“போர்ன்விட்டா வேணும்னு சொல்லி இருந்தா, நான் போட்டுக் கொடுத்திருப்பேனே...”
“ஹுஹும், எனக்கு இப்படி சாப்பிட தான் பிடிக்கும்”
“என்ன பழக்கம் இது எல்லாம்?”
“நீயும் ட்ரை செய்து பாரேன்!!!”
“என்னது??? நான் என்ன குழந்தையா???”
“கம் ஆன் பிரீத்தா! ட்ரை இட்!” சொல்லியப்படி ஒரு ஸ்பூன் போர்ன்விட்டா எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்...
“ச்சேச்சே... இதெல்லாம் என்ன பழக்கம்...???” என்று அலுத்துக் கொண்டாலும் அந்த போர்ன்விட்டா அனுபவம் அவளுக்கும் புதுமையாகவே இருந்தது...!
“சும்மா தானே சொல்ற??? உனக்கு பிடிச்சிருக்குன்னு உன் முகம் சொல்லுதே... இன்னுமொரு ஸ்பூன்...” என்று அவன் கேட்கும் போது, பிரீத்தாவை காப்பாற்றுவதுப் போல விஷ்வாவின் போன் ஒலித்தது!
“ஹேய் மாம், சொல்லுங்கம்மா”
“...”
“ஹையையோ, மறந்துட்டேன்ம்மா. நான் செய்றேன்”
போனை கட் செய்து விட்டு, ‘ஷிட்’ என்றான் விஷ்வா.