Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவை - 5.0 out of 5 based on 1 vote

" இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா, வாழ்க்கை முழுவதும் சேர்ந்து இருக்கப்போறதைப் பார்த்து பிளந்த வாயை மூடமாட்டீங்க போலிருக்கே?" வழக்கம்போல, சௌம்யா வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, உள்ளே சென்றாள்.

உள்ளிருந்தபடியே, " அம்மா! பிரகாசத்துக்கும் எனக்கும் பசி வயிற்றைக் கிள்ளுகிறது, சாப்பாடு ரெடி பண்ணு!"

நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்தபோது, சௌம்யாவும் சேர்ந்துகொண்டாள்.

" சௌம்யா! எங்களைப் போன்ற வியாபாரிங்க சாப்பிட நேரம் கொஞ்சம் முன்னே பின்னே ஆவது, சகஜம்! உன்னைப்போல கலெக்டரா உத்தியோகம் பார்க்கிறவங்க, கரெக்டான நேரத்துக்கு சாப்பிடணும், நான் வேணுன்னா, ஒரு ஏற்பாடு செய்யட்டா?"

" என்ன ஏற்பாடு?"

" தினமும் பிற்பகல் ஒரு மணிக்குள்ளே டிபன் கேரியரிலே, சாப்பாட்டை ஆள்மூலமா அனுப்பட்டுமா? உனக்கு எப்ப சௌகரியமோ, அப்ப வீட்டுக்கு வரலாம், டயத்துக்கும் சாப்பிட்டுக்கலாம். ஏன் சொல்றேன்னா, வயிற்றை காயப்போட்டா, கேஸ் பரவி தொந்தரவு கொடுக்கும்.........."

" ஏன்டா பிரகாசம்! பேசறதைப் பார்த்தா, நீயே தினமும் அவளுக்கு சாப்பாட்டு கேரியர் எடுத்துண்டு போய் ஊட்டி விட்டு வந்துடுவே போலிருக்கே!"

" அம்மா! சௌம்யா நம்ம குடும்பத்துக்கு தேடித் தந்திருக்கிற கௌரவத்தை, பெருமையை, மரியாதையை நினைச்சுப்பார்த்தா, இதுவும் செய்யலாம், இன்னமும் செய்யலாம்..........இல்லையா, மாமா?"

சுதர்சனம் தன் இருக்கையிலிருந்து எழுந்துவந்து, பிரகாசத்தை தட்டிக்கொடுத்து அருகிலேயே நின்றுகொண்டார்.

" கலாம்மா! இத்தனை வருஷமா நீதான் என் பிரியத்துக்கு ஒரே சொந்தக்காரியா இருந்தே! அதுக்கு இப்ப கடுமையான போட்டியா என் மருமகன் வந்துவிட்டான்போலிருக்கே?"

" யாருக்கு அவன்மீது பிரியம் இருந்தாலும் சரி, அதெல்லாம் எனக்கு அவனிடம் உள்ள பிரியத்துக்குப் பிறகுதான், இல்லையா பிரகாசம்?"

சிரிப்பலை ஓய நேரமாகியது.

சாப்பிட்டு முடிந்து, எல்லோரும் வரவேற்பறைக்கு வந்தனர்.

கலா, அண்ணனுக்கு ஜாடை காட்டி பேச்சை துவக்கச்சொன்னாள்.

அண்ணியும் கலாவுடன் சேர்ந்துகொண்டாள்.

சுதர்சனம், தொண்டையை செருமிக்கொண்டு, பேச முற்பட்டார். அதற்குள், பிரகாசம் சௌம்யாவிடம் " உன்னைப் பார்த்தா, எனக்கு வியப்பாயிருக்கு, சௌம்யா! இந்த கலெக்டர் பதவிங்கிறது, ஒருபக்கம் கௌரவம் தந்தாலும், மறுபக்கம் ஊர்ஜனங்கள் அத்தனைபேருக்கும், எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகளுக்கும் காவடி எடுத்து பின்னாடி போய் அவங்க சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போட்டு......அப்பப்பா! பிடுங்கலான வேலை! நீ எப்படித்தான் சமாளித்து, எங்களோடு ஜாலியா சிரித்துப்பேசிண்டும் இருக்கியோ! உனக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்."

