அதற்காக இப்படி நேரடியாகவா வந்து நிற்பான்???
“சாரி பிரீத்தி. நான் இப்படி வந்து உங்களை டிஸ்டர்ப் செய்யனும்னு நினைக்கலை. நான் ஜாலி டைப்புன்னு சரியா வராதுன்னு சொல்லிட்டீங்களாமே??”
பிரீத்தி ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் மறுக்காமல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“இங்கே பாருங்க பிரீத்தி, நான் எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்குற பெர்சன் தான். இல்லைன்னு சொல்லலை. பட் பொறுப்பு இல்லாதவன் இல்லை. அதான் எனக்கும் சேர்த்து நீங்க சீரியஸா இருக்கீங்களே??? நாம இரண்டு பேரும் ஜோடி ஆனா பெர்ஃபெக்ட் ஜோடியா இருப்போம். யோசிச்சுப் பாருங்களேன்”
பிரீத்தி தலையை இல்லை என்று அசைத்தாள்.
“அவசரப் பட்டு சொல்லாதீங்க பிரீத்தி. பாருங்க உங்களுக்கு பிடிக்காத என்கேஜ் க்யூ.டி’யைக் கூட நான் இன்னைக்கு உங்களுக்கு காட்டவே இல்லை”
இதையுமா அம்மா ஒப்பித்து வைத்தார்கள்??? நம்ப முடியாமல் விழித்தாள் பிரீத்தி.
“அத்தை என்னோட அம்மா கிட்ட சொல்லலை. நான் போய் அவங்க கிட்ட பேசினேனா அப்போ சொன்னாங்க”
“அத்தையா???”
“உங்கம்மாவை நான் வேற எப்படி கூப்பிட முடியும் சொல்லுங்க??? அவங்க தான் உங்களை நேரா பார்த்து பேசி மனசை மாத்த ட்ரை செய்ய சொன்னாங்க! என்னை அவங்களுக்கு பிடிச்சிருச்சாம்!”
அவளையும் அறியாமல் புன்னகைத்தாள் பிரீத்தி!