Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவை - 5.0 out of 5 based on 2 votes

 "வாம்மா, ரமா! சௌக்கியமா? உன் சிநேகிதி புஷ்பாவைப் பார்க்க வந்தியா? அவ வெளியிலே போயிருக்கா, கொஞ்ச நேரத்திலே வந்துடுவா, உட்கார்!"

 " அங்கிள்! நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன், ஒரு சந்தேகம்........."

 " நான் பிலாசபி புரொபசர், உன் சந்தேகங்களை தீர்த்துவைக்கிற சப்ஜெக்ட் எதுவும் படிக்கலியே......" 

என்று சிரித்தார்.

 " அங்கிள்! பிலாசபிலே, கடவுள் சம்பந்தப்பட்ட விஷயமும் வருமோனோ, அது தொடர்பாகத்தான்....."

 " குட், குட், கேளு! எனக்கு தெரிந்ததை சொல்றேன்!"

 " கடவுள்னு நாம் சொல்கிறவர், நாம் பார்க்கிற, பார்க்காத, பார்க்கமுடியாத, கேட்கமுடியாத, கேட்கமுடிந்த, உணரமுடிந்த, உணரமுடியாத எல்லாத்தையும் படைத்தவர்தானே,........"

 " அதிலென்ன சந்தேகம், ஆமாம்!"

 " ஒருத்தன் புதிதாக படைக்கிற எந்தப்பொருளும், அவனுக்கு வெளியிலே தானே இருந்தாகணும், அப்படி வெளியிலே இருக்கிற பொருளாலே, தனக்கு அப்பாற்பட்டு இருக்கிற படைத்தவனைப் பார்க்கமுடியுமா?"

 " ரமா! நீ உங்கம்மா வயிற்றிலிருந்துதானே பிறந்தே, பத்துமாதம் அவளுடைய கர்ப்பப்பையிலே இருக்கிற வரையிலே உன்னாலே உன் தாயை, உன்னைப் படைத்தவளை, பார்க்கமுடியாதுதான். ஆனால், பிரசவமாகி நீ சிசுவா வெளியிலே வந்தபிறகு, உங்கம்மாவை பார்க்கிறே, தொடறே, தாய்ப்பால் குடிக்கிறே, பேசறே, அவதான் உனக்கு சோறு ஊட்டறா, ஆடை உடுத்திவிடறா, கொஞ்சறா, அதே போலத்தான், படைக்கப்பட்டவன், தன்னை படைத்தவனை பார்க்கமுடியும், பேசமுடியும், தொடமுடியும்.............."

" அங்கிள்! யு ஆர் சூபர்! இப்பவே போய் நான் எங்க தாத்தாவை மடக்கிறேன், பாருங்க!"

" இரு, இரு, உங்க தாத்தா என்ன கேட்டார், நீ பதில் தெரியாம என்னிடம் ஓடிவந்தே?"

 ரமா யோசிக்க ஆரம்பித்தாள். மனதில் மறுபடியும், தாத்தாவுடன் தான் பேசிய உரையாடலை நினைவுகூர்ந்தாள்.

 தாத்தா கேட்டது, படைக்கப்பட்ட பொருள்களிலே ஒன்று படைத்தவனாக இருக்கமுடியுமா, என்பதே!

 " அங்கிள்! தாத்தா சொல்றாரு, படைக்கப்பட்ட பொருள் எதுவும் படைத்தவனாக முடியாது என்கிறார். அதாவது, தாய்க்குப் பிறந்த சிசு, தானே தாயாக முடியாதென்கிறார்........."

 " ஏன் முடியாது? ரமா! உங்கம்மா வயிற்றிலே பிறந்த நீ, கல்யாணமானபிறகு, தாயாவதில்லையா? தாத்தா சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கலை, சிசுவாக இருக்கிறவரையில், அந்தப் பருவத்தில், அது தாயாக முடியாதென்கிறார்.........அது கரெக்ட்தானே?"

 " அங்கிள்! நீங்களும் நாத்திகன்தானா? நீங்க சொன்னதை, நான் எப்படி புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்றேன், மனிதன் எழுதுகிற ஓவியமோ, கட்டுகிற கோவிலிலுள்ள செதுக்கப்பட்ட சிலையோ, கடவுளாக முடியாது, நம்மை மீறிய பெருஞ்சக்திதான் கடவுள்! அதை கற்பனை செய்யலாம், காவியம் பாடலாம், ஆனா அவை எதுவும் கடவுளாகாது, அவர் உரு, பெயர், இடம், இனம் எதுவுமில்லாதவர், அல்லது எல்லாமே அவர்! இது சரியா, அங்கிள்?"

" சூப்பர், ரமா! இந்தச் சின்ன வயசிலே, இத்தனை பெரிய சத்தியத்தை புரிஞ்சிக்க அந்தக் கடவுள்தான் உனக்கு அருள்கூர்ந்திருக்கிறார். இதை ஒருநாளும் மறக்காதே!"

