Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவை

god

கையில் வால்மீகி ராமாயணம் புத்தகத்துடன் மைதிலி பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த கார்த்தி, அவளிடம் ஏதோ சொல்லவேண்டுமென விழைந்தார். 

அதில் ஒரு சங்கடம்! அவர் அவளை அழைத்தால், மைதிலிக்குப் பிடிக்காது. ஒரு நல்ல காரியம் துவங்கும்போது, அழைப்பது அபசகுனமாக நினைத்து, கோபம் கொள்வாள்.

" சேகர்! ஆபீஸ் கிளம்பிட்டியா, சாமி கும்பிடலையா?"

மைதிலியின் காதில் விழுந்ததும், அவளே எழுந்து வந்தாள்.

" நல்லவேளை! நீங்க ஞாபகப்படுத்தினீங்க! இல்லேன்னா, நான் சுந்தர காண்டம் படிக்க ஆரம்பிச்சிருப்பேன், சேகர் சாமி கும்பிடாமலே கிளம்பியிருப்பான்......"

வீடு பெரிதாக இருந்தாலும், வரவேற்பறை விசாலமானதாக இருந்தாலும், பெட்ரூம்கள் பெரிதாக இருந்தாலும், ஏன், லம்பர் ரூம் கூட பெரிதாக இருந்தாலும், பூஜையறை மட்டும் நாலடிக்கு நாலடி சதுரம்தான்!

மனிதர்கள் தங்கள் சௌகரியங்களுக்குப் போக மிச்சமுள்ள இடத்தைத் தான் இறைவனுக்கு ஒதுக்குவார்கள்! நல்ல வியாபாரிகள். குறைவான முதலீட்டில், உலகையே வளைத்துப்போடுகிற அளவுக்கு லாபம் பெறும் பேராசை!

பூஜையறையில், ஒருவர் மட்டுமே உள்ளே தாராளமாக போய்வரலாம்.

அதனால்தான், மைதிலி மகனுக்கு வழிவிட்டு, வெளியே வந்தாள்.

" அப்பா! கூப்பிட்டியா?"

"ஆமாம், நீ ஆபீஸ் கிளம்பும்போது, தினமும் சாமி கும்பிடுவியே, வரலியான்னு கேட்டேன்........."

" அப்பா! நீ ரிடையராயிட்டதனாலே, உனக்கு விடுமுறை நாட்களே தெரியலே, இன்னிக்கு கிறிஸ்மஸ்! ஆபீஸ் லீவு!"

" ஓ! அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு! அம்மாவுடன் ஜாலியா பேசிண்டிருப்போம். சேகர்! அம்மா இப்ப சுந்தர காண்டம் படிக்கப்போறா, எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?"

" வேறெதுக்கு? எல்லாம் நம்ம கடைக்குட்டி சேகருக்கு கல்யாணம் சீக்கிரமா நடக்கத்தான். நாலு கழுதை வயசாயிடுத்து.........."

" என்னம்மா! ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கழுதைன்னு கலாய்க்கத்தான் கூப்பிட்டீங்களா?"

" சாரிடா! மைதிலி! என்ன இருந்தாலும், நமக்காக முப்பத்தைந்து வயசாகியும் கல்யாணம் செய்துக்காத தியாகியை நீ கழுதைனு சொன்னது, தப்புத்தான்!........"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மூளை கழண்டுபோச்சா? நான் அவனை எப்ப கழுதைன்னு சொன்னேன்! அவனுக்கு வயசாயிடுத்துன்னு சொன்னேன், அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு விரதம் இருந்து சுந்தர காண்டம் 45 நாள் படிக்கப்போறேன், கடவுளை வேண்டிக்கப்போறேன், என் பிள்ளைக்கு சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிவைன்னு!"

" சேகர்! இவதான்டா அம்மா! உனக்கு நல்லது நடக்க என்னென்ன பண்றா, பார்!"

" அப்பா! அம்மாதான் தாய்ப்பாசத்திலே, அவசரப்படறான்னா, நீயும் அதை ஆதரிக்கிறியே, இப்ப பார்! அம்மா! இப்ப சொல்லு! நீ என்ன கடவுளிடம் வேண்டிக்கப்போறே?"

" என் பிள்ளைக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிவைன்னு......."

" ரெண்டு பேருக்கும் நிஜமா நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்றேன், என்கூட வேலை செய்கிறவனை, மும்பைக்கு மாற்றினாங்க, அவன் பிள்ளைங்க இங்க படிக்குது, அவன் மனைவி இங்கே வேலை பார்க்கிறா, அவன் கடவுளை வேண்டினான், வெறி பிடித்தாமாதிரி, " கடவுளே! எப்படியாவது என்னை மறுபடியும் சென்னைக்கு மாற்ற அருள் செய்!" னு வேண்டினான்"

" பாவம்! அவன் கஷ்டம் அவனுக்கு! கரெக்டா கடவுளை வேண்டிக்கிட்டான்."

