Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

மாரிசாமியின் குழப்பம் தீரவில்லை.

" அது சரி, சார்! நீங்க சேர்மன் ஆகிற அனௌன்ஸ்மெண்ட் இன்னிக்கு வரணுமே, பார்ட்டியை விழாவாகவே நடத்தப் போறோம்......."

" நான் இன்னும் ஒருமணி நேரத்திலே இந்தியாவுக்கு வந்துவிடுவேன். நான் அதையெல்லாம் பார்த்துக்கிறேன், நீ உடனே டில்லிக்கு ஃபிளைட்டிலே கிளம்பு!"

மாரிசாமி, அமைச்சர் அறையில் நுழையும்போதே, அவர் எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார்.

" மாரிசாமி! உங்கள் கம்பெனியின் அடுத்த சேர்மனாக, செலக்‌ஷன் கமிட்டி உங்களை தேர்ந்தெடுக்கிறது, கங்கிராசுலேஷன்ஸ்! தாமஸ் ரிடையரானதும், நீங்க அவரிடமிருந்து பதவியை ஏற்றுக்கிறீங்க! "

" வந்து......கீர்த்திவாசன் .....சீனியர்.......அவருக்குத்தானே.....நியாயமா......."

" அவர்தான்யா, உன்னை பலமா சிபாரிசு பண்ணியிருக்காரு, மற்றவங்களைவிட அவருக்குத்தான் இதில் மகிழ்ச்சி! ஒப்புதல் கடித்த்திலே கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டு, கிளம்புங்க!"

மாரிசாமிக்கு இப்போதுதான் புரிந்தது, கீர்த்திவாசன் ஏன் தன்னை அமைச்சர் சொல்வதை ஒப்புக்கொள்ளச்சொன்னார், என்று!

மாரிசாமி திரும்பிவந்து ஏர்போர்ட்டில் இறங்கியபோது அவனை வரவேற்க, கீர்த்திவாசனின் தலைமையில் ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது.

முகத்தில் ஏமாற்றமும் சோகமும் நிரம்பி வழிய, மாரிசாமி கீர்த்திவாசனை பார்த்ததும், அவரை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டான்.

" மாரிசாமி! நீ ஏன் அழறேன்னு எனக்கு தெரியும். எனக்கு கிடைக்கவேண்டிய பதவியை உனக்கு கொடுத்ததற்காகத்தானே! நான் அமெரிக்காவில் இருந்தபோதுதான் எனக்கே காரணம் புரிந்தது, சேர்மன் பதவி, இந்த முறை, பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவருக்கு, வழங்கப்படணுமாம், விதிப்படி! என்னைக் கேட்டாங்க, உனக்கு கொடுக்கலாமா, உன்னாலே முடியுமான்னு! என்னைவிட தகுதியானவன் மாரிசாமின்னு, சொன்னேன், இல்லேன்னா, உனக்கும் இல்லாம, எனக்கும் இல்லாம, வேற கம்பெனியிலிருந்து ஆளை போட்டுவிடுவாங்க! புரிந்ததா?"

" சார்! நீங்க டைரக்டரா இருக்கிறபோது, நான் எப்படி சார் சேர்மனா........!"

" சேர்மன் பதவி உயர்ந்தது, டைரக்டர் பதவி தாழ்ந்ததுன்னு யார் சொன்னா? சேர்மனிலிருந்து வாட்ச்மென் வரையிலும் எல்லாரும் இந்தக் கம்பெனியின் ஊழியர்கள். ஊர்கூடி தேர் இழுக்கிறமாதிரி! அவங்க அவங்க செய்கிற வேலை, அனுபவம், சீனியாரிடியை பொறுத்து சம்பளம் தராங்க! இது ஒரு டீம் வொர்க்! ............"

" சார்! நான் ஏன் பின்தங்கிய வகுப்பிலே பிறந்தேன்னு எனக்கு வருத்தமாயிருக்கு, சார்! உங்களுக்கு, என்னை பல வருஷமா ஆதரித்து வளர்த்த உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவியை தட்டிப் பறிக்கவா? வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்ப அந்தக் கடாவா நானே மாறிட்டேனே, சார், நமக்குள்ளே பிரிவினையை உண்டாக்கவா, ரிசர்வேஷனும், கோட்டா சிஸ்டமும்? சார்! என்னை மன்னிச்சிடுங்க! என் மனசு இடங்கொடுக்கலை, நான் ராஜினாமா பண்ணிட்டு மூட்டை தூக்கற வேலைக்குப் போனாலும், குற்ற உணர்ச்சியில்லாம, நிம்மதியா வாழ்வேன், ....இல்லை சார்!, இது அநியாயம்! எப்பவோ, யாரோ, சமுதாயத்திலே தப்பா நடந்துகிட்டதுக்கு, இப்ப நீங்க பலிகடா ஆவது எந்தவித்த்திலே நியாயம்? என்னை மன்னிச்சிடுங்க!"

அதற்குள், வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து, மாரிசாமியை கைகுலுக்கு வாழ்த்தி மாலை அணிவித்தனர்.

மாரிசாமியை தள்ளிக்கொண்டுபோய், மேடையில் அமர்த்தி சால்வை போர்த்தினர். தாமஸ் பாராட்டிப் பேசியபிறகு மற்ற டைரக்டர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

கீர்த்திவாசனின் முறை வந்தது.

" வருங்கால சேர்மன் மாரிசாமி அவர்களுக்கு மிகுந்த இளகின மனசு! பச்சைக் குழந்தையைப் போல, களங்கமில்லாத உள்ளம்! தன்னைவிட சர்வீஸில் சீனியர்கள் இருக்கும்போது, தான் சேர்மனாவது நியாயமில்லை, ராஜினாமா செய்துவிடுகிறேன் என பிடிவாதம் செய்கிறார். நீங்களே சொல்லுங்கள், இந்தக் காலத்தில் இவரைப்போல ஒரு நல்ல மனிதர் நமக்கு சேர்மனாக கிடைப்பார்களா? சொல்லுங்கள்!........."

கூடியிருந்தோர், 'இல்லை' என ஒருமித்த குரலில் குரல் எழுப்பினர்.

" இந்த சமுதாயத்தில் பெரும் பகுதியினருக்கு ஏதேதோ காரணங்களுக்காக இழைக்கப்பட்ட அநீதிகள் சமீப காலமாகத்தான் நீக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படுகிறது. இது தவறா? சொல்லுங்கள்!"

"இல்லை, இல்லை"

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவைரவை 2019-03-24 20:43
இதயத்தை தொட்ட அருமையான விமரிசனம்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பிரிவினை வேண்டாமே! - ரவைmadhumathi9 2019-03-21 15:22
wow really really great story sir.padathil paarppathu kathaiyil ketppathu mattumillaamal unmaiyilum nadakka vendum enbathey perumballor ennamaaga irukkum endru ninaikkiren. :hatsoff: sir.ini idhupola maaravendum endru praarthippom. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top