இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் ஒரு கேள்விக்கு, சரியான பதிலைச் சொன்னால், உன் நாடு உனக்கே!”
கேள்வி : ஒரு பெண், தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு, விடை சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்.
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை.
கடைசியாக சிலர் சொன்னதால், ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள் : விடை சொல்கிறேன். அதனால், அந்த மன்னனுக்குத், திருமணம் ஆகும். உனக்கு உன் நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்”.
சூனியக்காரக் கிழவி, விடையைச் சொன்னாள்!
"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளை, தானே எடுக்க வேண்டும் என்பதே, ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது.
இவனுக்கு நாடும் கிடைத்தது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.