Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவை

love

"ய்! உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலே! நான் உன்னை காதலிக்கிறேன், உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றேன்! ஆனா, நீ என்னை கண்டாலே நழுவிப் போயிடறே! என்னை உனக்கு பிடிக்கலேன்னா சொல்லிடு, நான் உன்னை மறந்துடறேன்....." 

" சௌம்யா! எனக்கு நின்னு பேச நேரமில்லாம நிறைய வேலை இருக்கு. அதனாலேதான்........."

" ஆனா, பிரகாசம்! நீ எனக்கு எத்தனையோ உதவி செய்யறே! எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுங்கறது என்னைவிட உனக்குத்தான் தெரிகிறது. நேற்று ஒரு புடவை, உன் கடையிலிருந்து கொடுத்தனுப்பிச்சியே, அதை நான் உடுத்திண்டு வெளியிலே போனதும், பார்த்த எல்லாரும் எனக்கு அந்தப் புடவை ரொம்ப சூட்டாயிருக்குன்னு பாராட்டறாங்க! நீயோ, நான் அந்தப் புடவையை கட்டிப் பார்க்கவே இல்லை, நீ செய்கிற காரியங்களெல்லாம் முரணாகவே இருக்கு........"

சிரித்துக்கொண்டே, பிரகாசம் நகர்ந்து சௌம்யாவின் தாக்குதலிலிருந்து தப்பித்து, வெளியேறினான்.

இன்று இதற்கு முடிவு தெரியாமல் போவதில்லை என பிடிவாதமாக, சௌம்யா அடுத்து பிரகாசத்தின் தாயிடம் படையெடுத்தாள்.

" அத்தை! உங்கண்ணன் பெண்தானே நான், என்னை உன் மகன் அழவிடறதை நீ எப்படி வேடிக்கை பார்க்கிறே? நீயெல்லாம் ஒரு அத்தையா? வெறும் சொத்தை!"

சௌம்யா, தன் அத்தையை அருகில் சென்று அணைத்துக்கொண்டாள்.

அத்தையும் அவளை உச்சி முகர்ந்து அணைத்தவாறு, முதுகில் தடவிக்கொடுத்தாள்.

" சௌம்யா! உன்னைவிட எனக்குத்தான் வேதனை அதிகம்! எங்கண்ணன், உங்கப்பா, தினமும் என்னை 'எப்போ கல்யாணம் வைச்சிக்கலாம்'னு நச்சரிக்கிறான். அவனுக்கு பதில் சொல்லமுடியாம, நானும் மாமாவும் திண்டாடறோம்."

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" அப்படி என்ன சொல்றான், என் முறைப்பையன்? அவனிடம் சொல்லிவை, நான் இந்த மாவட்ட கலெக்டர் சௌம்யா ஐ.ஏ.எஸ்! என் சொல்லுக்கு இந்த மாவட்டமே அடங்கி நடக்குது, இவன் என்ன பெரிய மினிஸ்டரா?"

அத்தை சிரித்தாள்.

" இத பார், அத்தை! இந்த சிரித்து மழுப்பற வேலையெல்லாம் வேண்டாம்! வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டா பதில் வரணும், உன் பிள்ளையிடமிருந்து, நாளைக்குள்ளே! இல்லேன்னா....."

" சௌம்யா! அவசரப்படாதே! இன்னிக்கி நானும் மாமாவும் பிரகாசத்தை உட்கார்த்தி வைச்சி ரெண்டிலே ஒண்ணு கேட்டுடறோம், போதுமா?"

" போதாது! ரெண்டிலே ஒண்ணுங்கிற பேச்சுக்கே இடமில்லே, ஒண்ணே ஒண்ணுதான், அவன் என் கழுத்திலே வர சித்திரை மாசம் தாலியை கட்டியாகணும், ஏன்னா என்னை டில்லிக்கு மாற்றப்போறாங்களாம், அரசாங்கம். நான் அவனுடன்கூட சேர்ந்துதான் டில்லிக்கு போவேன், சொல்லிடு, அவனிடம்!"

