Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

" அப்படியே அவர்கூடவே இருந்துடறதுதானே, ஏன் தனியா கடை நடத்தறே?"

" அந்த நல்ல மனுசனை கடவுள் வாழவிடலையே, பொசுக்குனு ஒருநாள் பூட்டாரு, மேலே! அவரோட குடும்பம்தான் எனக்கு கொஞ்சம் உதவி செஞ்சு இந்த கடையை நடத்திக்க சொன்னாங்க........"

" உன்னைப்போல, அனாதைப் பொண்ணா பார்த்து கட்டிக்கவேண்டியதுதானே?"

" நானே எப்படி .......யாராவது அன்பா ஆதரவா ஒரு பொண்ணை பார்த்து கட்டிக்கடான்னு சொன்னா, பரவாயில்லே......அப்படி சொல்ல ஆளில்லையே........."

" நான் உன்னோட இங்கேயே இருந்து உனக்கு அந்த காரியத்தை முடிச்சு கொடுத்துட்டு, கிளம்பறேன், சரியா......"

" பெரிசு! கடவுளே எனக்காத்தான் உன்னை சமயம் பார்த்து என்கிட்ட அனுப்பியிருக்காரு, உன் காலைத் தொட்டு கும்பிட்டுக்கிறேன், இனிமே உன்னை 'தாத்தா'ன்னு கூப்பிடறேன், சரியா?"

" இத பாரு, உனக்கு பொண்ணு பார்க்கிறதிலே அவசரப்பட்டு தப்பு நடந்துட்டா, அப்புறம் உன் வாழ்க்கையே வீணாபோயிடும், எனக்கும் வேதனையாயாருக்கும், அதனாலே, நிதானமாத்தான் தேடுவேன், அதுவரையிலும் எனக்கு சோறு போடுவியா?"

" தாத்தா! அதுவரையிலும் மட்டும் இல்லே, நீ உன் ஆயுள் முழுதும், என்னோடத்தான் இருக்கப்போறே! இந்த விஷயத்தை வரப்போற பொண்ணுகிட்ட இப்பவே சொல்லிடு! பொண்ணே கிடைக்கலேன்னாக்கூட, பரவாயில்லே, எனக்குத் துணையா நீ இருக்கணும். தாத்தா! யாராவது என்னிடம் பிரியமா நாலு வார்த்தை பேசமாட்டாங்களான்னு ஏங்கறேன், தாத்தா! பொண்ணு கிடைச்சா போனஸ்! நீ கிடைச்சதே எனக்குப் போதும்!"

கிழவர் அந்த நிமிடமே தாத்தாவாக மாறினார். ஏன் தெரியுமா?

அவர் வாழ்வில், முதன்முறையாக அவரை அவருக்காகவே நேசிக்க ஒருவரை பெற்றுவிட்ட சந்தோஷம்!

ஆம், அவர் குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அவரை இதுவரை அன்புடன் நடத்தியதேயில்லை. மனைவிகூடவா? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது, ஆம் மனைவி உட்பட! இல்லை, மனைவிதான் அவரை மற்றவர்கள் வெறுக்கவும், மூல காரணம்!

அவளை கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பும் கூட, அவரை நேசித்த ஒரே ஆள், அவருடைய தாய்தான்! 

அவருடைய தந்தையோ, உடன்பிறந்தோரோ, நேசிக்கவில்லை என்பது மட்டுமல்ல, வெறுத்தார்கள்.

அத்தனைக்கும் காரணம், அவருடைய கோபம், கெட்ட பழக்கங்கள், பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத முரட்டு குணம்!

வீட்டுக்கு அவர்தான் மூத்த மகன். அவரை பெற்றோர் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள், முதல் ஏழு வருஷம்! அதாவது, அடுத்த குழந்தை பிறக்கும்வரையில்!

ஏழு வருஷம் போதாதா, பிடிவாதமும், முரட்டு குணமும் வேரூன்றி வளர!

போதாத குறைக்கு, பள்ளியில் கிடைத்த சிநேகமும் சரியில்லை.

