Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

இரண்டு நாட்கள் கழித்து, அந்த நண்பன் பிருத்விக்கு போன் பண்ணி அன்றுமாலை பனகல் பூங்காவிலே சந்திக்கலாமென்றான்.

என்ன விஷயம் எனக் கேட்டதற்கு, '"அந்தப் பெண்ணைப்பற்றி ரொம்ப ருசிகரமான தகவல் கிடைச்சிருக்கு, வீட்டிலே பேசினா, தங்கை சண்டைக்கு வருவா, அதனால்தான் பார்க்கிலே......'"

மிகுந்த ஆவலுடன், பிருத்வியுடன் நானும் ஓடினேன்.

"பிருத்வீ! நீ வந்தபோது, என் தங்கை உன்னிடம் ரொம்ப கோபமா பேசினதை கேட்டதிலிருந்து, உன்னைப்போல, எனக்கும் இதிலே ஏதோ மர்மம் இருக்குன்னு தோணித்து! அதனாலே, என் தங்கையை அவளுக்கு தெரியாம, உளவு பார்த்தேன். அவ, தினமும், அந்தப் பெண் ரீடா வீட்டுக்கு மாலை ஆறுமணிக்கு போய்ட்டு, ஒன்பது மணிக்குத்தான் திரும்பறா! 

ரீடா வீட்டுக்கு மாலையிலே நிறைய வயசுப்பெண்கள் வராங்க, மணிக்கணக்கா ஏதோ பேசறாங்க, எல்லோருக்கும் ரீடாதான் லீடர்னு நினைக்கிறேன். அப்படி என்ன பேசறாங்கன்னு துப்புத் துலக்கினேன்.

பொதுவா, பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு, நாட்டில் நடக்கிற பெண்கள் விரோத அட்டூழியங்கள் பற்றி தீவிரமா விவாதிக்கிறாங்க!

இதுக்கு ஏன் ரகசியம்னு, எனக்கு சந்தேகம் வந்தது!

என் தங்கை ரூமிலே, அவளுக்கு தெரியாம நோட்டம்விட்டேன், இதோ பார்! இந்த ரகசிய சுற்றறிக்கை கிடைச்சுது! படிச்சேன் அதை, இந்த மாதிரி எனக்குத் தெரிந்து நாட்டிலே இன்னொரு இயக்கம் கிடையாது!

சில்ஸீயிலே, தேவினு ஒரு பெரிய ரைட்டர் சமீபமா ஒரு தொடர்கதை எழுதறாங்க, அதிலே வர கதாநாயகியைப்போல, இருக்காங்க, ரீடா! அப்பப்பா! இந்த நாட்டிலே அரசியல் விடுதலை, சமுதாய புரட்சி, கலாசார விழிப்புணர்ச்சி போராட்டங்களிலே, பெருவாரியா ஆண்கள் கலந்துகொள்கிறதுதானே வழக்கம். ஆனா, இந்த புது இயக்கம் பெண்கள் மட்டுமே ரகசியமா நடத்துகிற முன்னோடி இயக்கம்! விவரங்கள், இந்த ரகசிய சுற்றறிக்கையிலே இருக்கு! நீயே பாரேன்!"

அவர் கையிலிருந்து பிடுங்காத குறையாக, பிருத்வீ தாவிப் பறித்தான், அதை!

" பிருத்வீ! நீ உரக்கப் படி! நாங்க தெரிஞ்சிக்கிறோம்."

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பிருத்வீ படித்தான்:

நிர்பயா மாதர் விடுதலை இயக்கம்!

பாரத் என்கிற இந்தியாவில் எத்தனையோ இயக்கங்களும் புரட்சிகளும் நடந்து, அரசியல் விடுதலையும், சமுதாய மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும், அதன் பயன்கள் சிந்தாமல், சிதறாமல், ஆண்களுக்கு முழுக்க முழுக்க சாதகமாக அமைந்து ஆண்வர்க்கம் அவைகளை அனுபவித்து வருகிறதே தவிர, பெண் வர்க்கத்துக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்பதோடு, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக, காம விளையாட்டு பொம்மைகளாக, ஆண்கள் அலட்சியமாகவும் பயமின்றியும் கருதி நசுக்கி, கசக்கி, பிழிகிற மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது!

நூற்றுமுப்பது கோடி இந்திய மக்கட்தொகையில், சரிபாதிக்குமேல் உள்ளவர்கள், பெண்கள்! உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக, எழுபது ஆண்டுகளில், ஒரு பெண் இதுவரை அமர்ந்ததுண்டா? இந்திரா காந்தியைத்தவிர, பிரதமராக, ஒரு பெண் வந்ததுண்டா? பதவிகள் மறுக்கப்படுவதை விடுங்கள்! குறைந்தபட்சம் நிம்மதியாக வாழவிடுகிறார்களா? பஸ்ஸில் பயணம் செய்தால், கிழவனிலிருந்து குமரன் வரை, கூட்டத்தில் அருகிலிருக்கிற பெண்ணின் உடலை, தொடக்கூடாத இடங்களில் தொடாதவர் உண்டா? ஆட்டோவிலோ, டாக்ஸியிலோ, தனியாக பயமின்றி ஒரு பெண் போகமுடியுமா? பாரத மாதா, இந்தியத் தாய், தமிழ்த் தாய், என்றெல்லாம் பெண்களை பெருமைப்படுத்துவதுபோல, வேஷம் போடுவார்கள். நடைமுறையிலோ, எல்லோரும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறதை, சர்வசாதாரணமாக செய்கிறார்கள். 

