Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அ ழ கு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அ ழ கு! - ரவை

beauty

ம்மா! ப்ளீஸ், இனிமேல் நான் வெளியே போகும்போது நீ கூட வராதே!"

" ஏன்டீ! என் மகளோட பொழுதைக் கழிக்கிற ஒவ்வொரு வினாடியையும் நான் ரொம்ப நேசிக்கிறேன், ஏன்னா கல்யாணமாகி நீ உன் கணவன் வீட்டுக்குப் போனபிறகு, எனக்கு அந்த பாக்கியம் கிடைக்காதுடீ!"

" நீ கூடவந்தா, எனக்கு கல்யாணமே ஆகாதும்மா!"

தாய் அபர்ணா அதிர்ச்சியில் உறைந்துபோனாள்!

" சுந்தரி! ஏன்டீ அப்படி சொல்றே?"

" அம்மா! வெட்கத்தைவிட்டு சொல்றேன், நீ வயசான பொம்பளைதானே! நான் வயசுப்பெண்தானே! ரோடிலே நாம ரெண்டுபேரும் நடந்தா, எதிரில் வருகிற இளவட்டப் பசங்க யாரை உற்றுப் பார்க்கணும்? வைத்த கண்ணை எடுக்காம பார்க்கணும்? என்னைத்தானே? அதுதான் நடக்கலை, அத்தனை பசங்களும், என்னை பார்த்த அடுத்த வினாடியே, பார்வையை நகர்த்தி, உன்னைப் பார்க்கிறாங்க! அப்படிப் பார்க்கிறவங்க, அடுத்த வினாடியே பார்வையை நகர்த்தாமல், வைத்த கண்ணை எடுக்காமல், உன்னை, விழுங்குவதுபோல பார்த்துக்கொண்டே போகிறாங்க! கடந்துபோனபிறகும், உன்னை திரும்பித் திரும்பி பார்க்கிறாங்க! அதனாலேதான் நீ என் பக்கத்திலே இருந்தா, என்னை ஒருத்தனும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான், எனக்கு கல்யாணமும் ஆகாது!"

அபர்ணா தாங்கமுடியாத சோகத்தில் பொலபொலவென கண்ணீர் உகுத்தாள்.

சுந்தரி முகத்தை திருப்பிக்கொண்டாள்.

தன்னை நெடுநாட்களாக புழுவாய் அரித்துக்கொண்டிருந்த வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டாள்! சுமையை இறக்கிவைத்துவிட்டாள்! நகர்ந்து சென்றுவிட்டாள்!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்தச்சுமை மாயமாய் மறைந்துவிடவில்லை! கொஞ்சம் கூடுதலாகி, தாய் அபர்ணாவின் இதயத்தில் துளைத்தெடுத்தது!

தன் மகளின் பிரச்னை அவளுக்கு புரிந்துவிட்டது!

தாழ்வு மனப்பான்மை! தான் அழகாயில்லையோ என்ற ஈரெட்டான சந்தேக நிலையிலிருந்து, தான் அழகாக இல்லை, தன்னை எவனும் விரும்பமாட்டான், ஏன், ஏறெடுத்தும் பார்க்கமாட்டான், தனக்கு கல்யாணமே ஒருநாளும் ஆகாது, கன்னியாகவே காலம் முழுவதும் பிறரின் ஏச்சுக்களை தாங்கிக்கொண்டு வாழவேண்டியதுதான், என்ற நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுவிட்டாள், அவளை எப்படியாவது மாற்றி, தேற்றி, சகஜநிலைக்கு கொண்டுவந்தாகவேண்டும். தாயென்ற முறையில் இனி, அதுவே தனது முழுநேர வேலை என முடிவெடுத்து சுந்தரியை தேடிச் சென்றாள்.

அவள் படுக்கையில் குப்புறப் படுத்து அழுதுகொண்டிருந்தாள்.

அபர்ணா, அவளருகில் படுத்து, கட்டியணைத்து, முதுகில் முத்தமிட்டு, தலையை வருடி, உச்சி முகர்ந்து, அப்படியே மௌனமாயிருந்தாள்!

