Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவை

sad-eyes

ற்று வித்தியாசமாக, என் பிறந்தநாளை, இந்த ஆண்டு கொண்டாடலாமே என்ற எண்ணத்தில், முதியோர் இல்லத்தில் உள்ளோருக்கு அன்று மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தேன்.

இப்படியொரு அதிசயமான, அற்புதமான அனுபவம் காத்திருப்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை!

காலை பத்து மணிக்கு என் மனைவியுடன் அங்கு போய்ச் சேர்ந்தேன்.

தலைவர், என்னை மாலை அணிவித்து வரவேற்றார். பிறகு, அங்கு வாழ்ந்துவரும் இருபது முதியோர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.

கணவன்-மனைவி தம்பதியாக மூவர், எட்டு பெண்கள், ஆறு ஆண்கள்!

மொத்தம் இருந்த பத்து அறைகளில், அறைக்கு இருவராக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

நானும் என் மனைவியும் தலைவரிடம் சொன்னோம்.

" ஐயா! மதிய உணவு நேரத்துக்கு இன்னும் மூன்றுமணி அவகாசம் இருக்கு, நீங்க உங்க வேலையை கவனிங்க! நாங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு அறையாகச் சென்று முதியவர்களிடம் கொஞ்சம் ஆறுதலாக பேசுகிறோம்......."

" ரொம்ப சந்தோஷம்! அவங்க இதைத்தான் ஆவலா எதிர்பார்க்கிறாங்க! சிலபேர், மனமுடைந்து விரக்தியில் நொந்துபோய் புத்தி பேதலித்து தாறுமாறாக பேசுவார்கள், இன்னும் சிலர், தங்களை இப்படி அனாதையாக்கிவிட்ட பெற்ற பிள்ளைகளை குறைகூறுவார்கள். ஓரிருவர் பேசுவதேயில்லை, மன இறுக்கத்தில் மௌனமாகிவிட்டனர். ஒவ்வொருவரிடமும் ஒரு பத்து நிமிஷம் பேசினாலே, மூணுமணிநேரம் ஆகிவிடும்............"

" ரொம்ப நன்றி! நாங்க பார்த்துக்கறோம்........"

அவர் நகர்ந்ததும், நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம்.

" முதல்லே, மூணு தம்பதிகளை பார்ப்போம். ஒருமணி நேரம் ஆகும். பிறகு, மற்ற பதினான்கு பேரிலே, எட்டு பெண்களை நானும் மீதியுள்ள ஆறு ஆண்களை நீங்களும் சந்திப்போம். நீங்க ஒவ்வொருவரிடமும் இருபது நிமிஷம் பேசுங்க! நான் ரெண்டு மணி நேரத்திலே, எட்டு பெண்களோடு பேசிமுடித்தால், மதிய உணவு நேரம் வந்துரும்......"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தம்பதிகளாக வாழ்ந்த மூன்று ஜோடிகளும் தங்களை சமாதானப்படுத்திக்கொண்டுவிட்டது, அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. மனதிலுள்ள துயரத்தை பகிர்ந்துகொள்ள கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கூடவே இருந்தது பெரிய ஆறுதலைத் தந்தது. இருந்தாலும், பெற்ற பிள்ளைகள் வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ்கையில், நாம் மட்டும் கையேந்தவேண்டியிருக்கிறதே என்ற விசனம் இல்லாமலில்லை!

பிறகு, தனியாக வாழ்பவர்களை சந்தித்தோம்.

அப்பப்பா! எத்தனை வித வித்தியாசமான அனுபவங்கள்!

ஒருவருக்கு புத்தி பேதலித்துவிட்டது. அவருக்கு சுற்றி நடப்பது எதுவுமே புரியவில்லை! ஆங்கிலமும் தமிழும் கலந்து வசைமாரி பொழிந்தார்! அவரிடம் என்ன பேசமுடியும்!

இன்னொருவர் புலம்பியது, நெஞ்சை உலுக்கியது.

" ஐயா! பெற்ற பிள்ளைகள்னு கையிலே இருக்கிற காசை அவங்களிடம் கொடுத்து என்னைப்போல ஏமாந்நுவிடாதீங்க! ஒரு ரூபா, ரெண்டு ரூபா இல்லைய்யா! ஒரு கோடி ரூபாய்! வியாபாரத்துக்கு தேவை, இந்த பணத்தை வைத்து பல கோடி சம்பாதித்து எனக்கு சலவைக்கல்லிலே மாளிகை கட்டித்தரேன்னு, வாங்கிண்டாங்க! பிறகு பேச்சுமூச்சு இல்லே, என்னடா ஆச்சுன்னு கேட்டா, கூட்டாளி ஏமாற்றிட்டதா கதை சொல்லி என்னை ஏமாற்றிட்டாங்க, என்னை அம்போன்னு நடுத்தெருவிலே நிறுத்திட்டு, குடும்பத்தோட வெளிநாட்டிலே செடிலாயிட்டாங்க! மனசாட்சியே இல்லாம எப்படி அவங்களாலே நடந்துக்க முடியறதுன்னு அதிர்ச்சியிலே, என் மனைவி மேலே போயிட்டா! எனக்குத்தான் இன்னும் நேரம் வரலை!"

