(Reading time: 9 - 18 minutes)

திரும்பினர், பாட்டி!

"என்ன நடந்தது என்று உங்களுக்கு விளங்காமல் செய்தது, எது தெரியுமா?

 நாம் சொல்வதை நம் மகள் கேட்கவில்லையே எனும் தன்முனைப்பு, ஈகோ உங்கள் சந்தோஷத்தை விழுங்கிவிட்டது.

அதனால்தான், நம்ம பெரியவங்க சொன்னாங்க, எது நடந்தாலும், அதை அவர் செய்தார், இவர் செய்தார் என நினைக்காமல் கடவுள் செய்தார் என ஏற்று அடங்கி நடக்கவேண்டும்.

'அவன் அன்றி ஓரணுவும் அசையாது' ஒப்புக்கொள்வது விவேகம்!

 அதை ஒப்புக்கொள்ள மறுத்தால், கடவுளுக்கு எந்த நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் என்பதை உணர்ந்து விட்டீர்கள்!

 கடந்ததை கனவாக நினைத்து மறந்து, நிகழ்கால நடப்பை கவனியுங்கள்!

 தேனீ-அற்புதன் நல்லா இருக்காங்களா இல்லையா? உங்களுக்கு கிடைக்காத சந்தோஷம் அவளுக்கு கிடைத்துவிட்டது! காரணம், அற்புதனுக்கு செய்த குறையை, கடவுள், தேனீ வழி யாக சரிசெய்து விட்டார்!

உங்கள் சுயமரியாதை நினைவை மறந்து, அவர்கள் இருவரையும் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள், அதற்கு உதவ என் பேரன் முருகன், இல்லை இல்லை, எம்பெருமான் முருகன், வழி காட்டுகிறான்.

  முருகனின் திருமணம் நிச்சயம் செய்து, அதற்கு அவர்களை அழையுங்கள்! மீண்டும் இந்த வீட்டில் ஒளி பிறக்கட்டும். பாட்டியின் ஆசையைக் காரணமாக வைத்து சரிசெய்யுங்கள்!

உங்களுக்கு துணையா முருகன் இருப்பான்!"

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.