(Reading time: 5 - 9 minutes)

சிறுகதை - முதல் பயணம் - ஷாலினி

travel

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (மாலை 3.45) :

கவிதா மேம் ஏன் இப்படி பண்ணுணாங்க. இதுக்குத் தான் காலேஜ்ல ஓவரா கெத்து காண்பிக்கக் கூடாதுங்கறது. இங்க ஒரு முகம் கூட தெரிந்தது போல இல்லையே 46 பேர் 16 பொண்ணுங்க 30 பசங்க. பார்த்தவுடனே ஸ்மைல் பண்ணுறது ஒரு 3 பொண்ணுங்க அதில் 2 பேர் மதுரைல இருந்து கூட வருபவர்கள் பசங்க ஒரு 6 பேர் அவர்களும் மதுரையில் இருந்து கூட வருபவர்கள் ஆனால் அனைவரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். ஆஹா இந்த பசங்கள பார்த்தா சினிமால வர்ற அடியாளுங்க மாதிரியே இருக்காங்களே. பிள்ளையாரப்பா என் கூடவே இருங்க. கண்மணி மனதில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அது ஒரு என்சிசி கேம்ப் செல்ல திரண்டிருந்த மாணவர் கூட்டம். நாகாலாந் மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அம் மாநிலத்தின் அமைதித் தன்மையை பறைசாற்றவே ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் உடல் மற்றும் மன வலிமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். எனவே மாணவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களாகவே இருந்தனர்.

கண்மணி உன்னை சீனியர் ராஜா வரச்சொன்னார் - பிரபு.

என்ன எதுக்கு டா அவன் வரச்சொன்னான்.

ஏய் மெதுவா பேசித்தொல சீனியர் அவன். என்னையும் சேர்த்து மாட்டி விட்டுடுவ போல. தைரியமா போ ஒரே கம்பார்ட்மென்ட் தான பயப்படாதே.

ம்க்கும்” - கண்மணி

என்ன தொண்டையில கிச்கிச்சா” – ராஜா

இல்ல… கூப்டிங்கன்னு சொன்னாங்க.

சீனியர் கூப்பிட்டா உடனே வரமாட்டியா? சீனியருக்கு விஷ் பண்ணணும்னு தெரியாதா?

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

குட்ட்… குட்ஈவினிங் சீனியர்.. (ஏன்டா நீ கெட்ட கேடுக்கு விஷ் பண்ணணும்மா? மவனே என் டீமோட இருக்கும் போது நீ மட்டும் கெடச்ச சங்கு தாண்டா உனக்கு)

உன் பேர் என்ன?

கண்மணி.

கண்மணி ஒரு பாட்டுப்பாடு – ராஜா.

எனக்கு பாட தெரியாது.

அப்போ ஆடு.

எனக்கு தெரியாது?

என்ன தான் தெரியும் உனக்கு? நாம போறது National Integration Camp. Cultural தான் அதில் முக்கியம் அதாவது தெரியுமா?

மனதில் ராஜாவிற்கு செம அர்ச்சனை ( டேய் என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு…)

என்ன நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் ரெம்ப திமிரா உட்கார்ந்து கிட்டு இருக்க. obey my order I am the senior of this troop.

 நீங்க தான உட்கார சொன்னீங்க.

இப்போ நீ பாட போறியா இல்லையா?

எனக்கு தெரியாது.

சரி NCC Anthem பாடு

முடியாது.

என்ன முடியாது? ரெம்ப ஓவரா பேசுர?

This is the limit, you may be our senior but this not the parade ground so you can’t comment me got it.

முகம் சிவக்க கூறியவள் வேகமாக தன் இடத்திற்கு வந்தாள்.

அவனுக்கு என்ன தைரியம் இருந்தா என்னையே ராக் பண்ணுவான் ரௌடி, பொறுக்கி, திமிர் பிடித்தவன்.

பிரபு, “ஹேய் கூல் கூல் இந்தா தண்ணியக் குடி உனக்கு ஏன் இவ்வளவு tension.

அவனும் அவன் பார்வையும் அவனப்பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.

கண்மணி ஆளப்பார்த்து எடை போடாதே பார்க்கத் தான் கரடு முரடா இருக்கான் ஆனா தப்பா தெரியல சும்மா raging பண்ணிருப்பான் - பிரபு.

அதுக்கு என்ன வேணா பேசுவாணாமா?

Guys one announcement listen, all of you have your dinner now @ 8.45 all should be in your berth for sleep no more roaming and chatting.

வந்துட்டார்டா ரூல்ஸ் ஏகாம்பரம் - பிரபு.

டேய் சார்னு மரியாதை கொடுடா வா சாப்பிடலாம் - கண்மணி.

கண்மணி உன்னோட berth தான் கடைசி அதுமட்டுமில்ல berth exchange பண்ணக்கூடாதுன்னு ஏகாம்பரம் சார் சொல்லிட்டாங்க – சாலமன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.