ஐந்தாவது வகுப்பு தேறுவதற்குள் வயது பதிமூன்றாகிவிட்டது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது, குடிப்பழக்கத்தில் வீழ்ந்தவர் பிறகு எழவேயில்லை!

தந்தை கண்டித்தார், அடித்தார், திருந்தவில்லை! வீட்டைவிட்டுத் துரத்தினார். ரெண்டுநாள் சோறுதண்ணி இல்லேன்னா, படிந்துவிடுவான் என்று கணக்குப் போட்டது, தவறாகிவிட்டது!

ஊரிலேயே மிக மோசமான ரௌடி கும்பலில் சேர்ந்து ஒரு அடிதடி கேஸில் சிக்கி சிறை சென்றார்.

தாய் துடித்துப்போனாள். அவள் தன் மகனைத் திருத்த, ஒரே வழி, அவனுக்கு திருமணம் செய்துவைப்பதுதான் என்று பிடிவாதம் பிடித்து, அதற்கென ஒரு ஏழைப்பெண்ணையும் எங்கிருந்தோ பிடித்துவந்து நிறுத்தினாள். 

வேறுவழியின்றி, தந்தையும் இசைந்து இனிதே திருமணம் நடந்தது. அங்குதான் புதிய சிக்கல் துவங்கியது.

தன்மகனின் கோபத்தையும் பிடிவாத குணத்தையும் நன்கு அறிந்திருந்த தந்தை, தன் சொத்திலிருந்து ஒரு கணிசமான தொகையை, அந்த ஏழைப்பெண்ணின்மீது எழுதிவைத்துவிட்டு, " என் மகன், உன்னையும் பிறக்கும் குழந்தைகளையும் சரியாக காப்பாற்றுவானா என உனக்கு சந்தேகம் வருவது நியாயமானதுதான்! கவலைப்படாதே! உன் பெயரில் வங்கியில் கணக்கு துவங்கி அதில் ஒரு பெரும் தொகையை செலுத்திவிடுகிறேன். அந்தப் பணம் உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே! என் மகன் குடிப்பதற்கோ, சூதாடவோ பணம் கேட்டால் கொடுக்காதே! அவன் உன்னை மிரட்டினால், எனக்குத் தெரிவி! அவனை போலீஸில் ஒப்படைத்துவிடுகிறேன்......."

மகனை வைத்துக்கொண்டே, மருமகளிடம் இப்படிச் சொன்னால், அவள் எப்படி கணவனை மதிப்பாள்?

அதுவே, கணவனின் கோபமும் வெறுப்பும் அவள்மீதும், அவள் பெற்ற குழந்தைகள்மீதும், சீறிப் பாய காரணமாகிவிட்டது. ஆனால், ஒன்றும் செய்ய முடியாத நிலை!

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைAbiMahesh 2019-02-12 21:17
Nice story Sir.. Hope the old name would give & get all the affections from him :-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைRaVai 2019-02-14 16:44
Thanks Abimahesh! Pray your hopes are answered!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைmadhumathi9 2019-02-12 05:47
:clap: arumaiyaana kathai :hatsoff: sir. (y) :thnkx: 4 this story.vaaltugal. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைRaVai 2019-02-12 09:39
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், மதுமதிம்மா!
உங்களிருவரின் ஆதரவு எனக்கு பெரிய பலம்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைAdharvJo 2019-02-11 16:55
:eek: sema violent family ya irukanga, uncle facepalm Like father Like son-n thaan solanum...he didn't respect his parents and his son didn't care for him :sad: I really feel bad for the old man. Finally he realized what love and family mean in one's life. Wish he had realized this way back and lived a happy life with his grandson :yes: Glad ippovadhu purinjikitar and oru orphan-k family ya thunai nikuradhu is great deal (y) on first place our family members should respect us(we need to own it) :yes:
thank you for this valuable story uncle :clap: :clap: keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிள்ளையை பெற்றா கண்ணீரு! - ரவைRaVai 2019-02-11 17:08
Dear Jo!
As usual you have applauded my story in a big way.
You have a broad mind and a genuine wish that all should be encouraged to reach a higher level all the time.
Thanks. Wish more and more people are like you!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top