Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவை

untoldLove

" ப்பா! இதுக்குத்தான், நான் அப்பவே சொன்னேன், டிரைவிங் கற்றுக்கிறேன்னு......"

" மல்லிகா! இப்ப என்னாயிடுத்துன்னு, பொறியறே?"

" நம்ம கார் டிரைவர் வேலையைவிட்டு திடீர்னு நின்னுட்டான், எனக்கு அவசரமா வெளியே போகணும்........"

" இவ்வளவுதானே! இப்ப பார்! சோமு! இங்கே வா!"

" எஸ், ஸார்!"

" சோமு! கார் டிரைவர் திடீர்னு வேலையைவிட்டு போயிட்டானாம், இனிமேல், நீதான் நம்ம கார் டிரைவர்! ஓ.கே.யா?"

" ஸார்! ரிசர்ச் படிப்பு.......?"

" அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படறே? நான்தானே உன் ரிசர்ச் பேப்பரை சரிபார்த்து, உனக்கு டாக்டரேட் பட்டம் கொடுக்கலாம்னு சிபாரிசு செய்யணும், ரெண்டு வருஷம் நீ எங்க வீட்டு கார் டிரைவரா வேலை பாரு! மற்றதை நான் கவனிச்சிக்கிறேன்........."

" அப்படின்னா ஓ.கே.! கார் சாவியை கொடுங்க! வாங்க மிஸ்! போகலாம்!"

கார் கிளம்பிச் சென்றபிறகு, டாக்டர் காளமேகம் தனக்குள் சிரித்துக்கொண்டார்!

" நல்லவேளை! எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்க சிபாரிசு செய்த புரொபசர் வீட்டிலே கார் இல்லே, நான் தப்பிச்சேன்!" என வாய்விட்டு சொல்லிக்கொண்டார்.

அதைக் கேட்டுக்கொண்டே வந்த அவருடைய மனைவி, " கார் இல்லேன்னா என்ன, வீட்டுவேலை, தோட்டவேலை, சமையலைத்தவிர எல்லா வேலையும் செய்துதானே வெறும் காளமேகம் டாக்டர் காளமேகம் ஆனீங்க! த்தூ! இதெல்லாம் ஒரு பிழைப்பு! வெட்கமாயில்லே?"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" சத்தம் போட்டு பேசாதே! இதுதான் காலம் காலமா நடக்கிற உண்மை! தப்பித் தவறி சிலபேர் உண்மையாவே ஆராய்ச்சி பண்ணி வாங்கி, நல்லபேர் எடுத்தவங்களும் உண்டு........."

வீட்டுவாசலில் நிழல் தெரியவே, பேச்சை அத்துடன் முடித்துக்கொண்டனர்!

காரில் சோமுவின் பக்கத்தில், முன் சீட்டில், அமர்ந்திருந்த மல்லிகா தனக்குள் சிரித்துக்கொண்டாள். சிறிது நேரம் சோமுவை தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கலாமே என நினைத்தாள்.

" என்ன சிரிக்கிறே? தங்கப் பதக்கம் வாங்கின முதுகலை பட்டதாரி சோமு, இப்ப உன் கார் டிரைவராகிவிட்ட எகத்தாளமா?"

" ச்சீ! அப்படியெல்லாம் என் டார்லிங் சோமுவை தரக்குறைவா நினெப்பேனா? நான் சிரித்தது, எங்கப்பாவை நினைத்து!"

" ஏன், உங்கப்பா சாமர்த்தியமா டிரைவர் சம்பளத்தை மிச்சம் பிடித்ததற்கு பாராட்டவேண்டாமா?"

" சோமு! அவர் நீ நினைக்கிறதைவிட அதிபுத்திசாலி! வெறும் டிரைவர் சம்பள மிச்சம் மட்டுமல்ல, வரதட்சிணை, சீர்வரிசை எதுவமில்லாம தனக்கு மாப்பிள்ளை கிடைக்க, அவர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டவர்!"

"ஓ.கே. அதிலே, எகத்தாளமா சிரிக்க என்ன இருக்கு? மனசார சந்தோஷப்படவேண்டிய விஷயந்தானே!"