" உனக்குத் தெரியறது, என் அருமை! இவங்களுக்கெல்லாம் தெரியலியே! இவளுக்கு வயசாகிண்டிருக்கே, இவளுக்குப் பிடித்தவனா ஒருத்தனைப் பார்த்து, கல்யாணம் செய்துவைத்து, வீட்டைவிட்டு வெளியே அனுப்புவோம்னு தோணவேயில்லை, பார்!"

ஒரே சிரிப்பு!

சிரிப்பலை ஓய்ந்ததும், சுதர்சனம் சமயோசிதமாக, " பிரகாசம்! சௌம்யாவுக்கு உன்னிடம் மட்டும்தான் நம்பிக்கை இருக்கு, அதனாலே அந்தப் பொறுப்பை உன்னிடமே விட்டுவிடுகிறேன், நீங்க ரெண்டுபேரும் இப்பவே உட்கார்ந்து பேசி, நல்ல முடிவெடுத்து, சொல்லுங்க! கல்யாண நாள், மண்டபம், கச்சேரி, ஊர்வலம் எல்லாத்துக்கும் நாங்க ஏற்பாடு செய்ய காத்துண்டிருக்கோம்!"

பிரகாசம் தன் அம்மாவை, சௌம்யாவை, அவள் தாயை, மாமாவை ஒரு முறை கண்ணுக்குள் பார்த்துவிட்டு, பெரிய விளக்கத்துக்கு தயாரானான்.

" ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம், நம்ம குடும்ப உறவுகளையெல்லாம் மறந்துவிட்டு சிந்திச்சுப் பாருங்க! ஒரு பெண் சிறுவயதிலிருந்தே படிப்பில், கலைகளில், பேச்சில் சூட்டிகையாயிருந்து, முதுகலை பட்டம் பெற்று, ஐ.ஏ.எஸ். தேர்வில் ரேங்கில் வந்து அரசாங்கமே அவளைப் பாராட்டி அவள் விருப்பத்திற்கேற்ப, சொந்த மாவட்டத்திலேயே கலெக்டராக, எல்லா விதிகளையும் தளர்த்தி, அமர்த்தியிருக்கிறவளை கரம் பிடிக்கிறவன், வாழ்க்கை முழுவதும் கூட இருந்து அவளை பாதுகாத்து சந்தோஷமாக வைத்துக்கொள்ளப்போகிறவன், வானத்திலிருந்து இறங்கிவந்த தேவதைபோல அழகாக உள்ளவளை மணக்கிறவன், அவளுக்கு எல்லா வித்த்திலும் ஓரளவாவது ஈடாக இருக்கவேண்டாமா? 

மாமா! உங்களுக்கு உங்களுடைய ஒரே தங்கை, என் அம்மாமீது, அன்றிலிருந்து இன்றுவரை கொள்ளைப் பிரியம். அவள் பெற்றவன் என்பதனால், என்மீதும் பிரியம். நீங்கள் எங்கள்மீது பிரியம் வைத்திருப்பதால் உங்கள் மகள் சௌம்யாவுக்கு எங்கள்மீது உங்களைவிட அதிகமாக பிரியத்தை வளர்த்துக் கொண்டுவிட்டாள். 

Add comment

Comments  
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைAbiMahesh 2019-04-03 07:32
Nice Story Sir! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-03 08:09
Thanks a lot, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-02 19:14
மிக்க நன்றி, கர்ணா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைkarna 2019-04-02 14:12
அருமையான பதிப்பு அய்யா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைmadhumathi9 2019-04-02 13:48
wow aangalilum purinthu kondu nadakka koodiyavargal irukkiraargale :hatsoff: great story.parantha manappaanmai kondavarthaan (y) :clap: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-02 13:53
மதுமதிம்மா! இப்ப இருக்காங்களோ, இல்லையோ, ஆனா கட்டாயம் இப்படித்தான் ஆண்களும் காதலும் இருக்கணும் என்பது என்ஆசை! மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top