Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவை

dream-home

முருகேசன் கையில் ஒரு விளம்பர துண்டு பிரசுரத்துடன் வீட்டுக்குள் நுழையும்போதே, " உடனே எல்லாரும் இங்கே வாங்க!" என்று குரல் கொடுத்தார்.

சமையலறையில் இருந்த கேஸ் ஸ்டவ்வை அணைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள், முருகேசனின் மனைவி பாப்பம்மா!

'சுடோகு' போட்டுக்கொண்டிருந்த, முருகேசனின் தந்தை ராமசாமி விரைந்து வந்து சேர்ந்துகொண்டார்.

 ராமசாமியின் மனைவி சீதாவும், உருட்டிக்கொண்டிருந்த ஜபமாலையுடன் வந்து சேர்ந்தாள்.

 " என் மகன், சிங்கக்குட்டி சிங்காரம் வீட்டிலே இல்லையா?"

 " இதோ வந்துட்டேம்ப்பா!"

எல்லோரும் கூடியவுடன், முருகேசன், தொண்டையை கனைத்துக்கொண்டு, கையிலிருந்த விளம்பரப் பிரசுரத்தை தூக்கிப் பிடித்து, "இந்த சின்னக் காகிதம், நம்ம வாழ்க்கையையே எங்கோ உயரே கொண்டுபோகப் போகிறது, படிக்கிறேன், கவனமாக கேளுங்க!" என்று படித்தார்.

 " இரு, இரு, அது என்னவாக இருக்கும்னு என் ஊகத்தை சொல்றேன், அதுபோல, ஒவ்வொருவரும் சொல்வோம், அதிலே யார் கரெக்டா சொல்றாங்களோ, அவங்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன்!"

 " இரு, இரு, தாத்தா! அதுக்கு முன்பு, நீ என்ன பரிசு கொடுக்கப்போறேங்கறதை கரெக்டா சொல்றவங்களுக்கு, நான் ஒரு பரிசு தருவேன், அதனாலே, ஒவ்வொருவரும் யோசித்து சொல்லுங்க!"

 கூடியிருந்தோர் கொல்லென சிரித்ததும், சபை களை கட்டியது!

 " நான் சொல்லப் போறது, ரொம்ப முக்கியமான விஷயம்டா! கொஞ்சம் சீரியஸா கேளுங்கடா!"

 " தாத்தா! உன்னை அப்பா 'டா' போட்டு பேசறாரு, உனக்கு கோபம் வரலே?"

 சிரிப்புக்கிடையே, தாத்தா, " டேய் சிங்காரம்! உங்கப்பனுக்கு நீ எப்படி சிங்கக்குட்டியோ, அப்படித்தான், உங்கப்பன் எனக்கு செல்லக்குட்டி, வெல்லக்கட்டிடா! ' 'டா' போட்டா பரவாயில்லேடா!"

 முருகேசன் சலித்துப்போய், எழுந்தார்.

 சிங்கக்குட்டி சிங்காரம் ஓடிவந்து, " எங்கப்பா! செல்லப்பா! முத்தப்பா! தமாஷா பேசினா, கோவிச்சிக்க கூடாது.........."

 " டேய் நிறுத்துடா! உங்க பாட்டி அகராதியை படிச்சு, தேடிப் பிடிச்சு, உங்கப்பாவுக்கு 'முருகேசன்'னு முருகப் பெருமான் பெயரை வைச்சிருக்கா, அதைப்போய், 'முஸ்தாஃபா'ன்னு மதம் மாற்றி பெயர் வைக்கிறே? நோ, நோ!"

 மறுபடியும் சிரிப்பு!

" அம்மா! பாப்பம்மா! நீங்க ரெண்டு பேரும்தான் நான் சொல்லப்போற விஷயத்தை முக்கியமா கேட்கணும், அதனாலே, நாம மூணுபேரும் மொட்டை மாடிக்குப் போய் பேசுவோம், வாங்க! தாத்தாவும் பேரனும் பட்டிமன்றம் நடத்திக்கட்டும்!"

 தாயும் தாரமும் பின்தொடர, முருகேசன் படியேறி மாடிக்குச் சென்றார்.

 தாத்தாவும் பேரனும் சில வினாடிகள் கழித்து, மாடிப்படியில் அமர்ந்து, மூவரும் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்டனர்.

