Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவை

election

பொதுத் தேர்தல், பாராளுமன்றத்துக்கு, விரைவில், நடக்கவிருக்கிற நேரத்தில், கோடீஸ்வரன் முந்திராவின் வீட்டில் அரசியல்வாதிகள் குவிந்து காத்துக் கிடப்பதற்கு கேட்பானேன்?

 "இத பாரு, நல்லகண்ணு! காசை வீசினா, நம்ம ஜனங்க உனக்கு ஓட்டுப் போட்டுவிட்டு, உன் வீட்டு வாசலிலே காத்துக் கிடப்பாங்க, நீயேன் கவலைப்படறே?"

 " அது சரி, அந்தக் காசுக்காகத்தானே, இப்ப நாம இத்தினி பேரும் இங்க காத்துக் கிடக்கிறோம்,.............."

 "அண்ணே! இதிலே ஒரு புதிர், பார்த்தீங்களா! நாமெல்லாம், அரசியலுக்கு வந்து, பணத்தை பாக்கறோம், முந்திராவைப் பாரு! பணத்தை வீசி எறிஞ்சு, அரசியல்வாதிகளை எல்லா கட்சிக்காரங்களையும் வளைச்சுப் போட்டுட்டாரு, அவருதான் கெட்டிக்கார மனுஷன்!"

 ஊரிலே எல்லா பணக்காரங்க வீட்டிலும், இதே காட்சி தான்!

 ஏழைங்க, உழைப்பாளிங்க, விவசாயிங்களுக்கு பாடுபட முன்வந்திருக்கிற கட்சிகள்கூட, மேடையிலே பணக்கார முதலாளிகளை ஏகவசனத்தில் ஏசினாலும், கட்சி நன்கொடைக்கு, தேர்தல் செலவுக்கு, தேவைப்படுகிற பணத்துக்கு எங்கே போவார்கள்? வேறுவழியின்றி, பணக்கார முதலாளிகளின் தயவை நாடித்தான் ஆகவேண்டியிருக்கு!

 தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளும் வேட்பாளர்களும் பணக்கார முதலாளிகளின் வீட்டில் காத்துக் கிடந்தபோது, பிறிதொரு இடத்தில்,ஊரிலுள்ள, இல்லை, இல்லை, மாநிலத்திலுள்ள பணம் படைத்தோர் அனைவரும் ரகசியமாக கூடினர்.

 " ஒவ்வொரு தேர்தலின்போதும், நாம வேட்பாளர்களுக்கும் நன்கொடை கொடுப்பதும், தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தவுடன் நாம அவங்க வீட்டு வாசலிலே டென்டருக்காகவும், லீசுக்காகவும், வொர்க் ஆர்டருக்காகவும் தவம் கிடக்கிறதும், நமக்குள்ளேயே போட்டி ஏற்படுத்தி அவங்க கமிஷனை அதிகப்படுத்தறதும் வாலாயமா போச்சு! இதிலே யார் புத்திசாலி, யார் முட்டாள்னு பார்த்தா அவங்கதான் புத்திசாலின்னு தோணுது, இல்லை, உறுதியா தெரியுது! நம்ம பணத்திலே ஜெயித்து பதவிக்கு வந்தவங்க மறுபடியும் நம்மகிட்ட காசு வாங்கிகிட்டு சலுகை தராங்களே, இது அநியாயமில்லே? அது மட்டுமா? அதிகாரிங்க வேற, மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரையிலும், பிடிக்குப் பிடி, காசை தள்ளினாத்தான் வேலை செய்யறாங்க! கூட்டிக் கழித்துப் பார்த்தா, நாம கொடுத்த பணம்கூட நமக்கு திரும்பி வர்றதில்லை............."

 'உண்மை' ன்னு மண்டபமே அதிர்ந்தது!

 " போதும்! ஏமாந்தது போதும்! நாம இங்க கூடியிருக்கிறது, இந்த ஏமாற்றுவேலைக்கு ஒரு முடிவு கட்டத்தான்!............"

 'ஆமாம், ஆமாம்' குரல் விண்ணை முட்டியது!

 " இப்ப, ஒவ்வொருவரா அவங்க அவங்களுக்கு தோணுகிற யோசனையை தைரியமா சொல்லுங்க, ஒரு முடிவெடுக்காம, நாம இன்னிக்கி கலையப்போறதில்லே..........."

 'ஆமாம், ஆமாம்.'

