Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவை

couple

"சுந்தரி! இவங்க பேர், அனிதா! எங்க ஆபீஸிலே வேலை செய்யறாங்க! கூடவே, புடவை வியாபாரமும் பண்றாங்க! நல்ல புடவைகளா கொண்டுவந்திருக்காங்க, உனக்கு பிடித்த புடவைகளை எடுத்துக்கொள்."

" இப்ப எனக்கு தேவையில்லீங்க, பீரோவிலே, அடுக்கி வைத்திருக்கிற புடவைகளை கட்டிக்கவே, நேரமில்லே!"

" எனக்கும் தெரியும், ஆனா இவங்க கொண்டு வந்திருக்கிற புடவைகள் ரொம்ப நல்லாயிருக்கு, நான் பார்த்தேன், சில புடவைகள் நீ கட்டிண்டா, சூப்பராயிருக்கும்!"

சுந்தரி கணவனின் ஆசைக்காக ஒரு புடவையை எடுத்துக்கொண்டாள்.

இப்படித்தான், மனைவிக்காக நிரஞ்சன் அடிக்கடி ஏதாவது வாங்கி வந்துவிடுவான். கணவனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக, ஏற்றுக்கொள்வாள், சுந்தரி!

திருமணமாகி ஐந்து வருடமாகியும், இன்னமும் அவன் புதிதாக கல்யாணமானதுபோல, ஆசையாக அவளிடம் நடந்துகொள்வான்.

காலையில், அவளுக்கு முன்பாக படுக்கையிலிருந்து எழுந்து, பல்துலக்கி, காபி தயாரித்துவிட்டு அவளை எழுப்பி " பெட் காபி ரெடி" என்று சிரித்துக்கொண்டே, காபி கப்பை நீட்டுவான்.

" நிரஞ்சன்! பல் துலக்காம, காபி குடிக்க எனக்கு பிடிக்காது, ப்ளீஸ்! இனிமேல், பெட்காபி கொண்டுவராதே!"

" ஓ.கே. பல் துலக்கினபிறகு, தரேன்........"

" நானே போட்டுக்கிறேன்......."

" அதில்லே, நியூஸ்பேப்பர் ஏழுமணிக்குத்தான் வரும். அதுவரையிலும் நான் ஃபிரீயாத்தானே இருக்கேன், காபி நம்ம ரெண்டுபேருக்கும் நான் போடறேன், மற்ற சமையலை நீ பார்த்துக்க! சரியா?"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சுந்தரி சிரித்துக்கொண்டு, குளிக்கச் செல்வாள்.

இருவருமே ஒன்பது மணிக்குள் ஆபீஸ் கிளம்பவேண்டியிருப்பதால், வீட்டு வேலைகளை இருவரும் பங்குபோட்டுக்கொண்டு செய்வதுதானே, நியாயம் என்பது நிரஞ்சனின் வாதம்!

தனது டூவீலரில் சுந்தரியை அவள் ஆபீஸில் இறக்கிவிட்டுத்தான் நிரஞ்சன் தன் ஆபீஸ் செல்வான். அதுபோல, மாலையில் அவளை பிக் அப் பண்ணிக்கொண்டுதான் வீடு திரும்புவான்.

ஒவ்வொரு வாரக் கடைசியிலும், இருவரின் துணிகளையும் நிரஞ்சன்தான் வாஷிங் மெஷினில் போட்டு உலர்த்தி இஸ்திரி போட்டு பீரோவில் அடுக்கிவைப்பான்.

" சுந்தரி! உனக்குப் பிடித்த ஹீரோ அஜித் படம் ரிலீஸாகியிருக்கு, முதல்நாள் முதல்ஷோ ரெண்டு டிக்கட் புக் பண்ணியாச்சு! ஜாலியா சினிமா பார்த்துவிட்டு, ஓட்டலிலே டின்னரை முடிச்சிட்டு வீடு திரும்புவோம், ஓ.கே.?"

நிரஞ்சன் அவளிடம் மிகுந்த அன்புடன், பரிவுடன், பாசமுடன் பழகினாலும், மனம் விட்டுப் பேசினாலும், சந்தோஷப்படுத்தினாலும், சுந்தரி அந்த அளவுக்கு மனம் விட்டுப் பேசவில்லை, ஏதோ குறைப்படுகிறாள், சொல்லவும் மறுக்கிறாள், ஏன் என்று தெரியவில்லை என நிரஞ்சன் தனக்குள் புலம்பினான்.

