Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகா

Flower

ல்லி” என அன்பாக அழைத்தாள் சஞ்சனா

”இதப்பாரு முதல்ல வீட்டுக்கு கிளம்பு, எவ்ளோ தைரியம் உனக்கு குற்றாலத்தில இருந்து இவ்ளோ தூரம் வந்திருக்க யார் கூட வந்த” என கோபமாக பேசினான் மல்லிகார்ஜுன்

“தனியாதான் கார்ல டிரைவரோட வந்தேன்”

“உன் வீட்ல நீ இங்க வந்தது தெரியுமா”

”தெரியாது”

”அடிப்பாவி உன் வீட்ல நேத்துதான் கல்யாணம் ஆச்சி இன்னிக்கு காலையில நீ இங்க இருக்க உன்னை காணலைன்னு உன் வீட்ல இருக்கறவங்க தேடி இங்க வந்தா எவ்ளோ பிரச்சனையாகும் தெரியுமா”

“எவ்ளோ பிரச்சனை வந்தாலும் சரி என் முடிவு இதுதான்” என அவள் பேச பேச கோபமே வந்தது மல்லிக்கு ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவளை எப்படியாவது அனுப்பிவிட நினைத்து

”இதப்பாரு சஞ்சனா ஊருக்கு கிளம்பு அதான் நல்லது” என அன்பாக சொல்ல அவளோ

”வீட்ல என்னை எல்லாரும் சஞ்சு சஞ்சுன்னுதான் கூப்பிடுவாங்க நீயும் அப்படியே என்னை கூப்பிடு”

“எப்படி சஞ்சு சஞ்சுன்னா”

“ஆமாம்”

“முடியாது கிளம்பு”

“நான் போக மாட்டேன்”

“இங்க இருந்து என்ன செய்யப் போற சுத்திலும் பாரு பஸ் ஸ்டான்ட் இப்படி என்கிட்ட நீ பேசறதை நிறைய பேர் இப்பவே பார்த்துட்டாங்க பார்த்தவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா இது உன் ஊரே கிடையாது உனக்கு பிரச்சனையில்லை கார் ஏறி போயிடுவ இது என் ஊரும்மா நான் இங்கதான் வியாபாரம் செய்யனும் புரியுதா” என பொறுமையாக சொல்ல அவளோ விடாப்பிடியாக

“ஏன் இப்படி பிரிச்சிப் பேசறீங்க நான் உங்களுக்காகதான் வந்தேன் இங்கதான் இருப்பேன்”

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அடிவாங்குவ கிளம்பு”

“நீங்க அடிச்சதாலதான் எனக்கு உங்க மேல லவ்வே வந்துச்சி”

“அடிச்சா வலிக்கும் கோபம் வரும் உனக்கு மட்டும்தான் லவ் வந்திருக்கு வித்தியாசமான பொண்ணா இருக்கியே ஆமா என்ன படிக்கற”

”காலேஜ் பர்ஸ்ட் இயர்” என்றாள் சஞ்சனா அதைக்கேட்டு அதிர்ந்த மல்லியோ

”பர்ஸ்ட் இயர்னா என்ன வயசு இருக்கும் உனக்கு ஒரு 18 19 இருக்குமா”

“இன்னும் எனக்கு 18 முடியலை” என்றாள் அதைக்கேட்டு இன்னும் அதிர்ந்தான் மல்லி

”அடிப்பாவி மைனர் பொண்ணா நீ இதப்பாரும்மா தாயே கையெடுத்து கும்பிடறேன் தயவு செஞ்சி கிளம்பி போம்மா” என கைகூப்பி கெஞ்ச சஞ்சனாவோ

”ஏன் நான் போகனும் என்னாச்சி ஏன் பயப்படற மல்லி” என அவனது ஒரு பக்க உள்ளங்கையை தன் இருகையால் பிடித்தாள். ஏசி காரில் வந்த காரணத்தாலோ அல்லது தட்பவெப்பநிலையின் காரணமோ அவளது கை இரண்டும் ஜில்லென இருந்தது. அதில் கை சிலிர்த்தவன் அவளையே பார்த்தான் அவளோ கெஞ்சும் முகத்துடன் பார்த்து வைக்க பெருமூச்சு விட்டவன் தன் மனதில்

”என்னடா இது வம்பா போச்சி”

அந்நேரம் அனாதரவாக இருந்த இன்னொரு கையை இன்னொரு 2 கைகள் பிடித்தன அதுவும் பனித்துளி தீண்டியது போல ஜில்லென இருக்கவே திரும்பி பார்க்க அங்கு சாருபா இருப்பதைக்கண்டு அதிர்ந்தான். ஆனாலும் இரு பெண்களின் ஸ்பரிசம் தன் இரு கைகளையும் குளுகுளுவென ஆக்க மனதிற்குள் அவள் சில்லென தீண்டும் பனித்துளி போல இருப்பதாக நினைத்து கைகளை உதறிக் கொண்டு விலகிச் செல்ல மனமின்றி சாருபாவிடம்  

”டீச்சர் நீங்களா” என்றான் மல்லி

“நானேதான் 3 நாளா எங்க ஆளை காணலை”

”குற்றாலம் போயிருந்தேன் ப்ரெண்ட் கல்யாணம் அதான்”

“சொல்லிட்டு போயிருக்கலாம்ல”

“சரி விடுங்க டீச்சர், முதல்ல கையை விடுங்க பஸ் ஸ்டான்ட் எல்லாரும் பார்க்கறாங்க விடுங்க”

”முதல்ல அவள் யாருன்னு சொல்லுங்க” என சாருபா சஞ்சனாவை கோபமாக முறைத்தபடி கேட்க சஞ்சனாவோ

”ஏய் யார் நீ மல்லி கையை விடு” என அவள் கத்த சாருபாவோ

”பார்க்க சின்ன பொண்ணா இருக்க மரியாதையே தெரியலையே உனக்கு இப்படியா பொது இடத்தில ஒரு ஆம்பளை கையை பிடிச்சிக்கிட்டு நிப்ப” என கோபமாக கத்த அவளோ

”அதை கேட்க நீ யாரு மல்லியே அமைதியா இருக்கறப்ப உனக்கேன் கோபம் வருது” என சஞ்சு தெனாவெட்டாக பேச அதற்கு சாருபா பேச இடையில் மாட்டிக் கொண்ட மல்லியோ சில நொடிகள் கழித்து பொறுக்க முடியாமல்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: சிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகாDeepthi94 2018-12-11 21:52
Epo next update steam ..
Reply | Reply with quote | Quote
# omgName 2018-11-19 15:25
Ponunganale prachanatha pola ???/
Reply | Reply with quote | Quote
# RE: சிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகாvijayalakshmi 2018-11-19 08:44
its ok malli all the best for your future
Reply | Reply with quote | Quote
# RE: சிறுத் தொடர் - மல்லி - 13 - அவள் சில்லென தீண்டும் பனித்துளி - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-19 08:43
பாவம் மல்லி அவனுக்கு இப்படி நடக்ககூடாது கெட்டதிலும் ஒரு நன்மை மல்லியை தேடி வரும்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top