சௌம்யா கோபமாக போய்விட்டாள். அத்தைக்கு அவளைப் பார்க்க பரிதாபமாயிருந்தது!

எந்தப் பெண்ணும் இவ்வளவு வெளிப்படையா தன் காதலை, ஆசையை, சொல்லமாட்டாங்க, பிரகாசத்துக்கும் சௌம்யாமேலே பிரியம் இருக்குன்னு தெரியுது! ஆனா, எதனாலேன்னு தெரியலே, கல்யாணம்னு பேச்சு எடுத்தாலே, இப்போதைக்கு வேண்டாங்கறான்.

பெருமூச்சுடன், அத்தை சமையலறை நோக்கி நகர்ந்தாள்.

" கலா!" என்று அழைத்துக்கொண்டே, உள்ளே வந்தார், சுதர்சனம், சௌம்யாவின் தந்தை!

" வாங்கண்ணா! உட்காருங்க! குடிக்க மோர் கொண்டு வரேன்!"

" அதெல்லாம் எதுவும் வேண்டாம். நான் எப்போ வந்தாலும், வீட்டிலே நீ மட்டும்தான் இருக்கே! உன் புருஷன், பிள்ளை ரெண்டுபேரும் ஜவுளிக்கடையிலேயே ஐக்கியமாயிடறாங்க! இத பார்! அவங்க ரெண்டுபேரும் சாப்பிட வீட்டுக்கு எப்போ வருவாங்க? அதுவரையிலும் நான் காத்திருந்து, அவங்களிடம் பேசி ஒரு முடிவு தெரிஞ்சிண்டு போகத்தான் வந்திருக்கேன்........"

" இப்பத்தாண்ணா! சௌம்யா வந்து பேசிவிட்டுப் போனா! கோபம் இல்லாம, நிதானமா, பேசவேண்டிய விஷயத்தை நீங்க இப்ப இருக்கிற நிலையிலே பேசமுடியும்னு எனக்கு தோணலே, அண்ணா! இப்ப நீங்க வீட்டுக்குப் போ! அவங்க ரெண்டு பேரும் சாப்பிட வந்ததும், அவங்களை அழைச்சிக்கிட்டு நானே உங்க வீட்டுக்கு வரேன். சரியா?"

" கலா! என் பெண்ணை கட்டிக்க பெரிய பெரிய இடத்திலிருந்து பிரெஷர் வருது, நான்தான் நம்ம சொந்தம் விட்டுப்போயிடக்கூடாதுன்னு, உன் வீட்டுக்கு காவடி தூக்கறேன், சௌம்யாவும் உன் மகனைத்தான் கட்டிப்பேன்னு ஒத்தக்கால்லே நிக்கறா!சரி, நான் வரேன், கட்டாயமா வந்து சேருங்க, மூணுபேரும்!"

அவர் சென்றதும், கலா தன் கணவருக்கு போன் பண்ணி மகனுடன் உடனே வீட்டுக்கு வரச்சொன்னாள். 

வந்ததோ, கணவன் மட்டுந்தான்!

" என்னங்க! நீங்மட்டும் வரீங்க......?"

" கடையிலே வியாபாரம் அதிகம், எங்க ரெண்டு பேரிலே ஒருவராவது அவசியமா இருந்தாகணும், கடையிலே!"

" அப்ப, அண்ணன் வீட்டுக்கு.........?"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைAbiMahesh 2019-04-03 07:32
Nice Story Sir! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-03 08:09
Thanks a lot, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-02 19:14
மிக்க நன்றி, கர்ணா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைkarna 2019-04-02 14:12
அருமையான பதிப்பு அய்யா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைmadhumathi9 2019-04-02 13:48
wow aangalilum purinthu kondu nadakka koodiyavargal irukkiraargale :hatsoff: great story.parantha manappaanmai kondavarthaan (y) :clap: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-02 13:53
மதுமதிம்மா! இப்ப இருக்காங்களோ, இல்லையோ, ஆனா கட்டாயம் இப்படித்தான் ஆண்களும் காதலும் இருக்கணும் என்பது என்ஆசை! மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top