" சுந்தரி! நமக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாச்சு, இன்னும் குழந்தை பிறக்கவில்லையேன்னு.........."

" நோ நோ! ரெண்டுபேரும் நிறைய சம்பாதித்து, சொந்த வீடு, கார், பேங்க் பேலன்ஸ் சேர்ந்தபிறகு, குழந்தை பெற்றுக்கலாம்........."

வேறென்ன குறையாயிருக்கும்?

" சுந்தரி! உங்க அப்பா, அம்மாவை பார்க்கணும்னு ஆசையாயிருந்தால், சொல்லு! ஒரு டிரிப் போய்வரலாம்...."

" நான்தான் அவங்களோட தினமும் வாட்ஸ்அப் வீடியோவிலே பார்த்து பேசறேனே, அது மட்டுமில்லே, ஆபீஸிலே வேலை அதிகம், லீவு எடுக்கமுடியாது........"

இதுவுமில்லையென்றால், வேறென்னவாயிருக்கும்?

" இந்த வாரக்கடைசியிலே, சேர்ந்தாற்போல் நாலுநாள் விடுமுறை வருது, சிங்கப்பூர் போய்ட்டு வரலாமா?"

" நிரஞ்சன்! இப்ப நம்ம ஒரே குறிக்கோள், பணம் சேர்த்து வீடு, கார் வாங்கி, பேங்க் பேலன்ஸும்நிறைய இருக்கிறதுதான்! அதுக்குப்பிறகுதான், குழந்தை, ஃபாரின் டூர் எல்லாம்!"

அவள் குரலில் ஒரு கண்டிப்பு இருந்தது! 

" சுந்தரி! நீ சொல்றது சரிதான். டூர் வேண்டாம், உனக்கு எது வேணுன்னாலும் கேள்! எனக்கு உன்னை ஹேப்பியா வைச்சிக்கிறதுதான், முக்கியம், ஆசை, லட்சியம் எல்லாம்!"

சுந்தரி பதில் பேசவில்லை. சிரித்துக்கொண்டாள். அந்தச் சிரிப்பில் ஒளியில்லை!

அன்று மாலை, நிரஞ்சனின் நண்பன், தன் மனைவி, ஒரு வயது குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருந்தான்.

நண்பனின் மனைவியுடன் சுந்தரி பேசிக்கொண்டே, நிரஞ்சனை கவனித்துக்கொண்டிருந்தாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைmadhumathi9 2019-03-27 21:13
:clap: wow arumai.nice story. (y) :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-28 06:40
மிக்க நன்றி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைhari k 2019-03-27 15:53
Very nice sir...good concept also :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-27 18:46
Thanks a lot, Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-27 05:14
Thank you, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைAbiMahesh 2019-03-26 22:33
Nice Story Sir!! And Good Family :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைAdharvJo 2019-03-26 20:37
facepalm Niranja indha chinna matter theriyamal 5 varusham waste panitingale boss ;-) but sundari eppadi miss pananga :Q: Ippadi yum irupangala :sad: but thank god he put some efforts to understand what is in her mind.
nice story uncle :clap: :clap:
Thank you and keep rocking.
Trust you're doing good :)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-26 21:47
Dear Adharva Jo! I am fine. Thanks.
A few small things, sometimes, miss our attention and it takes a few years to find out! Thanks for your comments.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைJebamalar 2019-03-26 17:37
சபாஷ்... அன்பு காதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ளீர்கள்... ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக அழகாக உள்ளது... வாழ்த்துக்கள் :clap: (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அன்பு வேறு, காதல் வேறு! - ரவைரவை 2019-03-26 18:16
மிக்க நன்றி, ஜெபமலர்! மகிழ்ச்சி நிறைவாயிருக்கிறது, தங்கள் பாராட்டைப் பெற! தொடர்ந்து வாழ்த்துங்கள்!எழுத்தாளனுக்கு வாசகரின் பாராட்டு, நோபல் பரிசு பெறுவதுபோல!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top