Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவை - 5.0 out of 5 based on 1 vote

" அப்படி வைச்சிடும்மா! வேலை முடிஞ்சு குடிக்கிறேன்........."

" இத பாரு! காலையிலிருந்து, வெறும் வயிறோட வேலை செய்யறே, வேலையை அப்படியே போடு, முதல்லே காபியை குடி!......."

காபி குடித்துக்கொண்டே, வேலைக்காரியின் பார்வை, வேறெங்கோ சென்றது. 

அங்கே ஒரு பத்துமாதக் குழந்தை படுத்திருந்தது. கையை, காலை வானத்தில் உதைத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டிருந்தது!

அந்த வீட்டு எஜமானியம்மா, அந்தக் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

காபி குடித்து முடித்ததும், வேலைக்காரி மறுபடியும் பாத்திரம் துலக்கச் சென்றாள்.

" எங்கே போறே? உன் 

குழந்தைக்கு பால் கொடுத்து, கொஞ்சிவிட்டுப் போ!"

வேலைக்காரி சிரித்துக்கொண்டே சொன்னபடி செய்தாள்!

காமேஸ்வரனின் மனைவி, எஜமானியைப் பார்த்து பூரித்தாள்! 

" எங்களைப்போல ஏழைங்களையும் மனுஷங்களா நினைச்சு, பரிவு காட்ட ஒண்ணு ரெண்டு பேர் இன்னும் இருக்கிறதுனாலேதான், நாட்டிலே மழை பெய்யுதும்மா!" என்று கையெடுத்து கும்பிட்டாள்.

எஜமானியின் முகத்தில் அன்பும் பெருமிதமும் பொங்கி வழிந்தது!

" இந்த ஒரு வினாடி, ரெண்டு பேரும் அனுபவிச்சாங்களே அந்த சுகம், உங்க சொர்க்கத்திலே கிடைக்குமா, சொல்லுய்யா!"

 பிறகு இருவரும் நெடுஞ்சாலைக்கு வந்தனர். போக்குவரத்து அதிகமாயிருந்தது. ஒரு பிச்சைக்காரக் கிழவன் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்ல, நெடுநேரமாக காத்திருந்தான். மற்றவர்கள் அவரவர் வேலையில் மூழ்கி, வேகமாக சென்றுகொண்டிருந்தனர். 

பிச்சைக்காரக் கிழவன் கால் கடுக்கவே, பிளாட்பாரத்தில் அமர்ந்தான். நடப்பதையெல்லாம் சிறிது தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன், அருகே வந்து, கிழவனை எழுப்பி, கையைப் பிடித்து, சாலையில் போக்குவரத்தை மறித்தவாறு கைகளை காட்டிக்கொண்டே, சாலையின் மறுபுறத்தில் பத்திரமாக கொண்டு சேர்த்தான். 

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கிழவன், தன் தகர டப்பாவிலிருந்து சில்லறை காசுகளை எடுத்து அந்த சிறுவனிடம் கொடுத்து, "டீ வாங்கிக் குடி!" என்றான். அந்தச் சிறுவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை, கொலைப்பசி! அவன் நிலைமையில் எவர் இருந்தாலும், சந்தோஷமாக அந்தக் காசுகளை பெற்றுக்கொண்டு டீ கடைக்கு ஓடியிருப்பார்கள்.

" தாத்தா! இந்தக் காசை நீயே வைச்சிக்க! பசிக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடு! நான் மூட்டை தூக்கி பொழைச்சிப்பேன், எனக்கு பசி புதுசில்லே......"

சிறுவன் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டே, கிழவன் கண்களில் நீர் வடிய, நெடுநேரம் நின்றுகொண்டிருந்தான்!

" பார்த்தியா! ரெண்டுபேரும் ஏழைகளாயிருந்தாலும், படிக்காதவர்களாயிருந்தாலும், மனிதாபிமானத்தோட நடந்துக்கிறாங்க, பார்த்தியா? சாலையை கடக்க, கிழவனுக்கு சிறுவன் உதவறான், சிறுவன் பசிக்கு கிழவன் பரிதாப்ப்படறான்! எத்தனையோ படிச்சவங்க, பணக்காரங்க, இளவட்டங்க, மூணுவேளை சாப்பிடறவங்க தன் வேலையை பார்த்துக்கொண்டு சுயநலமா நடந்துக்கிறபோது, ரெண்டு ஏழைங்க மனிதாபிமானத்தோட நடந்துகிட்டாங்கன்னு! இதெல்லாம் சொர்க்கத்திலே வசிக்கிறவனுக்குப் புரியுமா?"

கடவுள் யோசிக்க ஆரம்பித்தார்!

 காமேஸ்வரன் கடவுளுடன் சாலையில் மேலே நடந்தான்.

 ஓரிடத்தில், குப்பைத்தொட்டியிலிருந்து, குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தான், ஒரு குப்பை பொறுக்கி!

