(Reading time: 5 - 9 minutes)

    தன்னை மத்திய அரசிடம் காட்டிக் கொடுத்து சிறையில் தள்ளிவிட்டு, தான் சி.எம்.ஆகப் பார்க்கிறானோ என பயம்!

    இவனை எப்படி வெட்டி விட்டு செல்லாக்காசு ஆக்குவது என யோசித்தார்.

   அமைச்சர் வீரப்பனும் இதேபோல, தான் சி.எம்.ஆக மத்திய அமைச்சர்களின் துணையை நாடிப் பெற்றான்.

     இரு முனைகளிலும் தகுந்த சந்தர்ப்பம் வருவதற்கு காத்திருந்தனர்!

      சி.எம். அன்றிரவு தன் வீட்டில் உறக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தார்.      " இத பாருங்க! எதையோ நினைச்சு, தூங்காம, உடம்பு கெட்டுப் போயிடும், உங்க கவலையை எங்கிட்ட இப்ப கொட்டிடுங்க, பாரம்குறையும் சொல்லுங்க!"

 " வீரப்பன் சூழ்ச்சியிலே மத்திய அரசு என்னை கைது செய்ய தயாராயிட்டாங்க! எந்த நேரமும் ஏதாவது பழி போட்டு என்னை இறக்கிட்டு கைது பண்ணிடுவாங்க! என்ன செய்வது?"

" இவ்வளவுதானே? சில நாள் உள்ளே இருந்துட்டு வாங்க! அதுக்குள்ளே, மத்திய அரசு தேர்தல்லே தோற்று, வேற கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கும். அப்ப, வீரப்பன் உள்ளே போய், நீங்க வெளியே வந்து மறுபடியும் சி.எம். ஆயிடலாம். இது அரசியல்லே சகஜம்தானே!"        " அது சரி, இப்ப நான் தப்பிக்க முடியாதா?"        " ஐயோ, கடவுளே! நான் சொல்றது உங்களுக்கு புரியலே, அந்த வீரப்பன் உங்க உயிருக்கு உலை வைக்க, திட்டமிடலாம், கேட்டால், பயங்கரவாதிகள் மேலே பழி போடுவான், பதவி வெறியிலே எதையும் செய்ய துணிவான், அதனாலே, நீங்க சிறையிலே பாதுகாப்பாக இருந்துட்டு வாங்க! இப்ப நிம்மதியா தூங்குங்க!"

  மனைவியின் சொல் கேட்டு, சி.எம். உறங்கினார்.

  மறுநாள் முதல், அவர் எந்த பயமோ கவலையோ இன்றி, சிரித்த முகத்துடன் பணியாற்றினார். வீரப்பனிடம் சகஜமாகப் பழகினார்.

 வீரப்பனுக்கு சந்தேகம் வந்தது. ஏதோ நடந்திருக்கு, சி.எம். தைரியமா இருக்காரு அப்படின்னா, மத்திய அரசு அவர் பக்கம் சாய்ந்திருக்கு!

 அப்ப, நாம நம்ம ரூட்டை மாற்றிடுவோம்! மத்திய அரசை கவிழ்க்க சதி செய்வோம்......

   அரசியல்வாதிகளின் பொது எதிரி, தீவிரவாதிகள்! நண்பர்களும் அவர்களே! இடைத்தரகர்கள் ஏராளம்!

  நாட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது, அன்றாட பிரச்னைகளை சந்திக்கவே திண்டாடும்போது, இதற்கேது நேரம்?

     மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மட்டுமே அறிவர்!

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.