அடுத்தவர் துயரம் சற்று வேறுபட்டது.

" தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை, எங்கள்மீது உயிரையே வைச்சிருந்தான், அம்மாவை கடைக்கு அழைத்துப்போய் நகைவாங்கித்தர ஸ்கூட்டரிலே ரெண்டு பேருமா போனாங்க, எதிரே வந்த லாரியை ஓட்டின குடிகார டிரைவர் இவங்கமேல மோதி சாகடிச்சிட்டான், ரெண்டுபேரையும்! எனக்கோ புற்றுநோய்! வேற வழியில்லாம, இங்கே வந்துசேர்ந்தேன்."

இதே போல என் மனைவியும் பெண்களின் சோக்க்கதைகளை கேட்டு இதயம் நொறுங்கி வந்து எதிரே நின்றாள்.

தலைவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

" இருபது பேரையும் பார்த்தாச்சா? இப்ப, இருபத்தோராவது நபரா, ஒருவரைப் பார்க்கப்போறீங்க, வாங்க!"

சற்று தள்ளியிருந்த அந்த அறைக்குள் அழைத்துச் சென்றார்.

நானும் மனைவியும் அதிர்ச்சியில் உறைந்துபோனோம்!

இருபத்தைந்து வயதிருக்கலாம், அவனுக்கு!

ஒரு மர பெஞ்சிலே படுத்திருந்தான். அவன் இடுப்பிலிருந்து ஒரு ரப்பர் டியூப் கீழேயிருந்த பாட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. 

இளைஞன் எங்களைப் பார்த்து சிரித்து கை கூப்பினான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைkarna 2019-02-24 20:50
மிக ஆழமான கதை ஐயா.peak of positivity.சின்ன சின்ன சருக்கல்களுக்கே இறைவனை கழுவில் ஏற்றும் மாந்தரகளுக்கு சவுக்கடி.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைRaVai 2019-02-25 06:01
மிக்க மகிழ்ச்சி! வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்பதுபோல, தங்கள் பாராட்டு இனிக்கிறது! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைabimahesh 2019-02-23 21:23
Rombha Kashtama and Heart touching Story Sir!!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைRaVai 2019-02-25 06:37
மிக்க நன்றி, அபிமகேஷ்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைAdharvJo 2019-02-22 17:12
Spirit of Positivity :yes: There is no pointing in blaming anyone which in-fact let's us down :yes: (pain of defeat, cheated)
well narrated uncle :clap: :clap:
:hatsoff: to the people who run such charity drives. May god bless them.
bitter trust even in the name orphanage there are ppl who loot money heartlessly steam
Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைRaVai 2019-02-22 17:29
Dear Adharva Jo!
Missed you for the last two days! Afraid you wwere unwell.
Greatly relieved to see your comments. I want to convey that ight perception of men and matters would solve lot of issues. Thanks, Jo!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைAdharvJo 2019-02-22 18:48
Quoting RaVai:
want to convey that ight perception of men and matters would solve lot of issues. Thanks, Jo!
very true. And i note that your trying to prove this in all your articles uncle (y)

I am doing good now. Thank you 😎
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைRaVai 2019-02-22 19:34
Happy you are back to normal
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைmadhumathi9 2019-02-22 17:01
:sad: manathai urukka koodiya kathai.antha ilaignan solvathupol iraivanin anbuvellathai purinthukolla manithanaal mudivathillai facepalm.enna seivathu :Q: thannai unarnthaalthaane iraivanin thiruvilaiyaadalgal namakku puriyum.adhu avvalavu sulabamaanatja? Theriyavillai. :clap: :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைRaVai 2019-02-22 17:35
Dear Madhumathi9!
நன்றி! இது உண்மையான நிகழ்ச்சி, பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன்.
இறைவனின் இடைவெளியற்ற அன்பை புரிந்துகொள்ள நாம் நமது அகங்காரத்தை, தன்முனைப்பை, கைவிடவேண்டும். நிகழ்ச்சிகளை உதிரியாக பொருள்கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைhari k 2019-02-22 14:54
Really touched sir,,, (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - இறைவன் செய்த கொடுமை! - ரவைRaVai 2019-02-22 17:24
Thanks, Hari!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top