 கொண்டுவந்திருந்த கோணிப்பையில், குப்பைகளை அள்ளிப்போட்டு திணித்துக்கொண்டிருந்தான். தொட்டிக்குள் எதையோ பார்த்துவிட்டு, கையிலிருந்த கோணியை கீழே வீசிவிட்டு, இரண்டு கைகளையும் தொட்டிக்குள் நுழைத்து, சில வினாடிகளில் வெளியே எடுத்தான்.

அவன் கையில் ஒரு பச்சிளம் குழந்தை!

 அதைக் கண்டதும், குதூகலத்துடன், அவன் உடனே எங்கோ ஓடினான். சில சந்துபொந்துகள் கடந்து, ஒரு குடிசைவாயிலில் நின்று, அவன் மனைவியை அழைத்தான்.

 அவளும் வெளியே வந்து, அவன் கையில் இருந்த பச்சைக் குழந்தையை பார்த்துவிட்டு, அவனைவிட அதிகமான சந்தோஷத்துடன் அதை வாங்கிக்கொண்டு, குடிசைக்குள் நுழைந்து அந்தக் குழந்தையை சுத்தப்படுத்தினாள்.

 " வள்ளி! கடவுள் நமக்கு கொடுத்த பரிசு! யாரோ தப்பான வழியிலே கர்ப்பமாகி பிரசவித்த குழந்தை போலிருக்கு, குப்பைத் தொட்டியிலே வீசிவிட்டனர். அதனாலென்ன, நமக்கு கொஞ்சிக் குலவி வளர்த்து ஆளாக்க, கடவுள் ஒரு குழந்தையை தந்திருக்கிறார்........."

 " இத பாருங்க! உடனே, வேற ஊருக்கு ஓடிப்போயிடுவோம், இங்க இருந்தா, அக்கம்பக்கத்திலே உள்ளவங்க, வம்பு பேசி, போலீஸ் வந்து குழந்தையை பிடுங்கிண்டு போயிடுவாங்க! போட்டது போட்டபடி, கிளம்புவோம், வாங்க!"

 கணவனும் மனைவியும் குழந்தையை கொஞ்சிக்கொண்டே, ஓடினர்!

" பார்த்தியா, கடவுளே! ரெண்டு பேரும் குப்பை பொறுக்கி வயத்தை கழுவறவங்க! கஷ்டப்படறவங்க! ஆனா, குழந்தைமேல ஆசை! என்னை மாதிரி, உலகத்திலே எல்லாரும் எத்தனை கஷ்டப்பட்டாலும், இங்கே வாழத்தான் ஆசைப்படறாங்க! இப்ப புரிஞ்சிதா? ஒண்ணு பண்றியா, நீயும் கொஞ்சநாள் உலகத்திலே என்னோட தங்கி ஜாலியா இருந்துட்டுப் போயேன்............."

கடவுளால் காமேஸ்வரன் பேச்சை தட்டமுடியவில்லை!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைkarna 2019-03-26 17:23
அருமையான் கதை அய்யா...சிலிர்க்க வைத்தது.உலகததில் நிறைந்திருக்கும் அன்பு காண முடிந்தாலே சொர்க்கம் எது என புரியும்.நாம் வாழுமிடமும் சொர்க்கமாக்க முடியும்.மிக்க நன்றி அய்யா.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைரவை 2019-03-27 06:03
அன்புள்ள கர்ணா! உங்களைப் போன்ற ஒரு பெரிய எழுத்தாளர் பாராட்டும்போது, கதை எழுதுகிறபோது ஏற்பட்ட மகிழ்வைவிட அதிக சந்தோஷமாயிருக்கிறது. மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைmadhumathi9 2019-03-26 13:15
:clap: arumaiyaana kathai :clap: ippo ulla kaalathil padithavan suyanalamaagathaan irukkiraan.adhuvum romba padithuvittaal ego irukkum paarunga! Manathai thotta kathai. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைரவை 2019-03-27 06:01
மதுமதிம்மா! ரொம்ப மகிழ்ச்சி! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைJebamalar 2019-03-25 22:56
அருமை... வேறுபட்ட கதை களம்.. வித்தியாசமான கதை கரு... கூறிய விதம் மிக அருமை.. மெய்சிலிர்க்க வைக்கிறது :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைரவை 2019-03-26 05:54
வெற்றி! வெற்றி! ஒருவருக்கு மகிழ்ச்சி தருவது என்பது ஒரு சாதனை! நீங்கள் என் கதையை படித்துவிட்டு மகிழ்ச்சியுற்றது எனக்கு பெருமையாயுள்ளது! நன்றி! நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைAbiMahesh 2019-03-25 21:38
Wow.. Nice Story Sir!! You mentioned all the beautiful things happening in our society & life.. :hatsoff: :thnkx: for tge story Sir!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சொர்க்கமே என்றாலும்... - ரவைரவை 2019-03-26 05:56
அன்புள்ள அபிமகேஷ்!
என்மீது உங்களுக்குள்ள அன்பும் நட்பும் என்னை மகிழ்விக்கிறது! வழக்கம்போல, என்னை உற்சாகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top