சிறிதுநேரம் கழித்து, அழுகை ஓய்ந்து, சுந்தரி திரும்பிப் படுத்து, தாயை இறுக கட்டிக்கொண்டாள்.

" அம்மா! என்னை நீதானே பெற்றாய்?"

" பின்னே, வாடகைத்தாயா பெற்றாள்?"

" கோவிச்சுக்காதே! நீ என்னை பெற்றது உண்மைன்னா, நான் ஏன் உன்னைப்போல வெளுப்பாயில்லாம கருப்பாயிருக்கேன்? உன்னைப்போல அழகாயில்லாம, அசிங்கமாயிருக்கேன்?"

"கண்ணம்மா! நீயா கற்பனை பண்றதெல்லாத்துக்கும், என்னாலே எப்படி பதில் சொல்லமுடியும்? நான் கேட்கிறதுக்கு முதல்லே, நீ பதில் சொல்லு! ......உன் பெயர் என்ன?"

" சுந்தரி!"

" சுந்தரின்னா என்ன அர்த்தம்?"

" அழகான பெண்"

" நாங்க உனக்கு அந்தப் பெயரை நீ பிறந்தபோதே வைத்தோம்னா, ஏன்? அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி, நீ அழகிதான்!"

"என்னைப் பெற்ற தாயானதினாலே, உன் கண்களுக்கு நான் அழகியா தெரியறேன், மற்றவங்களுக்கு அசிங்கமாத் தெரியறேனே.........."

" யார் சொன்னா அப்படி? நீயா உன்னைப்பற்றி தாழ்வா நினைச்சிண்டு, அதை மற்றவங்கமேலே சுமத்தாதே!"

" அம்மா! என்னை சமாதானப்படுத்த வாதாடாதே! யாராவது கருப்பாயிருக்கிற என்னை விரும்பமுடியுமா?"

" பைத்தியம்! கருப்பு அழகில்லையா? கண்விழிகள் கருப்புதான், அழகாயில்லையா? கடவுளா உலகமே கொண்டாடற கண்ணன், கருமைநிறந்தான்! 'கருமைநிறக் கண்ணா! உன்னைக் காணாத கண்ணில்லையே'ன்னு கண்ணதாசன் பாட்டு எழுதலையா? "கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!" கேட்டதில்லே, ரஜினி, விஜய்காந்த், கருப்புதானே, அவங்களை மக்களுக்கு பிடிக்கலையா?....."

" நீ சொன்னவங்க அத்தனை பேரும் ஆண்கள்! இந்த சமுதாயத்திலே, ஆண்களுக்கொரு நியாயம், பெண்களுக்கு அநியாயம், என்பதுதானே விதி!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைViji. P 2019-03-19 14:19
கதை அழகு சார்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைரவை 2019-03-19 16:33
நன்றி, விஜி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைmadhumathi9 2019-03-18 19:20
wow really great story sir. :hatsoff: to you sir.niraiya per vellaithaan azhagu enaninaikkiraargal.but karuppu niramaay iruppavargal evvalavu kalaiyaaga iruppaargal theriyuma! :thnkx: & :GL: sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைravai 2019-03-18 20:24
your spontaneous response is touching! thanks, Madhumma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைAbiMahesh 2019-03-18 19:03
Wow.. Nice Story Sir, Amma solrathu ellamae tomba nalla iruku :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைravai 2019-03-18 20:26
thanks a lot Abhimahesh! please help in spreading the message across.
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அ ழ கு! - ரவைAdharvJo 2019-03-18 17:58
To win love trust & confidence of others first we need to love trust & have confidence about ourselves 😍😍

Very well expressed uncle :hatsoff: 👏👏👏
What is the need for some unknown person to admire and drool :Q: indha expectation itsel is not good...anywa Inga aunty semaya solli irukanga and she played her best in inculcating the req values. (y) thank you for his valuable story. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அ ழ கு! - ரவைரவை 2019-03-18 18:49
Super, Adharva Jo! This is your spontaneous observation. Please spread this vital message to one and all!
Thanks for your continued support!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top