(Reading time: 8 - 16 minutes)

சிறுகதை - பரிதாபத்தின் விலை! - ரவை

ந்த தெருவில், வீட்டு வாசலில், ஆங்காங்கே, குழந்தைகள் கூடி, விளையாடினர்!

 

 ஒரே ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த குழந்தை, மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது!

 

 " ஏன் நீ மட்டும் விளையாடாமல் இங்கே உட்கார்ந்திருக்கே?"

 

 " என்னை அவங்க சேர்த்துக்க மாட்டாங்க......"

 

 " ஏன்?"

 

 " எங்கப்பா, அம்மாவை போலீஸ் பிடிச்சிகிட்டு போய்ட்டாங்க! அதனாலே...."

 

 " உன்னை பிடிச்சிக்கிட்டு போகலியே? உன்னை சேர்த்துக்க வேண்டியதுதானே......."

 

 " அவங்க அப்பா, அம்மா அவங்களை என்னோட சேராதேன்னு சொல்லிட்டாங்களாம்......"

 

 " ஓ!"

 

 வீட்டுக்குள்ளிருந்து குரல் வரவே, சிறுவன் எழுந்து உள்ளே ஓடினான்.

 

 " ஏன்டா அங்கே யாரோட என்ன பேச்சு? நேரமாயிடுத்து, வீட்டைப் பெருக்கி சுத்தம் பண்ணு!"

 

 சிறிது நேரத்துக்குப் பிறகு, ஒரு பெண்மணி வீட்டிலிருந்து வெளியே வந்து, என்னைப் பார்த்து,

 

"யார் நீங்க? என்ன வேணும்?"

 

" ஒண்ணுமில்லே, வழியோட போய்க்கிட்டிருந்தேன், முகத்திலே மிகுந்த ஏக்கத்துடன் உங்க வீட்டு குழந்தை உட்கார்ந்திருந்ததை பார்தேன், பரிதாபமாக இருந்தது, மனசு கேட்கலே, அதான் அவனை கேட்டுண்டிருந்தேன்......"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.