Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு? - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு? - ரவை

housing-society

ங்கள் தொகுதி குடியிருப்போர் சங்கம், வரப் போகிற தேர்தலில், தொகுதியில் குடியிருப்போர் நலனுக்காக பாடுபடுகிற ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுத்து, அவரை ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி பெறச்செய்தால், அவர்மூலம் தொகுதிக்கு தேவையான வசதிகளை செய்துகொள்ளலாமே எனும் நோக்கத்தில், ஞாயிறு காலை பத்து மணிக்கு கூட்டத்தை அறிவித்திருந்தது.

 அதற்கு முதல்நாள், சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாலை ஐந்து மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சங்கத் தலைவர் வீட்டில்தான் எப்போதும் நடக்கும்.

 தலைவர் பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே, கூட்டத்துக்கு தயாராகிவிட்டார்.

 காலம் நகர்ந்துகொண்டிருந்தது! உள்ளுக்கும் வாசலுக்குமாக, தலைவர் நடை பயின்றார். 

 " ஏங்க! இப்படி குட்டி போட்ட பூனைமாதிரி அங்கேயும் இங்கேயுமா அலையறீங்க? வாசல்வரை வந்தவங்க, உள்ளே வரமாட்டாங்களா?"

 " நீ சொல்வதும் சரிதான்!" என்று சோபாவில் அமர்ந்தார்.

 செல்போன் இசைத்தது, எடுத்தார்

 " தலைவரே! காத்தமுத்து பேசறேன், வீட்டிலே எதிர்பாராத விருந்தாளிங்க வந்திருக்காங்க, எனக்காக காத்திருக்கவேண்டாம், நீங்க கூட்டத்தை நடத்துங்க, நான் முடிந்தால், லேட்டா வந்து கலந்துக்கறேன்.பை!"

 தலைவரின் மனைவி, 'களுக்'கென சிரித்தாள்.

 " உனக்கு சிரிப்பாயிருக்குடீ, என் பொழப்பு! ஏதோ தொகுதியிலே இருக்கிறவங்களுக்கு நல்லது பண்ணலாமேன்னு நினைச்சா, அவனவன் பிலிம் காட்டறான், வரட்டும், இந்த வருஷத்தோட தலைவர் பதவியை தலை முழுகிடறேன், எவனாவது வந்து நடத்தட்டும்!"

 வெளியில் நிழலாடியது! யாரோ வருவதுபோல் தெரிகிறதே என உற்சாகமாக, தலைவர் வெளியே வந்தார்.

 எதிரிலுள்ள டீக்கடைக்காரப் பையன்!

 " இப்ப நடக்கப்போற கூட்டத்துக்கு எத்தனை டீ தேவைப்படும்னு முதலாளி கேட்டுக்கிட்டு வரச்சொன்னார், டீமட்டும் போதுமா, மசால்வடை வேணுமான்னும் கேட்டாரு...."

 முதலாளிக்கு மூண்டிருந்த கோபத்தில், "எதுவுமே வேண்டாம், போ!" என்று பையனை விரட்டிவிட்டு வீட்டுக்கதவை சாத்தி தாள் போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்தார்!

 யூஸ்லெஸ் ஃபெலோஸ்! பங்க்சுவாலிடியே கிடையாது! அஞ்சுமணிக்கு மீட்டிங்னா ஏழுமணிக்கு வருவானுங்க! வந்துவிட்டு, அரைமணி நேரத்திலே, ஏதோ அவசரவேலைன்னு கம்பி நீட்டிடுவானுங்க!

 ஆனா, கேள்வி கேட்கமட்டும் ரெடியா வருவானுங்க! இவனுங்க இந்த ஒழுங்கிலே இருந்துகிட்டு, பிரதம மந்திரியிலிருந்து, மேயர் வரைக்கும் எல்லாரையும் குறை சொல்லுவானுங்க!

 இப்படி ஏதேதோ சிந்தித்தவாறே, கண் அயர்ந்துவிட்டார். 

 செல்போன் மணியடித்து தலைவரை எழுப்பியது.

 " தலைவரே! கூட்டத்துக்கு வரச்சொல்லிட்டு, வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியிலே போய்ட்டீங்க, நாங்கள்ளாம் வந்து நெடுநேரமா, உங்க வீட்டுவாசலிலே தேவுடு காத்துக்கிட்டிருக்கோம். இருக்கவா, போகவா?"

 அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து கதவைத் திறந்து பார்த்தால், ஏழுபேர் எதிரில் கோபமாக நிற்கிறார்கள்!

 மணி ஏழு!

வந்திருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தலைவர் கூட்டத்தை துவங்கினார்.

 " நாளைக்கு நடக்கவிருக்கிற உறுப்பினர் கூட்டத்தை எப்படி நடத்தறது, என்ன பேசறது, என்ன சிபாரிசு செய்வது, என்ன முடிவு எடுப்பது என்பதை விவாதித்து முடிவெடுக்கத்தான், இப்ப கூடியிருக்கிறோம், ஒவ்வொருத்தரா சொல்லுங்க!"

 " தலைவா! டீ, வடைக்கு சொல்லிட்டு வரட்டுமா?"

 " இன்னுமா சொல்லலே, சரிதான் போ! எப்ப டீ குடிக்கிறது, எப்ப கூட்டத்தை நடத்தறது, இதெல்லாம் முன்பே சொல்லியிருக்கவேண்டாமா?"

 தலைவரின் பொறுமை எல்லை கடந்துவிட்டது.

 " முன்பே சொல்லாம விட்டது, என் தப்புதான், நான் இந்த தலைவர் பதவி வகிக்க லாயக்கில்லாதவன், நான் ராஜினாமா செய்கிறேன் இந்த நிமிடமே, வேற தலைவரே உடனே தேர்ந்தெடுத்து நடத்துங்க!" என்று கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு எழுந்தார்.

 " இப்படியெல்லாம் முணுக்னு கோவம் வந்தா எப்பிடி!"

 " நீங்க சுருக்னு குத்திப் பேசினா, முணுக்னுதான் கோபம் வரும்."

 " நான் பேசினது தப்புன்னா, மன்னிப்பு கேட்டுக்கறேன்....."

 " தலைவா! அவருதான் மன்னிப்பு கேட்டுட்டாரே, விட்டுறுங்க அத்தோட! கூட்டத்தை நடத்துங்க!"

 " சரி, இப்ப ஒவ்வொருத்தரா அவங்க அவங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க!"

 அதற்குள், எதிர்க்கடையிலிருந்து வடையும் டீயும் வரவே, நிதானமாக எல்லோரும் சாப்பிட்டனர்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு? - ரவைரவை. 2019-04-26 14:02
Thanks, Madhumathimma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு? - ரவைmadhumathi9 2019-04-26 12:13
:D :grin: sila udhavaakkaraiyibaal katchikkum thondar koottathukkum ketta peyar erpadugirathu facepalm :GL: sir. (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு? - ரவைAdharvJo 2019-04-26 11:57
:D :D reality sometime stinks :grin: Along with useless guys Innum oru varathi pottukalam uncle...Funny buggers facepalm That was a good one :clap: :clap:
reading this story it reminds those funny talks mic kudutha opponent-a kili kilinu kilikura time la thanadoiya sokka kilapoguradhu marandhu povanga parunga :lol: :P what a pity what a pity.

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - யாருக்கு உங்கள் ஓட்டு? - ரவைரவை. 2019-04-26 14:01
Dear Jo! Thanks for elaborate comments.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top