" அம்மா! கடவுள் நீ என்ன வேண்டிக்கிறியோ, அதை கரெக்டா கொடுப்பார், இல்லையா? அவன் மனசிலே உள்ளது வேறே, வேண்டிக்கொண்டது வேறே!"

" இல்லையே, கரெக்டா தானே, வேண்டிக்கிட்டான்...."

" சரி, நானே சொல்றேன், அவன் மனசிலே இருந்தது, சென்னைக்கு அவனை ஆபீஸ் அதிகாரிங்க வழக்கம்போல, மாற்றணுங்கறதுதானே, ஆனா, கடவுளை கேட்டது, என்ன? 'எப்படியாவது' மாற்றணும்னு கேட்டதனாலே, கடவுள் அவருக்குத் தெரிந்த வழியிலே, ஒரே வாரத்திலே, அவனுக்கு மாற்றம் வாங்கிக் கொடுத்தார்......."

" எப்படி?"

" அவன்தான் எப்படியாவதுன்னு சொன்னதுனாலே, கடவுள் என்ன பண்ணினார், அவனை ஒரு சாலை விபத்திலே சிக்க வைத்து, இடதுகாலில் எலும்புமுறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து, நொண்டி நொண்டி நடக்கும்படியா ஆயிடுத்து. அவன் வேலையோ, கடை கடையா ஏறி இறங்கற சேல்ஸ்மன் வேலை! அந்த வேலைக்கு லாயக்கில்லாம போனதாலே, ஒரு வாரத்திலே அவனை சென்னைக்கு மாற்றிவிட்டாங்க. தான் அவசரப்பட்டு தப்பா வேண்டினது, அவனுக்கு பிறகுதான் புரிந்தது....."

" மை காட்! கடவுள் எல்லாம் தெரிந்தவராச்சே! இப்படி பண்ணலாமா?"

" கடவுளுக்கு எல்லாம் தெரியும், நமக்கு நல்லதுதான் பண்ணுவாருன்னு தெரிந்தும், ஏன் நாம், "கடவுளே அதைக் கொடு, இதைக் கொடுன்னு" கேட்கிறோம்?"

" சேகர்! நீ சொல்றதை நான் ஏத்துக்கிறேன்! அம்மா வேண்டுதல், சரியா, தப்பா? அதைச் சொல்லு!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைkarna 2019-02-27 16:42
அருமையான பதிவு ஐயா...அன்னையாய்அந்த மாசக்தியை நம்பினாலே போதும்.வாழ்வும் சுமையாகாது.நன்றி மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைRaVai 2019-02-27 20:58
மிக்க நன்றி, கர்ணா! என்னை புரிந்துகொண்டுவிட்டீர்! Enjoy!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைabimahesh 2019-02-27 07:59
Nice Story Sir!! Much needed philosophies now.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைRaVai 2019-02-27 08:30
Dear Abhimahesh!
Thanks!
The moment you call it philosophy, people will distance themselves away!
In fact, it is a practical guide for a happy life, culled out of my own 83 years of experience!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைabimahesh 2019-02-27 11:50
Yes Sir!! I do agree :thnkx:
:eek: Sir, you have 83 years of experience.. Wow, Great
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைmadhumathi9 2019-02-26 18:43
:clap: :clap: arumaiyaana kathai.ippo ulla avasara kaalathirkku kandippaaga intha kathai miga avasiyamaana ondru thaan.mikka mikka nandri. (y) :hatsoff: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைRaVai 2019-02-26 18:50
அன்புள்ள மதுமதிம்மா!
மிக்க நன்றி!
கூடுமானவரையில் நடைமுறைக்கு பயன்படுகிற கருத்துள்ள கதைகளை தருவதே என் ஆசை!
தாமதமின்றி நீங்கள் பாராட்டும்போது, மனது நிறைவாயுள்ளது! தொடர்ந்து ஆதரியுங்கள், பிறருக்கும் நல்ல கருத்துக்களை உங்கள் வழியில் பரப்புங்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைAdharvJo 2019-02-26 15:07
Azhaga project seithu irukinga uncle 👏👏👏 it was really cool 👍 as u said certain things are beyond our call....we just got to follow the flow and I agree to u idhu therinjalum thinking will be on progress :yes: naladhey ninaipom.naladhey seivom...hope for the best!! Thank you for ur valuable story. Keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தெரிந்து கேளுங்கள்! - ரவைRaVai 2019-02-26 16:47
Dearest Adharva Jo!
நான் படிக்கிறதுக்கு முன்பே, நீ படித்து, ரொம்ப அழகா பாராட்டி என்னை மகிழ்விக்கிற உன் அன்பை, கடவுளின் அன்பாக மதிக்கிறேன். நீயும் உன் குடும்பமும் மிகச் சிறப்பாக வாழ பிரார்த்திக்கிறேன். நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top