 " அம்மா! ரொம்பநாளா உனக்கு இருக்கிற ஒரு குறையை, கூடிய சீக்கிரத்திலே தீர்த்திடுவேன். அதாம்மா! ஊரிலே எல்லாருக்கும் சொந்தவீடு இருக்கு, என் ஒத்த பிள்ளைக்கு மட்டும் அது இல்லாம, வாடகை வீட்டிலே வாழ்ந்திண்டு, வருஷத்துக்கொரு தடவை சட்டி தூக்கவேண்டியிருக்குன்னு, வருத்தப்படுவியே, அது இனிமே இருக்காது, நாம சொந்தமா வீடு கட்டப்போறோம்........."

" அப்படியா முருகா! ரொம்ப சந்தோஷம்டா!"

" பாப்பம்மா! உனக்கொரு நல்ல செய்தி! நீ அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பியே, இந்த சந்தைக்கடை இரைச்சலும் கூச்சலும் நாற்றமும் இல்லாம, காற்றோட்டமா, நிசப்தமா, பசுமையா இருக்கிற இடத்துக்குப் போகணும்னு, அதுவும் நிறைவேறப்போவுது!"

" அப்படீங்களா! அப்பாடா! விட்டது இந்த கூச்சலும், மோதலும்! நம்ம வீட்டைச் சுற்றி கடைங்க! பற்றாக்குறைக்கு, பிளாட்பாரம் கடைங்க வேறே! வெற்றிலை, பாக்கு கடிச்சு அங்கங்கே தூ, தூ,ன்னு துப்பறதனாலே, வீதியிலே காலை வைக்கவே அசிங்கமாயிருக்கு......"

" இப்ப, படிக்கிறேன், கேளுங்க! 'நடுத்தர வர்க்க குடும்பங்களுக்காகவே இந்தப் புதிய திட்டம்! மலிவு விலை! கிரவுண்ட் ஐந்து லட்ச ரூபாய் மட்டுமே! ஆயிரம் சதுர அடி பங்களா! பதிவுச்செலவு உட்பட, முப்பதே லட்ச ரூபாய்! இருப்பது பத்தே வீடுகள்! முதலில் ரூபாய் பத்து லட்சம் அட்வான்ஸ் தருபவருக்கு முன்னுரிமை! 

இடம்: மேற்கு தாம்பரம், ரயில் நிலயத்திலிருந்து ஐந்தாவது மைல்! அருகே, பள்ளிக்கூடம், மருத்துவ மனை, பஸ்வசதி, எல்லாம் உண்டு!முந்துங்கள்! தொடர்பு கொள்ள: தொலைபேசி எண்: 11111 11111'

 முருகேசன் படித்து முடித்ததும், அவன் தாய் சீதா, மகனை அணைத்து முத்தமிட்டு, " நல்லகாலம் பிறந்துடிச்சு! உடனே பணத்தை கட்டிட்டு வாடா!"

 " என்ன பாப்பம்மா! நீ என்ன சொல்றே?"

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைAdharvJo 2019-05-02 13:57
valuable message uncle :clap: :clap: screen play is :cool:
We got to accomdate our desires within our limits...if not got to be ready to spend rest of the life as creditor :yes:

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைரவை.. 2019-05-04 07:22
அன்புள்ள ஜோ! உனக்கு இந்தக் கதை பிடிக்கவில்லையோ, அதனால்தான் ஏதும் கூறவில்லையோ, என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, உனது மனமுவந்த பாராட்டு உற்சாகமும் மகிழ்ச்சியும் தருகிறது! நன்றி.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைAbiMahesh 2019-04-30 19:48
Nice Story Sir! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைரவை.. 2019-04-30 20:21
Thanks Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைhari k 2019-04-30 11:21
good one sir :clap: .. Real lifela neraya peru ipdi yosiichu matiigaraga.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைரவை.. 2019-04-30 14:08
மிக்க நன்றி, ஹரி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைரவை. 2019-04-30 08:04
Thanks madhumathimma! I have found many many families suffering due to ill-timed/wrong decisions due to inappropriate preferences in life!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வயதில் சிறியவனாயினும்....! - ரவைmadhumathi9 2019-04-30 06:49
:hatsoff: arumaiyaana kathai sir.poraamai thaan sir mudhal kaaranam aduthu aasai. Ippadi kaaranam solli konde pogalaam. Aduthavar maathiri irukkanum endru ninaithu thaan sikkalil maattikolgiraargal.nalla karuthu sir. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top