(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - என் ரியா, ஏன் ரியா? - மன்னை சரண்

னந்த் தன் நண்பனிடன் தயக்கமாய் கேட்டான் “ ரியாகிட்ட என் காதலை சொல்லிவிடலாம் என்று சொல்கிறாயா ” “ இன்னும் என்னடா தயக்கம், ரியா உன்னை தவிர பசங்க யார்கிட்டேயும் சகஜமாக பேசுவது கிடையாது. காலையில் குட்மார்னிங்க் முதல் இரவு குட் நைட் வரை உனக்கு மட்டும் தான் வாட்ஸ்ஆப் செய்கிறாள். ஒரு தடவை உன் மொபைல் சர்வீஸுக்கு போனபோது அது திரும்பி வரும்வரை அவளும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாமல் இருந்தாள். ரிக்கார்ட் நோட் தொடங்கி செலவுக்கு பணம் வரை அவள் உனக்கு என்றால் ஓடி வந்து உதவி செய்கிறாள். இப்படி சகலமும் நீதான் என்று இருப்பவள் இன்னமும் உன்னை நண்பனாகத்தான் நினைக்கிறாள் என்று நீ நினைத்தால் நீ ஒரு முட்டாள் ”. ஆனந்த் தயங்க… “ நான் வேண்டும் என்றால் உனக்காக அவளிடம் பேசி பார்க்கவா? ” . ஆனந்த் நீண்ட யோசனைக்கு பிறகு சரியன தலையாட்டினான்.

 இரண்டு மணி நேரம் கழித்து வந்த சுகுமாரை ஆவலுடன் எதிர்கொண்டான் ஆனந்த். “ என்னடா ஆச்சு? ”. சுகுமார் உதட்டை பிதுக்கினான். “ நீ அவளை காதலிப்பதாக சொன்னதற்க்கு அவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. சாதாரணமாக பேசிவிட்டு போய்விட்டாள் ”. ஆனந்திற்கு சப்பென்று போனது. வாரம் ஒன்று கடந்து போயிருக்க, அந்த ஒரு வாரம் ஆனந்த் நெருப்பில் நிற்பதைப்போல இருந்தான். ரியா என்னதான் நினைக்கிறாள் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை, அவளிடம் எந்த சலனமும் இல்லை ஆனால் அவனுடன் பேசுவதை மட்டும் தவிர்க்கிறாள் என்பது புரிந்தது.. பொறுமை இழந்த ஆனந்த் இன்று எப்படியும் அவளுடன் பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்தபோது அவளே அவனை போனில் அழைத்தாள்.

 இருவரும் வழக்கமாக சந்திக்கும் மரத்தடியில் ஆனந்த் காத்திருக்க ரியா வந்தாள். “ முதலில் கை கொடுடா..” ஆனந்த் விழிக்க “ என்னடா புரியலையா விப்ரோ கம்பனியில் நீ ப்ளேஸ் ஆகிவிட்டாய் இப்போதுதான் நோட்டீஸ் போர்டில் பார்த்துவிட்டு வருகிறேன்.” ஆனந்த் இதில் தேர்ச்சிபெற ரியாதான் முழுகாரணம். வேலை கிடைத்த விஷயம்கூட அவன் மனதில் பதியவில்லை. “ ரியா… நான் உன்னிடம்….. வேற… விஷயமா……..”. ரியா அவன் கண்களை உற்று நோக்கினாள். “ சுகுமார் சொன்ன விஷயம்தானே… நானே உன்னிடம் பேச வேண்டும் என்று இருந்தேன் ”. ஆனந்த் படபடப்பாய் பார்க்க அவளே தொடர்ந்தாள். “ நீ என்னை காதலிப்பதாக சுகுமார் சொன்னபோது எனக்கு கோபமோ, அதிர்ச்சியோ வரவில்லை அழுகைதான் வந்தது. கடைசியில் நீயும் மத்தவங்க மாதிரிதானா ஆனந்த்? என்னுடைய எந்த செயல் நான் உன்னை காதலிப்பதாக உணர்த்தியது. உனக்கு படிப்பில் உதவி செய்ததா ? ரிக்கார்டு நோட் எழுதி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.