“ஒரு நான்சென்ஸும் இல்லை பிரீ. இப்போ எல்லாம் நம்ம காலம் மாதிரி இல்லை. இது புது ஜெனெரேஷன் மக்களோட லவ் ஸ்டைல்!!”
“என்னவோ போ...” என்ற பிரீத்தியின் கண்களில் மீராவின் மொபைல் லாக் ஆனதால் தெரிந்த க்ளாக் கண்ணில் பட்டது.
“ஹேய் இன்னைக்கு டேட் டென்தா???” நம்ப முடியாமல் கேட்டாள் பிரீத்தி.
“ஆமா, இன்னைக்கு டென்த் தான். ஏன்?”
“என் ஹஸ்பன்ட்க்கு நாளைக்கு பர்த் டே ப்பா. அச்சச்சோ மறந்தே போயிட்டேன்! மீரா நான் கிளம்புறேன். நீ அமர் கிட்ட சொல்லிடுறீயா??? நான் நாளைக்கு கேட்ச் அப் செய்றேன்னு சொல்லிடு”
“பிரீத்தி...” என்று மீரா பதில் சொல்ல தொடங்கியப் போது பிரீத்தி அங்கே இருந்து காணாமல் போயிருந்தாள்.
வீட்டை நோக்கிப் பயணம் செய்யும் போது பிரீத்தியின் மனம் அவளுடைய கணவன் விஷ்வாவின் பிறந்தநாளுக்காக என்ன எல்லாம் வாங்க வேண்டும் என்று வேகமாக திட்டமிட்டது. ஓரளவிற்கு மனசுக்குள் ஐடியா வரும் வரை அதையே யோசித்துக் கொண்டிருந்த அவளின் மனம், அதன் பின், வேறு பக்கம் சென்றது.
மீரா பார்த்துக் கொண்டிருந்த கன்ஃபெஷன் போஸ்ட் நினைவுக்கு வந்தது!
எதனாலோ அவளும் விஷ்வாவும் முதல் முதல் சந்தித்துக் கொண்டது அவளுக்கு நினைவு வந்தது.
இரண்டு குடும்பத்தின் பெரியவர்களும் பேசி ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு அது! பெண் பார்க்கும்