Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவை

eyes

"த பார்டீ, சுவேதா! நீ தலைகீழா நின்னாலும், உன் எண்ணம் ஈடேறாது. புத்திசாலியா, உன் பிடிவாத த்தை கைவிடு! அப்பா, அம்மா சொல்றதைக் கேட்டு நடந்து, வாழற வழியைப் பார்!"

" அம்மா! பிடிவாதம் பண்றது, நானா, நீங்களா? அவனை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்னு நியாயங்களைச் சொல்லி வாதம் பண்றேன், நீங்கதான் மூர்க்கத்தனமா, காரணமே சொல்லாம, பிடிவாதமா நான் அவனை கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுங்கறீங்க!....."

" எதுக்குடீ, காரணங்களை அடுக்கணும்? நாங்க செல்லமா எல்லா வசதிகளுடனும் வளர்த்து நல்லா படிக்கவைச்சு, அழகாவும் இருக்கிற உன்னை ஒரு பார்வையில்லாதவனுக்கு கல்யாணம் செய்துகொடுக்க, எப்படிடீ சம்மதிப்போம்? இதுக்கெதுக்கடீ, காரணமும், தோரணமும்?"

" திரும்பத் திரும்ப, அவனுக்கு பார்வையில்லைங்கிற குறையையே சொல்றீங்களே, எல்லாருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யுது! ஏன், உனக்கு குறையில்லையா? உன்னை அப்பா கல்யாணம் செய்துக்கலையா? அப்பாவுக்கு குறையில்லையா? நீ அவரை கல்யாணம் பண்ணிக்கலையா? ஏன், எனக்கு குறையில்லையா?......."

" ஏன்டீ, பெரிய படிப்பு படிச்சவளே! கொசுக்கடியும் பாம்புக்கடியும் ஒண்ணாடீ? நமக்கு உள்ள குறைகள் சின்னது, வெளியே தெரியாது, பார்வையில்லேங்கறது, அப்படியாடீ?"

"அம்மா! ஒரு பெரிய வெள்ளை பேப்பரிலே, ஒரு மூலையிலே, ஒரு சின்ன கரும்புள்ளியை நீங்க பார்க்கிறீங்க, நான் அதைச் சுற்றி அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாயிருக்கிற, வெள்ளைத் தாளை பார்க்கிறேன். எதைப் பார்க்கணுமோ, அதை நாம பார்க்கிறதில்லே! உதாரணமா......"

" போதும், போதும்! உன் பிரசங்கத்தை வேறெங்கேயாவது வைச்சுக்கோ! எனக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு!"

அம்மா நகர்ந்ததும், சுவேதா சிரித்துக்கொண்டாள்.

நினைவலைகளில் ழூழ்கினாள். உலகத்துக்கே பெருங்குறையாகத் தெரிகிற அவனுடைய பார்வையில்லா குறை, தனக்கு மட்டும் அவனை சந்தித்த முதல் நாளிலிருந்து இன்றுவரை ஏன் குறையாகவே தெரியவில்லை?

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதற்கு, வேறொரு சந்தர்ப்பத்தில், அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

"சுவேதா! நம்மிடம் இருக்கிற ஏதாவது ஒரு பொருள் அல்லது சக்தி திடீரென இழந்துவிட்டால், அது நமக்கு குறையாகத் தெரியும், நியாயமும்கூட! எனக்குத்தான் பிறவியிலேயே பார்வையில்லையே, நான் எதையும் இழக்கவில்லையே, அதனால் பார்வையில்லாத குறை, மற்றவர்களுக்கு தெரிவதுபோல், எனக்கு குறையாகவே தெரியவில்லை! நீயே பார்க்கிறாய், பார்வையுள்ளவர்களைவிட, என்னால் திறமையாக பியானோ வாசிக்க முடிகிறது, அதைவிடு, நீ என்மீது காட்டுகிற பரிவும் பாசமும் செய்யும் ஜாலத்தினால் என்னால் உன் அழகிய தோற்றத்தையே பார்க்க முடிகிறது. உன் அழகை நான் உணர்ந்ததை, சின்ன கவிதையாக எழுதிப்பார்த்தேன், படிக்கிறேன், கேட்கிறாயா?"

சுவேதா, கண்களில் நீர் மல்க, அவனை அணைத்துக் கொண்டாள்.

" நயனீ! உன் பெற்றோர் உனக்கு பெயரிலேயே கண்களை தந்துவிட்டனர். பார்க்கத் தெரியாதவர்களுக்கு, இறைவன் கண்களை கொடுத்து, வீணாக்கிவிட்டான். ஒரு ரோஜாவைப் பார்த்து நீயும் நானும் அதன் அழகை ரசிப்போம், மற்றவர்களோ அதிலுள்ள முள்ளை பார்ப்பார்கள். அவர்களுக்கு பார்வையே வேஸ்ட்!.........."