" ஓ! அப்படி ஒரு நினைப்பு இருக்கா உனக்கு! உனக்கு டாக்டரேட் பட்டம் கிடைச்சு, நீ வெறும் சோமுவிலிருந்து டாக்டர் சோமு ஆகிறவரையிலும் தான் உனக்கு என் ஒத்துழைப்பு! இது ஒரு தற்காலிக ப்ரீ-மேரேஜ் காண்டிராக்ட்!"

" அதுக்குப் பிறகு?"

" நீ யாரோ, நான் யாரோ!"

" அப்படியா! உன் தயவிலே கிடைக்கிற அந்த டாக்டரேட் பட்டம் எனக்கு தேவையில்லை! எனக்கு நீதான் வேணும், உனக்காகத்தான் நான் உங்கப்பாவை எனக்கு 'கெய்டா' ஏற்றுக்கொண்டேன், நான் ஒரு கோல்டு மெடலிஸ்ட்! எனக்கு 'கெய்டா' வர நிறைய புரொபசர்கள் ரெடியாயிருக்காங்க! மல்லி! இப்பவே வீட்டுக்குத் திரும்பி, வேற டிரைவரை வேலைக்கு வைச்சுக்குங்கன்னு சொல்லிட்டு 'குட் பை' போட்டுடறேன்...."

சோமுவும் இதை விளையாட்டாகத்தான் சொன்னான். இன்று முழுவதும் மல்லியுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிற பிளானிலேதான் காரில் ஏறினான்.

" என்னை பயமுறுத்திறியா? நானில்லாம, உன்னாலே ஒருநாள்கூட வாழமுடியாதுடா!"

மல்லிகாவும் தனது சீண்டலை தொடர்ந்தாள்.

"இது என் தன்மான பிரச்னை! மல்லி! இதுவே நம்ம கடைசி சந்திப்பு! குட் பை! வீட்டுக்கு திரும்பிப்போய் கார் சாவியை உங்கப்பாவிடம் கொடுத்துவிட்டு, அவருக்கும் 'பை' சொல்லிட்டு போயிடறேன்!"

சோமு தொடர்ந்து விளையாட்டாகவே பேசினான்.

" அதுதான் உன் முடிவுன்னா, அதை நான் ஏன் தடுக்கணும்? நீ எப்பவும் எங்க இருந்தாலும் சந்தோஷமாயிருக்கணும், அதுதான் என் ஆசை!"

மல்லிகா பொய்க்கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டு வெளியே பார்த்தவாறு பதில் சொன்னாள்.

" உனக்குத்தான் என்மீது பிரியமில்லையே, நான் சந்தோஷமாயிருக்கணும்னு எதுக்கு ஆசைப்படறே?"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவைAdharvJo 2019-03-16 18:30
Sabbada :dance: anti climax aga mathiduvingalon tension pantingale uncle :D lovely story :cool: :clap: :clap: idhulandhu Ena puriyudhu ulladhai ullapadi express pananum :yes: thamash panurendra perula self aappu vachila kudadhu :no: apro andha APPA role sudham steam
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவைரவை 2019-03-16 19:36
Dearest Adharva Jo! Thank God, you have something or the other, to say good about my stories. You are the first among my few supporters! I am fortunate!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவைmadhumathi9 2019-03-16 07:23
:clap: romba nalla kathai. (y) :clap: :GL: sir. Vilaiyaattu vinaiyaagum endru kelvi pattu irukkirom.nalla sol solli irunthaal intha pirachinai vanthu irukkaathu. :sad:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவைரவை 2019-03-16 07:27
மிக்க நன்றி மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவைAbiMahesh 2019-03-15 20:15
Nalla kathai Sir!! Rendu peroda feelings um azhaga solli irukkinga Sir.. Nama chumma vilayata solra words nala evlo kastam :( :thnkx: for this story :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அந்த சில வினாடிகள்! - ரவைரவை 2019-03-15 21:17
Thanks Abhimahesh!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top