(Reading time: 5 - 9 minutes)

டவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி? பிள்ளையாரப்பா எதிர் berthல இருக்கிற ரெண்டு பேரும் terrorist மாதிரியே இருக்காங்களே. (கண்மணி மனதினுள் புலம்பிய படியே படுத்திருந்தாள்).

சற்று நேரத்தில் உள்ளுனர்வு உந்த அவர்களை நிமிர்ந்து பார்த்த கண்மணியின் படபடப்பு அதிகரித்தது. தங்களுக்குள் ரகசியமாக பேசிக்கெண்டிருந்தவர்களின் mobile camera அவளை நோக்கிய படி இருந்தது.

Middle berth ல் இருந்து வேகமாக இறங்கிய (கிட்ட தட்ட குதித்த) கண்மணி எதிரில் வந்த ராஜாவின் மேல் மோதிக் கொண்டாள். முகம் பயத்தில் வெளுத்து இருந்தது.

ஏய் வாயாடி குட்டிப்பொண்ணு என்ன ஆச்சு? – ராஜா.

அ.. அங்க அ… அந்த ரெ… ரெண்டு பே… பேர் …..

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

யாரு? என்ன? வா என் கூட. அவளின் கையை பிடித்த படி அழைத்துச் சென்றான். கண்மணி அந்த இருவரையும் அவர்கள் கையில் இருந்த mobile யையும் காண்பித்தாள். அவளது பயத்தைப் புரிந்து கெண்ட ராஜா அவளை அமைதி படுத்திவிட்டு அவர்களிடம் சென்று அவர்களின் mobile யை வாங்கி அதை check செய்தான்.

பின் அவளிடம் வந்து அதில் பயப்படும் படி எதுவும் இல்லை என்று கூறினான்.

முதன் முதலாக பெற்றோரை விட்டு தனியே பயணம் மேற்கொண்டிருந்த கண்மணியின் மனமோ இதில் எல்லாம் சமாதானம் அடையவில்லை. இன்னும் பயத்துடன் ராஜாவின் முகத்தைபே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பயம் விலகாத தோற்றத்தைக் கண்ட ராஜா அவளது தலையில் கையை வைத்து, ஏய் வாயாடி குட்டிப் பொண்ணு வீரம் எல்லாம் வாய்ல மட்டும் தானா? நீ உன் berth ல் ஏறி படுத்து தூங்கு நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேன் பயப்படாதே எதுனாலும் நான் பார்த்துக்கிறேன் என்றான்.

பயம் சற்று விலகிய கண்மணி அவளிடத்தில் போர்வையை மூடி படுத்தாள். சற்று நேரம் அவளால் தூங்க முடியவில்லை மெதுவாய் போர்வையை விலக்கி ராஜாவை பார்த்தாள். அவன் அந்த இடத்தில் சற்று வசதியாய் அமர்ந்த படி இவளைப் பார்த்து தூங்குமாறு சைகை செய்தான்.

ராஜா கொடுத்த பாதுகாப்பு உணர்வில் கண் மூடி நிம்மதியாக உணர்ந்தாள்.

பிரபுவின் வார்த்தைகளும் நினைவிற்கு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.