Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவை

horse-racing

" ய்! அங்கே நடக்கிற லவ்சீனை பார்க்காம, என்னடா பெரிய வேலை?"

 சுகந்தா ஐ.டி. கம்பெனி ஆபீஸ்லே, ஒரு ஊழியர் மற்ற ஊழியர்களை, இப்படித்தான் தினமும் உசுப்பிவிடுவார்!

 மற்றவர்கள், லவ்சீன் நடக்கிற இடத்தைப் பார்த்தனர்!

 காந்திமதியும் கார்த்தியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்! இருவரில், காந்திமதியின் முகம் அதிக சுடர் விட்டது!

 " டேய்! கார்த்தி ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா! பொதுவா, பெண்கள்தான் சிரித்துப்பேசி ஆண்களிடம் பணம் கறப்பார்கள்! பாவம்டா, காந்தி! அந்த சூதாடிப்பயலை நம்பி, அவன் கேட்கிறபோதெல்லாம் தன் பணத்தைக் கொடுத்து, மோசம் போறாளேன்னு வருத்தமா இருக்குடா!"

 " உனக்கொரு விஷயம் தெரியுமோ? கார்த்தியும், காந்தியும் ஒரே ஊரிலே பிறந்து வளர்ந்தவங்க! இங்கே வேலையிலே சேருவதற்குமுன்பே, ஒருத்தொருக்கொருத்தர் தெரிஞ்சவங்க, நெருங்கிப் பழகினவங்க! ரெண்டு குடும்பங்களுமே நெருக்கமாம்!"

 " சரி சரி, அங்கே பார்! நோட்டு நோட்டா எண்ணிக் கொடுக்கறா காந்தி! அதை அப்படியே பிடுங்கிண்டு, குதிரைப் பந்தயத்துக்கு ஓடறான், பார், கார்த்தி!"

 " இவன் ஓடற வேகம்கூட, பந்தயத்திலே, ஓடாத குதிரைமேலே ஆயிரக்கணக்கிலே கட்டி தோத்துட்டு, தலையிலே துண்டை போட்டுண்டு திரும்பி வருவான்............."

 " ஒரு முறை நானும் அவனுடன் போயிருந்தேன், கையிலே இருக்கிற பணத்தை ரேஸிலே இழந்துட்டு, வீட்டுக்கு திரும்பறப்ப, ஓட்டலுக்குள்ளே நுழைஞ்சான், ரெண்டு ஸ்வீட் மசால்தோசைன்னு தடபுடலா ஆர்டர் பண்ணிணான், நான் அவனை ஆச்சரியத்தோட பார்த்தேன், அவன் சொல்றான், 'குதிரைக்கு சாப்பிட ஆயிரக்கணக்கிலே கொடுத்தாச்சு; நமக்குன்னு நூற்றுக்கணக்கிலே செலவு பண்றோம், ஜமாய்'னு சொல்லிட்டு சிரிக்கிறான்................"

 ஆம், அவர்கள் சொல்வது வெறும் வம்பல்ல; நூற்றுக்கு நூறு உண்மை! கார்த்தி சனி, ஞாயிறுகளில் தவறாமல் ரேஸ் கோர்ஸ் போய் குதிரைமேலே பணத்தைக் கட்டி, தோற்றுவிட்டு முகத்தை தொங்கப்போட்டுண்டு வருவான்.

 மைதானத்தில் இழந்தது போதாதென்று, சீட்டாட்டத்திலும் பணத்தை இழப்பான். நண்பர்கள் எத்தனையோ சொல்லியும், அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு, " ஒருநாள், லட்சக்கணக்கிலே ஜாக்பாட் அடிக்கப்போறேன், பார்த்துக்கொண்டே இருங்க, அந்த நாள், நாளைக்கேகூட வரலாம்." என்று எப்போதும் பதில் சொல்வான்.

 கார்த்தி, காந்தி இருவரும் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கேயே பட்டப் படிப்பை முடித்து சாஃப்ட்வேரும் படித்து தேறி சென்னை வந்து வேலையில் சேர்ந்தவர்கள்.

 காந்திமதியின் குடும்பம் சீராக, வருமானப் பற்றாக்குறை ஏதுமின்றி, வாழ்கிற மத்தியதர வகுப்புக் குடும்பம்!

