Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

 பத்மினி, தன்னை மறந்து, கைதட்டினாள்.

 " பத்மினி!எப்படி என் பதில்?"

 " சூப்பர், அக்கா! நீங்கதான் எங்க லீடராயிருக்க ரொம்ப சிறப்பான நபர்."

 " அவசரப்படாதே! இன்னும் நான் முடிக்கலே! மேலே சொல்றேன்:

 "நமது மாதர் சங்கம் அமைத்த பட்டிமன்றத்துக்கு, எதிரே கூடியிருக்கிற மக்களைப் பாருங்கள்! நமது சங்கம் அழைப்பு விடுத்தது, உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே! வந்திருப்பவர்களோ, அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் நண்பர்களும்கூட! இல்லையென்றால், இந்தக் கூட்டம் சேர்ந்திருக்க வழியேயில்லை!

 இதிலிருந்து என்ன தெரிகிறது? பெண்கள் செய்கிற எந்தப் பணிக்கும் ஆதரவு தரவும், வாழ்த்தவும், ஆணினம் துடித்துக்கொண்டிருக்கிறது. 

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 ( இந்த இடத்திலே அரங்கமே கைதட்டலில் அதிரும், சரியா?) அவர்களை சரியான நோக்கிலே பாருங்கள்! நமக்கு அவர்கள் வில்லன்கள் என்று பார்த்தால், அவர்கள் சொல்வதும், செய்வதும், நமக்கு பாதகமாகத்தோன்றும். நமது அனுதாபிகள் அவர்கள்! நம்மை ரசிப்பவர்கள் ஆண் இனம் மட்டுமே, ஒரு பெண் இன்னொரு பெண்ணை எந்தக்காலத்திலும், பாராட்டமாட்டாள், ஆதரிக்கமாட்டாள், உதவிசெய்யமாட்டாள். ஆணினம்தான் செய்யும்.

(இந்த இடத்தில் ஆண்கள் எழுந்து நின்று கைதட்டுவார்கள். சரியா?)

ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். 

எதிர்கட்சியினருக்கு ஒரு சவால் விடுகிறேன், அவர்கள் பேசும்போது, அதிகமாக கைதட்டி ஆதரித்தது, இங்கு எதிரில் கூடியிருக்கிற அவர்களுடைய கணவனும், தந்தையும், சகோதர்ர்களும், பாய்ஃபிரெண்ட்ஸும்தான்!

(அரங்கில் தொடர்ந்து கர ஒலி)"

பத்மினியின் கைதட்டலைத் தவிர, இன்னொருவரின் கைதட்டலும், மாளவிகாவின் செவிகளை எட்டியதும், திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய கணவன்!

" மாளு! அந்த அரங்கிலே கைதட்டியவர்களிலே, நானும் ஒருத்தன்!"

அந்த நேரத்தில் அவன் 'மாளு' என்று அழைத்ததை, மாளவிகா ஆட்சேபிக்கவில்லை.

" இதையும் சேர்த்துக்கோ, மாளு! 'என் கணவர் என் வீட்டுவேலைகள் எல்லாவற்றிலும், துணையாயிருக்கிறார். அவர் சொல்வதை நான் கேட்டு நடப்பதைவிட, நான் சொல்வதை அவர் கேட்டு நடப்பதுதான் அதிகம். அதற்கு அவர் சொல்லும் காரணம். ஆணும் பெண்ணும் சேர்ந்து நடத்துகிற குடும்பத்தில், ஆண் வேலை, பெண் வேலை என்ற பாகுபாடே தவறு, எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்யவேண்டியதுதான், நியாயம்!"

 பத்மினி அங்கிருப்பதைக்கூட மறந்து, மாளவிகா தன் கணவனை இறுக அணைத்து முத்தமிட்டாள்.

 பத்மினி வெட்கப்பட்டுக்கொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்.

 மாளவிகாவும் அவளை தடுக்கவில்லை!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைabimahesh 2019-03-28 21:51
Good Story Sir!! Maalu solra points la Super.. But apdi nadukkuma? :thnkx: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-29 06:47
நடக்கும், நடக்கணும், my dear Abhi mahesh! Thanks for your compliments
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைmadhumathi9 2019-03-28 20:32
wow fantastic story. :clap: :clap: (y) :thnkx: :GL: sir.arumai :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:54
மிக்க மகிழ்ச்சி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைJebamalar 2019-03-28 18:37
இரு மனமும் ஒரு மனதானால் கதையின் பிற்பகுதி போல் இனிக்கும்... இரு மனமும் இரு வேறு மனதானால் முற்பகுதி போல் குடும்பம் களை கட்டும் என்று அழகாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:52
மிக்க நன்றி, ஜெபமலர்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைharii k 2019-03-28 16:52
Good one sir,, Pengalai rasikamatumalla mathiakvum terindha aangalukana story :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:51
Thanks, dear Hari!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top