(Reading time: 9 - 17 minutes)

“எப்படி கா மறப்பேன்..நான் பார்த்து பார்த்து வளர்த்தவன்”என்னை தொட்டாள்.சிலிர்த்தேன்.கண் கலங்கினாள் இதமான காற்றுவீசி சமாதானம் செய்தேன்.

“ஏய் என்னடி சின்னபுள்ள மாதிரி அழற.அப்போ தோப்பு விற்கும்போது தெரியலையா?”என்ன என் உயிர் என்னை விற்றதா. காற்றும் நின்றது.மனிதர்கள் எல்லாம் ஒரே விதமா?நீயுமா அம்மூ

“நான் என்ன பண்ண அக்கா.ஐயா கடன் தீர்க்க வித்தாரு.அப்ப நான் சின்ன பொண்ணு என்ன செய்யமுடியும்”

“நல்லா வித்தாரு.வித்து என்ன பண்ணாரு உங்கய்யா?ஆறு பொண்ணையும் பெத்து ஏழாவதா ஒரு ஏழறைய பெத்து…என்னவோ உங்களை பாழும் கிணத்திலேயே தள்ளி இருக்கலாம் .இப்படி சந்தியில நிற்க வச்சிருக்க் வேண்டாம்”

“எல்லாம் விதி கா.யாரை குறை சொல்ல.மவன் தான் உசத்தின்னு தலையில் வச்சி ஆடினாரு அவன் சுருட்டிகிட்டு ஓடிட்டான்.சொந்தம பந்தம்னு என்னை குடிகாரனுக்கு கட்டி கொடுத்தாரு.வந்தது தான் இப்படின்னா எனக்கு பொறந்ததும் அப்படி. அப்பன் கிட்ட என்ன கத்துகிட்டானுங்களோ ஆத்தாள அடிச்சு காசு புடுங்க கத்துகிட்டானுங்க”முந்தானையில் கண்ணீர் துடைத்தது என் தங்கம்.

“என்ன பேசி என்ன விடு அம்மூ ..உன் பருஷன் போனதோட உன் தலையெழுத்து மாறும்னு தான் நாங்களும் நினைச்சோம்….ம்ம்ம.புள்ளைங்கள அங்கயே விட்டுபுட்டு வந்தியா..”

“இல்லக்கா இங்க தான் கூட்டி வந்திருக்கேன்..வேலையில் சேர்த்திருக்கேன்..நான் பிறந்த ஊராவது என் தலையெழுத்து மாத்தாதான்னு பார்க்கலாம்.”

“கவலை படாதே அம்மூ இந்த இடமெல்லாம் நீ ராணியா இருந்த அந்த ராசி உன்னை மறுபடி வாழ வைக்கும்.சரி நீ இங்க எங்க?”

“ஒரு உதவி அக்கா…இங்க ஏதாவது வீட்டில் வேலைக்கு சேர்த்து விடேன்”திடுக்கிட்டேன்.இந்த இடத்தின் சொந்தக்காரி இன்று வேலைக்காரி ஆகப்போகிறாள்.நெஞ்சு ஏனோ அடைத்தது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அதுக்கென்ன வா”

பொன்னி அக்கா பின்னாலேயே அம்மூ போனாள்.சற்று தூரம் போய் திரும்பி என்னை பார்த்து கண்சிமிட்டி புன்னகை பூத்தாள்.என் இலை எல்லாம் சிலிர்த்தது.வேறெல்லாம் விரைத்தது.கிளைகள் அசைத்து என் மகிழ்ச்சி சொன்னேன்.எனக்கும் காதலோ வெட்கம் கொண்டேன்.இளம்தளிர் தளிர்த்தேன்.

அன்று முதல் என்னில் வசந்தம் தான்.மழையில்லாமலேயே சிலிர்த்தேன் அவள் தொட்டுவிட்டால்.காலம் இல்லாமல் பூ பூக்கிறேன் அவள் அணைத்து கொண்டால்.எனக்கு தண்ணீரும் காற்றும் சூரிய ஒளியும் ஆனாள் என் அம்மூ.வீட்டு வேலை முடிந்தாலும் வெகு நேரம் என் மடியில் கிடந்தாள்.என்னிடம் கண்களால் பேசினாள்.ஏனோ கண்ணீர் வடித்தாள்.சொக்கா சொக்கா என்று என்னை அனைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள்.பெருமூச்சாய்  சுவாசித்தாள்.சில சமயங்களில் என் கிளையின் அழகையும் அதில் இருக்கும் காக்கை கூடு பற்றியும் என் இளம்தளிர்களின் நிறமாற்றம் பற்றியும் பூக்கள் பற்றியும் பேசி கொண்டிருப்பாள்.பார்ப்பவர்கள் அவளை வேறு விதமாக தான் பார்த்தார்கள்.என்னுடனேயே பலமணிநேரம் கழிக்கிறாள்.இழந்த என் அம்மூவை திரும்பப்பெற்றுவிட்ட ஆனந்தம் எனக்கு.

