Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவை

reservations

ந்த மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தின் தலைமை அலுவலகமே, அடுத்த சேர்மனாக யார் தேர்ந்தெடுக்கிறப்படுகிறார் என்கிற மத்திய அரசின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

ஏனெனில், அந்தப் பதவிக்கு சீனியாரிடி முறைப்படியும், தகுதி அடிப்படையிலும், முற்றிலும் பொருந்திய கீர்த்திவாசனுக்கு கிடைத்துவிடும், எனும் நம்பிக்கையில் உடனடியாக, பெரிய பாராட்டுவிழா நடத்த ஊழியர்கள் அனைவரும் துடித்துக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக, கீர்த்திவாசனால் பயிற்சிவிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்ற மாரிசாமி, விழாவுக்கு மண்டபத்தை உறுதிப்படுத்தியதோடு, நகரத்தின் பெரும்புள்ளிகளுக்கும் விழாவில் கலந்துகொள்ள தொலைபேசியில் அழைப்பு விடுத்துவிட்டார்.

அகில இந்திய ஸ்தாபனமானதால், கிளை அலுவலகங்களிலிருந்தும், நிர்வாகிகள் கலந்துகொள்ள ஏற்பாடு ஆகிவிட்டது. 

பாராட்டுரை தயாரிக்கப்பட்டு தங்கபிரேமில் பொருத்தியாகிவிட்டது.

தேநீர், சிற்றுண்டிக்கு ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. வளைவுகளும், தோரணங்களும் தயாராகிவிட்டன.

எந்தநேரமும் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்ப்புடன், மாரிசாமி சுற்றுச் சுற்றி வந்துகொண்டிருந்தார்.

" கீர்த்திவாசனைப் போல ஒரு நல்ல மனிதர், ஒரு திறமைசாலி, அனுபவம் நிறைந்த நிர்வாகி, முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து ஸ்தாபனத்தை நவரத்னா கம்பெனிகளில் ஒன்றாக மாற்றிய பெருமைக்கு உரியவர், உடன் பணியாற்றுவோருக்கு அன்பு, மரியாதை, ஊதிய உயர்வு, உற்சாகம் தரக்கூடியவர் எங்களுக்கு சேர்மெனாக கிடைப்பது நாங்கள் செய்த பேறு!"

என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

மாரிசாமியின் ஏற்பாடுகள் எதுவும், கீர்த்திவாசனுக்கு தெரியாது. அவர் ஒரு பிஸினஸ் மாநாட்டுக்காக, அமெரிக்கா சென்றிருக்கிறார். இன்று மாலைதான் திரும்புகிறார்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்தக் கம்பெனியில் வேலைக்காக மனுப் போட்ட மாரிசாமியை, எதிர்காணல் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த கீர்த்திவாசன் பெரிதும் பாராட்டி ஆதரித்தார்.

மாரிசாமியின் அதிர்ஷ்டம், கீர்த்திவாசன் தலைவராக இருந்த பிரிவிலேயே அவனை அமர்த்தினார்கள்.

அவனுக்கு நேரடியாக வேலை கற்றுக்கொடுத்ததோடு, தன்னம்பிக்கையையும் அடக்கத்தையும், பேசும் திறனையும் ஊட்டினார்.

கீர்த்திவாசனுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பதற்குள், அவர் சிபாரிசில் மாரிசாமிக்கு இரண்டு பதவி உயர்வு கிடைத்துவிடும். இப்படி தொடர்ந்து, இருபது ஆண்டுகளாக, கீர்த்திவாசனின் ஆதரவினால், இந்த ஆண்டு மாரிசாமி டைரக்டர் ஆகிவிட்டான். கீர்த்திவாசனோ, ஆறு வருடமாக டைரக்டராக இருக்கிறார். காரணம், சேர்மனாக இருக்கிற தாமஸ் இந்த ஆண்டுதான் ஓய்வுபெறுகிற வயதை அடைந்தார்.

கீர்த்திவாசனுக்கும் ஓய்வுபெற, இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் உள்ளன.

சேர்மன் தாமஸைவிட, ஊழியர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவர், கீர்த்திவாசன். ஏனெனில், அவர் கடைநிலை ஊழியரிலிருந்து சேர்மன் வரை யாவரையும் உயர்வுதாழ்வின்றி நடத்துவார். எல்லோரையும் உற்சாகப்படுத்துவார். கடிந்து பேசியதேயில்லை.

ஒருமுறை, மாரிசாமி வீட்டிலிருந்து சர்க்கரைப் பொங்கல் எடுத்துவந்து, தன்னுடன் வேலைசெய்வோருக்கு பகிர்ந்தளித்தான். தலைகுனிந்து நீட்டிய கரங்களில் பொங்கலை அளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கரம் சற்று அதிகமாக கேட்டது, நிமிர்ந்து பார்த்தான்,மாரிசாமி!

கீர்த்திவாசன்! 

" சார்! நீங்களா!"

" ஏன் பதட்டப்படறே? நான் சாப்பிடக்கூடாதா?"

" அதில்லே, ......இது....எங்க....வீட்டிலே ......சமைத்தது........"

" புரிகிறது, மாரி! நீ தவிக்கிறதுக்கு காரணம்! எனக்கு சாதி, மத பேதமெல்லாம் கிடையாது, சுத்தமாகவும் அன்புநிறைந்த உள்ளத்தோடு தரப்பட்டதாகவும் இருந்தால் போதும். ஒருநாள் உன் வீட்டுக்கே வந்து சாப்பிடுகிறேன், பார்! நீதான் அழைக்கமாட்டேன் என்கிறாய்!"

மாரிசாமி அவர் கால்களைத் தொட கீழே குனிந்தான். அவர் நகர்ந்து வெளியேறிவிட்டார்!

" மாரிசாமி! மத்திய அமைச்சரின் சீஃப் செக்ரடரி சோமய்யா உன்னோட பேசணுமாம், லைன்லே இருக்கார், உடனே வா!"

மாரிசாமிக்கு ஆச்சரியமாயிருந்தது, எதற்காக அவர் தன்னோடு பேசவேண்டும்?

இருந்தாலும், அழைத்தால், பேசாமலிருக்கமுடியுமா?

" மாரிசாமி! அமைச்சர் உங்களோடு பேசணுமாம், நாளை காலை பத்து மணிக்கு அபாயிண்ட்மெண்ட்! ஃபிளைட்டிலே உடனே கிளம்பி டில்லிக்கு வாங்க!"

மாரிசாமி உடனே கீர்த்திவாசனை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தான்.

" சார்! எதுக்கு சார் என்ன கூப்பிடறாரு, அமைச்சர்?"

" எல்லாம் நல்ல சமாசாரம்தான்! அவர் எது சொன்னாலும், ஒப்புக்கொண்டுவிடு! என் வாழ்த்துக்கள்!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவைரவை 2019-03-24 20:43
இதயத்தை தொட்ட அருமையான விமரிசனம்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவைmadhumathi9 2019-03-21 15:22
wow really really great story sir.padathil paarppathu kathaiyil ketppathu mattumillaamal unmaiyilum nadakka vendum enbathey perumballor ennamaaga irukkum endru ninaikkiren. :hatsoff: sir.ini idhupola maaravendum endru praarthippom. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top