 ரமா வீடு திரும்பியதிலிருந்து, தாத்தாவின் கண்களில் படாமல் தப்பித்துவந்தாள். ஆனால், தாத்தாவுக்கு தெரியும், பேத்தி தன்னைப் பார்க்க வெட்கப்படுகிறாள் என்று! 

 சிரித்துக்கொண்டார்.

ஆனால், ரமாவினால் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது தாத்தாவுடன் பேசாமல் இருக்கமுடியாது. அதுபோலத்தான், தாத்தாவுக்கும்!

 மாலை தாத்தா வாக்கிங் போக வெளியே வந்தபோது, ரமா எதிர்ப்பட்டாள். 

 " என்ன ரமா! தாத்தாமேலே கோபமா? பேசவே மாட்டேங்கறே...."

 " யு ஆர் மை ஸ்வீட் தாத்தா! உன்னை நான் கோவிச்சுப்பேனா? உன்னோட பேசலேன்னா, நஷ்டம் எனக்குத்தானே! நீ வாக்கிங் போயிட்டு வா! நான் அதற்குள்ளே ரெடியாயிடறேன், அடுத்த ரவுண்ட் பேசுவோம்"

 " ஓ.கே." 

தாத்தா திரும்பியதும், அவருக்கு குடிக்க நீர் கொடுத்துவிட்டு ரமா பேச எதிரே அமர்ந்தாள்.

 " ரமா! நீ கேட்டியே, ஆத்திகனா, நாத்திகனான்னு, அந்த ரெண்டு சொற்களும், சம்ஸ்கிருத்த்திலிருந்து வந்தது, 'அஸ்தி'ன்னா இருக்கிறது, 'ந அஸ்தி'ன்னா, இல்லைன்னு அர்த்தம்! அதிலிருந்து உருவானதுதான், ஆத்திகன், நாத்திகன், எனும் சொற்கள்............"

"அப்படியா, தாத்தா! கடவுள் இல்லைன்னு சொல்றவங்க, இந்த உலகம் எப்படி இயங்குகிறது, உலகத்தை படைத்தது யார்னு சொல்றாங்க?"

Add comment

Comments  
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைAbiMahesh 2019-04-09 20:44
Great Story Sir! Romba deep thoughts and lot to learn from you Sir.. :thnkx: for this story Sir :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-09 21:31
Dear Abhimahesh! Start learning initially ultimately to unlearn the whole lot! Life is a mirage! Meant for exclusively happiness!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைViji. P 2019-04-09 14:09
Ungal ovvoru sirukathaiyilum oru azamana karuthu irukkirathu Sir. Ithai padippathanal en manamum pakkuvappadum endru nambukiren sir. :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-09 16:36
நிச்சயமாக, விஜி! என் இலட்சியமே, அதுதான்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! எனக்கு கிடைத்துள்ள தெளிவும் புரிதலும் எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்பதே என்ஆசை!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-09 07:01
அன்புள்ள கர்ணா! என்மீதுள்ள அன்பால் அதிகமாகவே பாராட்டியுள்ளீர்கள்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைkarna 2019-04-08 21:14
எவ்வளவு ஆழமான விஷயத்தை இப்படி இவ்வளவு எளிமையாக சொல்ல உங்களால் தான் முடிகிறது.உங்கள் ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு கோணம்.அருமை அய்யா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைAdharvJo 2019-04-08 18:09
Can't the creator see himself in his creation :Q: Universal mystery!!
well balanced uncle :hatsoff: :clap: :clap: really oru heavy concept thaan :yes:

Thank you and keep rocking. Great Evening!!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-08 18:13
Thanks Jo!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைmadhumathi9 2019-04-08 14:52
:clap: :hatsoff: arumaiyaana kathai. :clap: :yes: neengal solvathai eatrukilla thaan vendum. :thnkx: :thnkx: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-08 17:26
மதுமதிம்மா! பெற்ற குழந்தையை ஓடிவந்து தூக்கி அணைத்து கொஞ்சுகின்ற தாயைப்போல, என் கதை பிரசுரமானவுடனேயே படித்து உடனே பாராட்டுகிற தங்கள் பாசத்துக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைJebamalar 2019-04-08 12:55
எல்லாவற்றிலும் எல்லாமுமாக கடவுள் இருக்கிறார்... அவர் இன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது... எனவே எதற்கும் கவலை படாமல் சந்தோஷமாக இருக்கலாம்... அருமையான கதை.. சரியான நேரத்தில் சரியான கதையை கொடுத்திருக்கிறீர்கள். :clap: நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-08 17:23
Dear Jebamalar! தங்கள் தாராளமான பாராட்டு என்னை நெகிழவைக்கிறது. மிக்க நன்றி.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top