 ஆனால், கார்த்தியின் குடும்பமோ, தேவைக்கு மேலேயே வருமானம் பெற்று சமையற்காரி, வேலைக்காரி, கார்டிரைவர் என்று பணியாளர்களுடன் செழிப்பாக வாழ்ந்த குடும்பம், திடீரென குடும்பத் தலைவர் மாரடைப்பால் காலமானபின், நிலை குலைந்துபோய், தற்போது சின்னக்குழந்தைகளுடன் கார்த்தியின் தாய் கும்பகோணத்தில் திண்டாடிக்கொண்டிருக்கிறாள். கார்த்தி, எப்படியாவது பெரும் தொகை சம்பாதித்து, தன் குடும்பத்தை பழைய செழிப்பான நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று ஒரு வெறி பிடித்து ரேஸிலும் சீட்டுவிளையாட்டிலும் நஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

 இந்த உண்மைகள் அத்தனையும், காந்திமதிக்குத் தெரியும்!

 ஆபீஸில் அவளுடன் பணியாற்றும் அனைவருக்கும் அவளிடம் மிகுந்த பரிவும் நட்பும் உண்டு. அவர்கள் கூடிப் பேசினர்.

 " பாவம், காந்திமதி! அப்பாவிப் பெண்! வெளுத்ததெல்லாம் பால்னு நம்பறா! சொந்த ஊர்க்காரன் தன்னை கைவிடமாட்டான்னு நம்பி, கார்த்தி கேட்டபோதெல்லாம் பணம் கொடுக்கறா, ஆனா, கார்த்தி போற போக்கைப் பார்த்தா, சீக்கிரமே வேலையை விட்டுவிட்டு நடுத்தெருவுக்கு வந்துருவான்போலிருக்கு! எல்லாரிடமும் கடன் வாங்கிட்டு, திருப்பிக் கொடுக்கமுடியாம, ஓடி ஒளியறான், எல்லா பணத்தையும் குதிரைவாலிலே கட்டினான், அது காலை வாரிவிட்டுவிட்டது! நம்ம கடமை, காந்திமதியை எச்சரித்து காப்பாத்தணும்..........."

 எல்லோரும் காந்திமதியை தேடிச் சென்றனர். அவள், தன் வேலையில், சிறிதுகூட எந்தவித பாதிப்பில்லாமல், மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்தாள்.

 " காந்தி! உன்னுடன் கொஞ்சம் பேசணும்மா! வெளியிலே வரியா?"

 " சாரி! இந்த வேலையை பாதியிலே நிறுத்தமுடியாது, மன்னிக்கணும், இரண்டுமணி நேரம் கழித்து, நானே உங்களை தேடி வரேன், சரியா?"

 அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல், வேலையில் தொடர்ந்து ஈடுபட்டாள்.

 ஏமாற்றத்துடன், நண்பர்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பினர்.

 காந்திமதிக்கு அவர்கள் தன்னிடம் என்ன பேசத் துடிக்கிறார்கள் என்று தெரிந்துதான், அவர்களுடன் பேசுவதை தவிர்த்தாள்.

 அவள் கண்ணோட்டமே வித்தியாசமானது!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைAbiMahesh 2019-04-27 19:42
Nice Story Sir! Karthi is lucky to have Ganthimathi 😀 :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைரவை. 2019-04-28 06:41
Thanks Abhimahesh! ஜாடிக்கேற்ற மூடியை சேர்ப்பதில், இறைவன் தவறுவதில்லை!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைJebamalar 2019-04-26 22:36
Nice story sir... Achieve pana goal set panitu try panite iruntha nichayam win pana mudium intha karthi madri...
:clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைரவை. 2019-04-27 06:24
Thanks Jebamalar! Main theme is the acceptance of the hero as he is by the heroine! Only when we try to change/correct the other person, clash is bound to enter!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைAdharvJo 2019-04-26 19:17
Uncle, this is something weird :yes: and you have projected it very differently... Anbu irukalam namalala mudinja help needy ones ku extend panalam.....we can trust god but we must be responsible for our acts...panam irundhu if karthik is spending on horse race is ok but he is not doing so. Gambling is luck based thonum. He is taking this as main source :eek:

Your message on trust and love is appreciable :clap: :clap:
thank you and keep writing.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைரவை. 2019-04-26 19:45
Thanks Jo!
The main theme of the story is NOT gambling/encouraging gambling!
It is to stress full acceptance of a person with all his goods and bads!
One has to face realities in life in his or her own way and realise the Truth!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைmadhumathi9 2019-04-26 16:38
:hatsoff: sir.great story.padaiththavan meedhu nambikkai vaippathu patri kooriyathu miga arumai. :clap: (y) :GL: sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைரவை. 2019-04-26 18:59
Thanks Madhumathimma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைரவை. 2019-04-26 16:25
Thanks Hari! Even before I read the story you have done it and complimented me! You are kind to me!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முழுமையாக ஏற்பாய்! - ரவைhari k 2019-04-26 14:34
Nice to read sir,, (y) :clap: ,idhula lifela nadakumanu terila but still we have a hope for getting a better life...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top