ஒரு நாள் “என்ன அம்மூ உன் சொக்கன விட மாட்டியா வா வீட்டுக்கு போகலாம்”

“என்ன பொன்னியக்கா எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் இந்த சொக்கன் தான்”மெதுவாக தட்டினாள் ஆனால் ஏனோ என்னுள் பரபரப்பு.

“அது சரி மனுஷங்களுக்கு மரம் பரவாயில்லை,சரி வா ரொம்ப சோர்வா இருக்க”

பொன்னிக்கா சொல்வது…..நான் மரமா ஆமாம் மரம் தான் ஆனால் என்னுள் ஏனிந்த இத்தனை உணர்ச்சி குவியல்.அம்மூவை கண்டது முதல் பரபரப்பு அவளை காண ஒரு துடிப்பு அவள் என் மீது சாய எனக்குள் ஒரு சிலிர்ப்பு.அவளுடன் ஒவ்வொரு நோடியும் தித்திப்பு. அவளை காணாமல் வாடிடும் இலைகள் அவள் வாசத்திலேயே புத்துயிர் பெறும் இதெல்லாம் எப்படி.பொன்னி அக்கா பின்னால் சென்ற என் அம்மூ என்னை திரும்பி பார்த்தாள்.கண்ணில் நீர் கோர்க்க முகத்தில் ஒரு நிறைவோடு மின்னலாய் ஒரு புன்னகை பூத்துவிட்டு போனாள்.அந்த காட்சி என்னுள் உறைந்துவிட்டது.

அன்று போனவள் தான் இன்றுவரை காணவில்லை எங்கு போனாளோ தெரியவில்லை. மறுமுறை அவளை காண வேண்டும் அது ஒரு நோடி ஆனாலும்.

அதோ பொன்னி அக்கா.என்னை பார்த்து இப்படி பிழியப்பிழிய அழுகிறாளே.என்ன இது.அம்மூ எங்கே.அங்கு என்ன ஊர்வலம்.காலன் யாரை விட்டுவைப்பான்.இது என்ன அந்த ஊர்வலத்தின் நாயகி என் அம்மூ வா?அய்யோ என்ன இது .உன்னை பார்க்கும் ஒரு கனம் இப்படியா அமைய வேண்டும் அம்மூ.இப்படி உன் மரண ஊர்வலம் பார்க்கும் மரமாய் ஆனேனே என் விதியை என்ன சொல்வேன்.என் இலைகள் உதிராதா என் கிளைகள் முறியாதா இப்படியே என் உடல் இரண்டாய் பிளக்காதா. அய்யோ உன் சொக்கன் புலம்புகிறேன் தவிக்கிறேன் உன் காதில் விழவில்லையே அம்மூ

அம்மூ அன்று நீ என்னை பார்த்து புன்னகைத்ததின் அர்த்தம் இது தானா.அய்யோ போகிறாளே…என்னைத்தாண்டி எல்லைத் தாண்டி.இனி உன் வாசம் எங்கு வரும் இனி உன் தொடுதல் எங்கு கிடைக்கும்.உன் அன்பு எப்படி கிடைக்கும்.

காற்று சற்று வேளை நிறுத்தம் செய்தது.மேகம் சூழ்ந்து கதறும் சொக்கனுக்குஆறுதலாய் மழை பொழிந்தது.இன்றும் சொக்கன் அதே இடத்தில் அதே நிலையில்.காக்கை கூடு சுற்றி திரியும் சிறுவர்கள் வம்புகள் வழக்குகள் காதல் தருணங்கள்.இதை அவன் பகிர தான் அம்மூ இல்லை. அவள் அங்கு வாழ்ந்த நினைவு சுவடுகள் மட்டும். ஏந்தி ஒற்றையில் சொக்கன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.