"நீயும் அவர்களுடன் சேர்ந்துவிடாதே, சுவேதா! நாம் நிறைகளைப் பற்றி மட்டுமே பேசுவோம். உன்னை நினைத்து, நான் எழுதிய சின்ன கவிதையை, பாடிக் காட்டுகிறேன், கேள்!

அவளெந்தன் இதயத்தின் வேர்!

அவள்பெயரைச் சொன்னாலே, வாயெல்லாம் தேன்!

அவளெந்தன் உயிருக்குத் தேர்!

அவளோடு வாழ்கின்ற நாளெல்லாம் நான் பெற்ற சீர்!

எப்படியிருக்கு, சுவேதா?"

" நயனீ! நீ ஒரு அமுதக் கலசம்! தவிர, இசை உன் ரத்தம்! இரண்டும் இணைந்து தமிழில் கலந்து வரும்போது, இனிக்கத்தானே செய்யும்!

அது சரி, என்மீது உயிரையே வைத்திருக்கிறாயே, ஒருவேளை நான் உனக்கு கிடைக்காமல் போய்விட்டால், அதை உன்னால் தாங்கமுடியுமா?"

" சுவேதா! மறுபடியும் மறுபடியும் நீ மற்றவர்களைப்போல, நெகடிவ் ஆகவே பேசுகிறாய்! நீ என்னுடனேயே இங்கேயே இருந்துவிடு! நாம் எப்போதும் நிகழ்காலத்தில்தான் வாழவேண்டும். இந்த நிமிடம் நாம் சேர்ந்து மகிழ்வுடன் இருக்கிறோம், இந்த நேரத்தில் எதற்கு எதிர்மாறான எண்ணங்கள்? இரண்டாவது, என் சுவேதாவை என்னிடமிருந்து எவராலும் பிரிக்கமுடியாது. என் சுவேதா, உருவத்திலே இல்லை, நினைவுகளாய் இதயச்சுரங்கத்தில் வைரமாய் ஜொலிக்கிறாள். அந்த வைரத்தை யார் பறிக்கமுடியும்? மூன்றாவது,........."

"நயனீ! நான் சொல்கிறேன், சரியா என்று சொல்லு! நாம் எல்லோருமே மனதாலேதான் வாழ்கிறோம், கண்கள் ஓவியத்தைப் பார்த்தால், மனம் அந்த ஓவியத்தை தீட்டியவனைப்பற்றி, ஓவியத்திலுள்ள உருவம் எவருடைய சாயலாக உள்ளது பற்றி, அது என்ன விலை கொடுத்து வாங்கலாம் என்பது பற்றி, வாங்கினால் வீட்டில் எந்த இடத்தில் வைக்கலாம் என்பதெல்லாம்பற்றி நினைக்கும்! கண் பார்ப்பது ஒன்று, மனம் நினைப்பது வேறு! விழியிருந்தும் பார்வையற்றோர் நடுவே, நீ உன் மனதை விழிகளாக்கி என்னை என்றோ சொந்தமாக்கிக் கொண்டுவிட்டாய்! அதை பறிக்க ஒருவரும் பிறக்கவில்லை!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவைmadhumathi9 2019-02-14 07:46
wow nenchai thodum kathaigalai koduppatharkku :hatsoff: sir.great story. Anbu koduppathu perithaagivittathu tharppothu
:sad: but intha maathiri kathaigalai padikkum pothu anbu peruguthu.naamum karunaiyodu anbodu nadakka vendum endra ennam thondrugirathu. :clap: :clap: :thnkx: (y) :GL: sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவைRaVai 2019-02-14 09:04
Dear Madhumathi9,
I always find you receptive to new ideas contributing to the betterment of society at large.
Thanks for your compliments
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவைAdharvJo 2019-02-13 23:05
Sema positivity and unga social concern chance-a illa :hatsoff: rombha azhaga narrate seithu irukinga dialogues ellam soulful 👌👏👏👏 nayani Oda vision is heart touching and you have depicted him really well... :hatsoff: to his positivity 👌👍 of of course swathi too 👍 loved the complete package :yes: thank you and keep rocking uncle. Good night.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவைRaVai 2019-02-14 09:01
Thanks Adharava Jo! Your profuse praise catapults me into thin air!
Keep supporting me!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவைAdharvJo 2019-02-14 12:54
Profuse praise huh??? Chance-a illainga uncle. Your article deserves it. I have read qte a good number of articles....I should say this was more close my heart feelings. Right from parents stand point to kids it was very much justifiable. :yes: there was no place for sympathy that was something which I would highlight here. :-)

Keep writing and enrich readers with more valuable messages. (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்புச் செல்வம்! - ரவைRaVai 2019-02-14 15:26
Thanks a lot, dear Adharva Jo!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top