Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவை

oldman

டீக்கடைக்காரன் மீது, கிழவருக்கு வந்ததே, கோபம்!

நேராக அவனிடம் சென்றார்.

" ஏன்யா! உன் கடைக்கு டீ குடிக்கத் தானே வராங்க, எதுக்குய்யா, பாட்டு போடறே? போடறதை, நல்ல பாட்டாவாவது போடறியா? அழுகை பாட்டா போடறே! முதல்லே நிறுத்துய்யா, அந்த கசமாலத்தை!"

கிழவருக்கு இப்படி கோபம் வரமாதிரி, அது என்ன பாட்டு? என்று டீ குடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பாட்டை கவனித்தனர்.

" தென்னையை வைச்சா இளநீரு!

பிள்ளையை பெற்றா கண்ணீரு!"

என்று கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். பாடி சிவாஜி நடிச்சு, ஊரே கேட்டு உருகிய பாட்டு!

அடுத்த வினாடி புரிந்துவிட்டது, கிழவரை அவர் பெற்ற பிள்ளையோ, பிள்ளைகளோ, கைவிட்டிருக்கவேண்டும், அதனால்தான் அவருக்கு அத்தனை கோபம்! 

பசிக்கு வயிறார உணவு சாப்பிட காசின்றி, ஒரு சிங்கிள் டீ குடிக்க வந்தால், இந்தப் பாட்டு கோபம் அடையத்தானே செய்யும்!

" நிறுத்துய்யா, பாட்டை! பாவம், கிழவர்! வெந்த புண்ணிலே வேலை செருகறாப்போலே, 'பிள்ளையை பெற்றா கண்ணீரு'ன்னு போடறது தப்புத் தானே!"

" ஐயோ சாமி! நானா அந்தப் பாட்டை போடறேன்? ரேடியோக்காரன் போடற அரைமணி பாட்டுகளிலே இதுவும் ஒண்ணு! டீ போடறதிலே முழுகிட்டதிலே, நான் அதை காதிலே வாங்கிக்கவேயில்லை.....சரி, ரேடியோவை நிறுத்திடறேன்!"

கிழவர் கோபத்தை மறந்து, மெதுவாக டீயை உறிஞ்சிக் குடித்தார். கிளாஸில், டீ அளவு குறையக் குறைய அவருக்கு சோகமாயிருந்தது. அடுத்த வேளைக்கு, இந்த டீக்குக் கூட வழியில்லையே, என்ற பயமே அவரைக் கொன்றது!

கடையில் கூட்டம் குறைந்தது. கிழவரின் டீகிளாஸும் காலியாயிற்று. 

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" சரி, இப்ப என்ன செய்யறது? எங்க போறது? யாரை பார்த்து என்ன கேட்கிறது?"

திடீர் பணக்காரங்களா சிலர் ஆகிறமாதிரி, இவர் திடீர் ஏழையானவர்!

அவர் பிழைப்பை கெடுக்கிறதே, அவருடைய பொல்லாத கோபம்தான்!

இன்று, நேற்று அல்ல, சிறு வயதிலிருந்தே, அவர் வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனையும், அவர் கோபத்தினால்தான்!

அவருக்கு சரியாகத்தான், பெற்றோர் பெயர் சூட்டியிருக்கிறார்கள், 'பழனி'! எம்பெருமான் முருகன் தனக்கு பழம் கிடைக்காத கோபத்தில் கோவணத்தோடு ஆண்டியாகி வந்து அமர்ந்த மலையின் பெயர்!

ஆனால், முருகப்பெருமான் அதன்பிறகு கோபமடைந்ததாக புராணத்தில் இல்லை! நம்ம கிழவர் முருகனை விஞ்சியவர்! கோபத்தில் மட்டும்! 

" என்ன பெரிசு! கிளம்பலையா?"

" ஏன், கடையை மூடப்போறியா?"

" பெரிசு! நல்ல வார்த்தையா பேசு! நான் பொழைக்கிறதே, இந்த டீக்கடையினாலேதான்! நான் உயிரோடிருக்கிறவரையிலும், இந்த டீக்கடையும் இருக்கும், மூடற பேச்சே கிடையாது......"