தப்பித் தவறி ஓரிரு பெண்கள் துணிவுடன் காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொண்டால், நடுவீதியில், ரயில்வே ஸ்டேஷனில், பட்டப் பகலில், வெட்டப்படுகின்றனர். வெட்டியவனை பிடித்து, தண்டனை வாங்கித் தருவதற்குள், அதைப் போன்ற கொலைகள் ஓராயிரம் நடந்துவிடுகின்றன. 

திரும்பத் திரும்ப, இவற்றை புலம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, பெண்கள் இத்தகைய அக்கிரமங்களை தடுத்து நிறுத்த உடனடியாக செயலில் இறங்கவேண்டும்.

சுதந்திர போராட்டத்தின்போது, நேதாஜி படை திரட்டி போர் தொடுத்தார். வாஞ்சிநாதனும், பகத் சிங்கும், துப்பாக்கி ஏந்தினர். ஜான்சி ராணி ஆயுதம் தாங்கி எதிரிகளை கொன்று குவித்தாள். எல்லாம் நாட்டு விடுதலைக்காக அவசியமாயிருந்தது.

இப்போது, அத்தகைய சூழ்நிலை, பெண் விடுதலைக்காகவும், தற்காப்புக்காகவும், அமைந்துள்ளதால், நாமும் எல்லா முறைகளிலும் போராடுவோம்.

பயிற்சி தர, கராத்தே வகுப்பு, மல்யுத்தப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், யாவும் ஏற்பாடு செய்வோம். ஒரு தலைமுறை, நாம் நமது தனிப்பட்ட வாழ்வை, குடும்ப நலனை, இன்பங்களை தியாகம் செய்வோம். இதை தற்கொலைப்படை என்றழைத்தாலும் தவறில்லை.

நமது லட்சியம், அடுத்த தலைமுறை பெண்களாவது கௌரவமாக ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக, இல்லை, ஆண்களைவிட உயர்ந்தவர்களாக, வாழ வழி வகுப்போம்.

இது ரகசியமாக இருக்கட்டும். ஆண்களுக்குத் தெரிந்தால், நம்மை முடக்கிப்போட, பல வழிகளில் முயல்வார்கள்.

ஒன்று சேருவோம்! வெற்றி பெறுவோம்!!

பிருத்வி மூச்சிரைக்க படித்து முடித்துவிட்டு, தலை நிமிர்ந்தான்.

ரீடாவின் அழகும் கவர்ச்சியும் மறைந்துபோய், சூலம் தாங்கிய வீரமாதேவியின் சீற்றம் கண்முன் நின்றது!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைAbiMahesh 2019-03-23 16:03
Nice Story Sir !! :hatsoff: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைரவை 2019-03-24 20:41
Thanks Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைmadhumathi9 2019-03-21 18:39
wow kadaisiyil aangalukku aappu kidaithu vittathu pola :grin: :clap: naan indiavil irukkum pozhuthu busla pogumpothu intha maathiri ellam anubavithu irukkirom.nalla aangalukku vanakkathai therivikkalaam.araajagam pannugira aangalukku veru maathiri thaan kaanbikkanum.azhagu aabathu enbathai ippadiyum :hatsoff:sollalaam polirukku :clap: nice story. :GL: sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைரவை 2019-03-24 20:40
Dear Madhumathi9
ம்மிக்க நன்றி! கடல்கடந்து வாழினும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மறக்காமல் வளர்ப்பது பெரிய தொண்டு! தலை வணங்குகிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைhari k 2019-03-21 18:03
Very impressed in your story sir.....A very good idea to step up an new generation..they way of your approach and thinking is awesome sir :clap: :clap: :hatsoff: Keep rocking....Thanks to write a story like this....
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைரவை 2019-03-24 20:37
Dear Hari,
Thanks a lot! Looking at the prevailing situation in the country, I have a duty to whip up the courage of women to face the ordeal!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைAdharvJo 2019-03-21 15:38
Well, I liked the way you narrated the story...it was very interesting, Uncle :clap: :clap: Also like the concept of equipping women with required skills to protect herself and live a dignified life. Its a good initiative-n sollalam but men are also supposed to be educated how to respect women. Rita, would have definitely had a clear idea abt the intensions of the men who approached her...she could have taken a little effort to break their negative thoughts...certainly ivanga ellam thirndhuvangalan theriyala..try kodukalam :-) thank you and keep rocking.

*Devi ma'am heroin mind la vachi eduthadhalam ok uncle, how abt prithvi :D ungala prince prithvi innum impress panala pole irukke ;-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவளின் மறுபக்கம்! - ரவைரவை 2019-03-24 20:35
ரொம்ப மகிழ்ச்சி! என்னை உற்சாகப்படுத்த என் கதைகளை படிக்கிற நாலைந்து பேரில், நீர் முக்கியமானவர்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top