniyamRaVai 2018-11-26 13:32
நான் மேம் இல்லை, மேன்.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தாயில்லாமல் நானில்லை, தாய்க்குலத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆதரவாக இன்னும் நிறைய எழுதவேண்டியுள்ளது. எழுதுவேன்
Reply | Reply with quote | Quote
# sendamarai mugamravai 2018-11-24 08:37
thanks a lot, Sahityaraj!
Reply | Reply with quote | Quote
# chendamarai mugamravai 2018-11-24 08:33
Mikka nanri
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - செந்தாமரை முகம் - ரவைThenmozhi 2018-11-23 22:14
ithu pondra nilai ipovum irupathu varutha pada vendiya vishaym than. Makkalidam vanthirukum vizhipunarvu matrangalai kondu varumnu nambuvom.

Good one.
Reply | Reply with quote | Quote
# SM by RavaiSahithyaraj 2018-11-23 19:08
Enna solrathune theriyala speechless. Heart touching story. So many are in this condition. :sad:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Mazhai indri naan nanaigiren

General articles

Poogambathai poovilangaal poottiya poovai

Uyire yen pirinthaai?

Jokes

Midimaiyum-achamum-meviya-nencham

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top