“சாரி டியர்”
பிரீத்தா பதில் சொல்லாமல் அவளுடைய மொபைலில் என்னவோ செய்தாள்!
“உன் அக்கவுண்ட்க்கு மனி ட்ரான்ஸ்ஃபர் செய்துட்டேன்! நீ இப்படி ஏதாவது செய்வேன்னு தெரியும். அதான் எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்சம் மனி ரிசர்வவ்ல வச்சிருந்தேன்”
“பிரீத்தான்னா, சும்மாவா!!!!!” என்ற விஷ்வா, ஒருவேளை பிரீத்தா உதவாமல் போய் இருந்தால் என்ன செய்திருப்பான் என்று யோசித்துப் பார்த்தான்!!!
வேறென்ன, கடன் வாங்கி இருப்பான்!!! இப்போது மட்டுமா??? எத்தனையோ முறை அதை தான் செய்திருப்பான்!!!!
பிரீத்தாவை கல்யாணம் செய்த பிறகு, அவளுடைய பொறுமையான ஆனால் தெளிவான அணுகுமுறையால் வாழ்க்கை இலகுவாக மாறி இருப்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது!
அவன் பார்த்துக் கொண்டே இருக்க, சமையலறைக்கு சென்ற பிரீத்தா ஏற்கனவே உணவு ரெடியாக இருப்பதை பார்த்து கணவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்!
“நான் தான் ரெடி செய்தேன்” என்றான் விஷ்வா.
குழந்தைகள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்ததால், “குட்” என்று மட்டும் சொன்ன பிரீத்தா பார்வையை சின்க் பக்கம் திருப்பினாள்!
சட்டென்று கோபம் வந்தது!
மூன்று சின்னத் தட்டுகளில் போர்ன்விட்டா சாப்பிட்டு, அப்படியே காய்ந்து போய் இருந்தது!
“யாரு வேலை இது???? போர்ன்விட்டாவை இப்படி செய்யாதீங்கன்னு எத்தனை தடவை