சிமெண்ட் கம்பெனி முதலாளி, இந்தியாவிலேயே பணக்கார வரிசையில், மூன்றாவதாக இருக்கிறவர்,பேசினார்:

 " நாமே ஒரு தனிக்கட்சி தொடங்கி, நாமும் நம்ம ஆட்களும் எல்லா தொகுதிகளிலும் போட்டியிலே ஜெயித்து ஆட்சிக்கு வந்தாலென்ன? எவனுக்கும் நாம காசுகொடுக்க வேண்டிய அவசியமில்லே, என்ன சொல்றீங்க?"

 கைதட்டல் செவிகளை செவிடாக்கியது!

 கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து மேடைக்கு வந்தார்.

 " அவர் சொன்ன யோசனையிலே ஒரு சிக்கலிருக்கு, நாட்டிலே ஏழைகளின் எண்ணிக்கை, பணக்கார்ர்களின் எண்ணிக்கைவிட பல மடங்கு அதிகம். அரசியல் கட்சிங்க, நம்ம கட்சியை 'பணக்காரன்கட்சி'ன்னு முத்திரை குத்தி, மக்களிடம் ஏழை- பணக்காரன் பிரிவை ஏற்படுத்தி நமக்கு டிபாசிட் கூட கிடைக்காம பண்ணிடுவாங்க, இன்னொரு விஷயம், நமக்கு எதிரா சாதி, மதம், கலாசாரம், மொழி வித்தியாசங்களை பெரிதுபடுத்தி, நம்மை கவுத்துருவாங்க, வாக்காளர்கள் நம்மிடம் பணத்தை வாங்கிகிட்டு, அவனவன் சாதிக்காரனுக்கும்,மதம் சார்ந்தவனுக்கும், ஓட்டைப் போட்டுறுவாங்க! அதனாலே, நாம ஒருநாளும் முன்னணியில் நிற்கக்கூடாது, பின்னாலிருந்து சூத்திரதாரியாக ஆட்டிவைக்கணும்....."

 'உண்மை, உண்மை' கோஷம்!

" ஆட்டிவைக்கமுடியாமல், மாட்டிக்கொண்டு விழிக்கிறோமே என்பதுதானே, பிரச்னையே! வேறு நல்ல யோசனை ஏதாவது, யாராவது......?"

 பின்வரிசையிலிருந்து, மெதுவாக ஒருவர் மேடைக்கு வந்தார்.

 " இப்ப நாம எந்தக் கட்சி ஜெயிக்கப் போகிறதுன்னு தெரியாம, எல்லா கட்சிக்கும் பணம் தரவேண்டியிருக்கிறது, அதற்குப் பதிலாக, நமக்குள்ளே தீவிரமாக ஆலோசித்து எந்தக் கட்சி வெற்றி பெற்றால், நமக்கு நன்மை என்பதை தீர்மானித்து, அந்தக் கட்சிக்கு மட்டும் பணம் தந்து ஜெயிக்கவைப்போம். பணபலம் இல்லாமல், எந்தக் கட்சியும் வெற்றி பெறாது.........."

"இப்போ, விவாதம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது.........."

 " ஒரு நிமிஷம்" கூட்டத்திலிந்து ஒரு குரல் வந்ததும், எல்லோரும் அந்த திசையில் பார்த்தனர்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைரவை. 2019-04-25 06:18
Thanks Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைabimahesh 2019-04-24 21:39
Nice Story Sir! Currently most of the people are like this.. It would be good if any changes happen :thnkx: Sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைரவை. 2019-04-24 18:44
மிக்க நன்றி, ஜெபமலர்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைJebamalar 2019-04-24 16:37
பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்கிற நிலை தலை விரித்தாடுகிறது... இந் நிலை மாறினால் நன்றாக தான் இருக்கும்... கதை அருமை sir..
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைAdharvJo 2019-04-24 15:52
3:) why people are so mean facepalm As I always say cleaning has to happen from grass route level illana Ethaiyum ethir paradha vazha kathukanum (as we are now) :yes: People get influenced by others who are already in power....struggle seithu naladhu pananumnu vandhalu eppadiyo track mari poiduranga :D so nothing is in our hands....Until there is unity our nation will remain the same same same!!
Good one uncle :clap: :clap:
thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைரவை 2019-04-24 16:11
dear Madhumathimma & AdharvaJo,
எனக்கு முன்பே படித்து சுடச்சுட சூடாக விமரிசனம் செய்துள்ளீர்கள் மிக்க நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காசை வீசினால், வெற்றி உறுதி! - ரவைmadhumathi9 2019-04-24 14:48
facepalm mukkaalvaasiper ippo suyanalam migunthu kaanappadugiraargal.arasiyal vaadhigalai sollave vendaam.
:sad: Intha nilai eppothaan maarumo? Nalla kathai. :clap: :GL: sir.arumai :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top