" கோவிச்சுக்காதே! நான் அந்த 'மூட'றதை சொல்லலை, சாப்பிட வீட்டுக்குப் போக, கடையை 'கட்டுவியே' அதைச் சொன்னேன்!"

" பெரிசு! எனக்கும் உனக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசமில்லே, எனக்கு இந்த டீக்கடையிருக்கு, உனக்கு அதுவுமில்லே........"

" யாரைப்பார்த்து என்ன பேச்சு பேசறே? எனக்கு எல்லாம் இருக்கு!"

" அப்படியா! மன்னிச்சிக்க! தெரியாம சொல்லிட்டேன், வீட்டைவிட்டு கோவிச்சிகிட்டு வந்துட்டியா?"

" அட, அத விடப்பா! பெரீரீய்ய வீடு! நான் எவன் தயவிலும் இதுவரை வாழ்ந்ததில்லே, இனிமேலும் செத்தாலும், சாவேனேதவிர, இன்னொருத்தன், அவன் என் பிள்ளையே ஆனாலும் சரி, தயவிலே வாழமாட்டேன்........"

"பெரிசு! உன்னைவிட நான் வயசிலே ரொம்ப சின்னவன், உனக்கு தெரியாத விஷயத்தை சொல்லப்போறதில்லே,........கூட நாலுபேர் இல்லேன்னா, வாழ்க்கையே வேஸ்ட்! ஆமாம், பெரிசு! காலையிலேருந்து ராத்திரி வரையிலும் உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், என்ன பிரயோசனம்? சாப்டியா, நான் பண்ணி போடறேன், சாப்பிடறியா?ன்னு கேட்க நாதியில்லாம நிக்கறேன்யா! இப்படியெல்லாம் வேதனையோட வாழணுமான்னு அடிக்கடி தோணுதய்யா! ஆனா, தற்கொலை பண்ணிக்க தைரியம் வரலிய்யா!......"

கிழவனின் பாறாங்கல் மனமும் இளகியது.

" ஏன், பொண்டாட்டி, பிள்ளைகுட்டிங்களுக்கு என்னாச்சு?"

" அதுக்கெல்லாம் எனக்கில்லையா, கொடுப்பனை! அப்பன் யாரு, அம்மா யாருன்னு தெரியாத அனாதைய்யா நான். உன்னைப்போல, ஒரு பெரிசு என்னை பத்துவயசு வரையிலும் வளர்த்தது, அது வாயை பொளந்திடுச்சு! சோற்றுக்காக, ஒரு டீக்கடையிலே கிளாஸ் கழுவுற பையனா வேலைக்கு சேர்ந்தேன், டீ, பன், வடை சாப்டே, வருஷக்கணக்கிலே காலம் தள்ளினேன். கறிசோறு எப்படி இருக்கும்னு வாசனைகூட தெரியாது. என்மேல பரிதாபம் ஏற்பட்டு ஒருநாள் ஓனர் என்னை அவர் வீட்டுக்கு இட்டுக்கினு போனார், நல்ல மனுசன்!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைAbiMahesh 2019-02-12 21:17
Nice story Sir.. Hope the old name would give & get all the affections from him :-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைRaVai 2019-02-14 16:44
Thanks Abimahesh! Pray your hopes are answered!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைmadhumathi9 2019-02-12 05:47
:clap: arumaiyaana kathai :hatsoff: sir. (y) :thnkx: 4 this story.vaaltugal. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைRaVai 2019-02-12 09:39
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், மதுமதிம்மா!
உங்களிருவரின் ஆதரவு எனக்கு பெரிய பலம்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைAdharvJo 2019-02-11 16:55
:eek: sema violent family ya irukanga, uncle facepalm Like father Like son-n thaan solanum...he didn't respect his parents and his son didn't care for him :sad: I really feel bad for the old man. Finally he realized what love and family mean in one's life. Wish he had realized this way back and lived a happy life with his grandson :yes: Glad ippovadhu purinjikitar and oru orphan-k family ya thunai nikuradhu is great deal (y) on first place our family members should respect us(we need to own it) :yes:
thank you for this valuable story uncle :clap: :clap: keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைRaVai 2019-02-11 17:08
Dear Jo!
As usual you have applauded my story in a big way.
You have a broad mind and a genuine wish that all should be encouraged to reach a higher level all the time.
Thanks. Wish more and more people are like you!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top